சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:56 | Best Blogger Tips
Image result for சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா
சித்திரை மாதம் வருடத்தின் முதல் மாதம் ஆகும். சித்திரை மாதம் இந்த சு ரிய பகவான் மேஷத்தில் உச்சம் பெற்றுக் காணப்படுவார்.
இந்த சமயத்தில் குழந்தையின் ஜாதகத்தில் சு ரியன் உச்சத்தில் இருக்கும். எப்படி சு ரியன் யாருக்கும் தலை வணங்காமல் இருக்கிறாரோ அதே மாதிரி இக்குழந்தைகளும் யாருக்கும் தலை வணங்க மாட்டார்கள்.
மேலும் சு ரியன் உச்சம் பெற்றுத் திகழ்வதால் தான் என்ற கர்வம் இருக்கும். அதிகாரம் செய்யும் தொழிலை சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தைகள் விரும்புவர். எனவே வாழ்க்கையில் எந்த விஷயங்களிலும் அலட்சியமாய் இருப்பார்கள்.
எப்போதும் ஏதாவது பெரிய காரியத்தை சாதிக்கின்றேன் என்று கர்வத்தில் நடைமுறை வாழ்க்கை அவர்களுக்கு சரியாக நடக்காது. எனவே தான் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சீரழியும் என்று சொல்லி வைத்தார்கள்.
ஆனால் அதே சமயம் சித்திரையில் மற்ற காரியங்களைச் செய்யலாம். புதிதாக தொழில் துவங்குவது, தானங்கள் செய்வது, புதுமனை புகுதுல் போன்று எதையும் செய்யலாம். உயிரணுக்கள் தொடர்பான சிலவற்றை மட்டும்தான் செய்யக் கூடாது என்கிறார்களே தவிர ஒட்டுமொத்தமாக எதையுமே செய்யக் கூடாது என்று சொல்வதில்லை.
Image result for சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா

 நன்றி இணையம்