ஆன்மிகம். மிகவும் உயர்ந்த சொல் இது. ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக்
கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் கோவிலுக்குப் போனால் இது கிடைக்கும்" என்று,
மக்களைத் தூண்டுவதாக இருக்கிறது.
* கோவில்களிலோ, கோஷ்ட தெய்வங்களின் திருவடிகளில், விரல்களின் நடுவில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்துவதும்; கோவிலின் உள்ளே சன்னிதிகளில் எல்லாம் விழுந்து வணங்குவதும்; சண்டிகேஸ்வரரின் சன்னிதியில், வேட்டி - புடவை ஆகியவற்றில் இருந்து நூல்களைப் பிய்த்துப் போடுவதுமாக - வழிபாட்டு முறைகளும் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399

*
பிரதோஷத்தன்றோ, நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு, கனகச்சிதமாக பக்தி வெளிப்படுகிறது. இவையெல்லாமே தவறு! கோவில் அர்ச்சகராக இருந்தாலும் பூஜை நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் விக்கிரகங்களைத் தொடக்கூடாது.
* இவையெல்லாம் ஆன்மிகம் அல்ல. ஏற்கனவே போட்டு வைத்த நல்ல வழி இருக்கும்போது, நாமாக ஏன் புதுப்புதுப் பாதைகளை உருவாக்கி, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? முன்னோர் காட்டிய அந்தப் பாதையைப் பார்க்கலாம் வாருங்கள்! முன்னோர்களின் அந்தப் பாதை, அவர்களின் அனுபவத்தில் உண்டானது. அவர்களின் அனுபவங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து அனுபவிக்கலாம்.
* கோவிலுக்குச் செல்லும் போது செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், கோவிலின் உள்ளே செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், நமது ஆகம நூல்கள் விரிவாகவே கூறுகின்றன.
* அவற்றை உணர வேண்டியது நமது கடமை. உணர்ந்து செயல்பட்டால்தான், பலன் கிடைக்கும். ஆனால்...
* இப்போது, உதாரணமாக - என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால், கைபேசிகளில் (செல் ஃபோன்களில்) சிம் (SIM) கார்டே போடாமல், பேச முயற்சிக்கிறோம். நடக்குமா? அதுபோல, ஆலயத்தில் நாம் செய்யவேண்டியவைகளைச் செய்தால்தானே பலன் கிடைக்கும்?
* கோவிலை நெருங்கியதும், கோபுரத்தின் அருகே (கீழே) நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். ஆனால் இந்த நியதி பெண்களுக்குப் பொருந்தாது. ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட வேண்டும். அதற்கு மேல் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிடக் கூடாது.
* அடுத்து, கோவிலின் உள்ளே நுழைந்ததும், கொடி மரத்தின் அருகில் விழுந்து கும்பிட வேண்டும். கோவிலின் உள்ளே நாம் விழுந்து கும்பிட வேண்டிய இடம் இது ஒன்றுதான்.கொடிமரத்தைத் தாண்டி, உள்ளே உள்ள எந்தச் சன்னிதியிலும் விழுந்து கும்பிடக் கூடாது.
* அடுத்து, கொடிமரத்தைத் தாண்டியதும் பிராகார வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வரும்போது, அவசர அவசரமாக ரயிலைப் பிடிக்கும் அவசரத்தோடு வரக்கூடாது. இதற்கும் முன்னோர்கள் ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார்கள். அதாவது... நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண், கால்களில் விலங்கிட்டு, கைகளில் ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயுடன் நடந்து வரும்போது, சொட்டு கூடச் சிந்தாதபடி மெளனமாக நடந்து வருவதைப்போல, வலம் வர வேண்டுமாம்.
* இதற்கு முக்கியமான காரணம்... கோவில் பிராகாரங்களில் குறுக்கும் நெடுக்குமாகக் கற்களைப் பாவியிருப்பார்கள்; பதித்திருப்பார்கள். அந்தக் கற்கள் சற்று சொரசொரப்பாக, சிறுசிறு முட்கள் கொண்டதைப் போல இருக்கும்.அக்கற்களின் மேல் கால்களைப் பதித்து மெள்ளமாக நடந்து வரும்போது, அக்கு பிரஷர் போல நரம்புகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம் கிடைக்கும்.இதன் காரணமாகவே, பிராகாரங்களில் மெள்ளமாக நடந்து வலம் வரவேண்டும் என்றார்கள்.
* கோஷ்ட தெய்வங்களின் கால் விரல்களில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தக் கூடாது.
* அடுத்து; சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலர், வேட்டியில் இருந்தும் புடவையில் இருந்தும் நூல்களைப் பிய்த்து, சண்டிகேஸ்வரர் மீது போடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்களைக் கேட்டால், "இவ்வாறு செய்தால், புது ஆடை கிடைக்குமாம்" என்று பதில் வருகிறது. அது உண்மைதான்! ஒரு வேட்டியில் இருந்தோ புடவையில் இருந்தோ, தினந்தோறும் நூல் இழைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தால், வேட்டியும் புடவையும் போய் விடும். புது ஆடை வாங்கித்தானே ஆகவேண்டும்?
