சதுர்த்தியன்று விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் ??

மணக்கால் அய்யம்பேட்டை | AM 2:02 | Best Blogger Tips

Photo: சதுர்த்தியன்று விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் ??

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். மண் பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும்.  புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம். வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகல பாக்கியத்தையும் அடையலாம். உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம். வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம். பசுஞ்சாணியால் பிள்ளையார் செய்து பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும். வெண்ணெயில் பிள்ளையார் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும்.

நிவேதனம் நமக்கு சொல்வது என்ன: விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது என்ன என்பதை தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. 

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். மண் பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும். புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம். வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகல பாக்கியத்தையும் அடையலாம். உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம். வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம். பசுஞ்சாணியால் பிள்ளையார் செய்து பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும். வெண்ணெயில் பிள்ளையார் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும்.

நிவேதனம் நமக்கு சொல்வது என்ன: விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது என்ன என்பதை தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
 
Via மெய்ப்பொருள்