மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:07 PM | Best Blogger Tips
1. சில்லிடும் கால்கள்
காரணம் - மதுக் கிண்ணத்தைத் தலைகீழாக பிடித்திருக்கிறீர்கள்....நீங்கள் ஊற்றும் மது உங்கள் காலில் விழுவதால் இது நேரிடுகிறது
நிவாரணம் - கிண்ணத்தின் திறந்த பகுதி மேல் நோக்கி வரும்வரை திருப்பி பிடிக்கவும்

2. உங்கள் எதிரே இருக்கும் சுவர் முழுக்க கண்ணைப் பறிக்கும் விளக்குகள்

காரணம் - ஏன்னா நீங்க தரையில மல்லாந்து கிடக்கிறீங்க

நிவாரணம் - உங்கள் உடலை தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு திருப்பி நேராக நிற்கவும்

3. தரை மங்கலாகத் தெரிகிறது

காரணம் - காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்

நிவாரணம் - உடனடியாக உங்கள் அபிமான திரவத்தால் கோப்பையை நிரப்புங்கள்

4. தரை நகர்கிறது

காரணம் - உங்களை இழுத்துக் கொண்டு போகிறார்கள்

நிவாரணம் - குறைந்தபட்சம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்றாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

5. உங்கள் குடும்பம் பார்க்க விசித்திரமாக இருக்கிறது அல்லது உங்கள் குடும்பம் உங்களை விசித்திரமாக பார்க்கிறது

காரணம் - தப்பான வீட்டில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - உங்கள் வீடு எங்கே என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

6. அறை ரொம்ப ஆட்டம் காண்கிறது, கூட இருக்கும் எல்லோரும் வெள்ளை நிற உடையில், ஒரே இசை திரும்பத் திரும்ப ஒலிக்கிறது

காரணம் - நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - அசையாதீங்க பாஸ்.....அவிங்க பார்த்துப்பாங்க