* சண்டிகேஸ்வரர் சன்னிதியில், இன்னொரு கூத்தும் தினந்தோறும், அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்த்ததைப் போல, நூல் கிழித்துப் போடுவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம்...
பலர், சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலமாகக் கைகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்டால், "இது செவிட்டு சாமி சார்! இப்படிப் பலமாகக் கை தட்டினால்தான், இது விழித்துக் கொள்ளும்" என்று பதில் வருகிறது. நல்ல வேளை! யாராவது நன்கொடையாளர்களைப் பிடித்து (ஸ்பான்ஸர்), காத்து கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்தாமல் விட்டார்களே!
* பெரிய புராணத்தில் வரும் சண்டிகேஸ்வரர் வரலாற்றின்படி, சிவன் சன்னிதியில் அளிக்கப்படும் பிரசாதங்களை (விபூதி - குங்குமம் முதலானவற்றை) சண்டிகேஸ்வரர் சன்னிதியில் சமர்ப்பணம் செய்து, "தரிசனப் பலனைத் தந்தருளுங்கள்" என வேண்டி, அதன்பின் அவற்றை நாம் அணிய வேண்டும்.
* அடுத்து; பிரதோஷத்தன்று முறைப்படி சிவ தரிசனம் செய்தால், கடன் தொல்லைகள் நீங்கும்; துயரங்கள் விலகும் என நம் ஞான நூல்கள் கூறுகின்றன.அது என்ன முறைப்படி? அப்படியென்றால், இப்போது நடப்பவை சரியில்லையா? சரியில்லைதான்! பிரதோஷத்தன்று நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு அதன் காதில் முணுமுணுப்பதும், முழுமையாக அப்பிரதட்சிணமாக (எதிர்வலம்) வருவதும், பல கோவில்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
* இன்னும் சிலர் நந்தியின் முன்னால், காப்பரிசி இருப்பதைப் பார்த்துவிட்டு, அவர்களும் காப்பரிசியைக் கொண்டு வந்து நந்தியின் முன்னால் போடுகிறார்கள்.காப்பரிசியை நந்தியின் முன்னால், குருக்கள் ஏன் போட்டு வைத்தார்? பிரதோஷத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன? - என்பதைப் பார்க்கலாம்.
*இது, பிரதோஷத்தன்று மட்டும் செய்ய வேண்டிய வழிபாட்டு முறை!
* வழக்கப்படி நாம் செய்யக்கூடிய முறையை விடுத்து, நந்தியின் பின்னால் நின்று அதன் இரு கொம்புகளின் வழியாக, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.அதன்பின், வழக்கப்படி வலம் வராமல், எதிர்வலமாக வந்து, அபிஷேகத் தீர்த்தம் வரும் வழி அல்லது சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை சென்று திரும்ப வேண்டும்.சில கோவில்களில், அபிஷேக தீர்த்தம் வரும் வழியை மூடி வைத்திருப்பார்கள். அங்கு, சண்டிகேஸ்வரர் சன்னிதியை எல்லையாக வைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு திரும்பி வந்து, நாம் வழக்கப்படி வலம் வரும் வழியில் சென்று, அந்தப் பக்கமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை வந்து அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* இந்த முறைப்படி, மூன்று முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வலம் வருவது, 'சோம சூத்ரப் பிரதட்சிணம்' அல்லது 'சோம சூக்தப் பிரதட்சிணம்' எனப்படும். (முழுமையாக எதிர்வலம் வரக்கூடாது) இது; ஆலகால விஷத்தில் இருந்து காப்பாற்றுமாறு தேவர்கள் கிளைக்குச் சென்று வேண்டிய போது, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஓடியதைக் குறிக்கும்.
* அடுத்து - காப்பரிசியைப் பற்றிய தகவல்;
* ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காமல், தேவர்கள் எல்லாம், சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைத் தன் திருக்கரங்களில் ஏந்தி உண்டார். (தெரிந்த தகவல் தான் இது) அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நந்தி பகவானுக்கு அகங்காரம் உண்டாயிற்று. அவர், "ஹ! என்ன இது? ஒன்றுமில்லாத இந்த விஷயத்திற்குப் போய், தேவர்கள் இந்தப் பாடு படுத்துகிறார்கள்! இதெல்லாம் ஒரு விஷமா? இதற்குப் போய், பயப்படலாமா? நான் பயப்படுகிறேனா என்ன?" என்று மிகவும் அலட்சியமாக நினைத்தார்.அது, நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவனைப் பார்த்து, கரையில் இருப்பவன், "என்னப்பா இது? இதற்குப் போய்க் கவலைப் படலாமா? நீ இன்னுமா நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை? நான் உன்னைப் போல் கவலைப் படுகிறேனா என்ன?" என்று கேட்பதைப் போல இருந்தது.
* நந்தியின் உள்ளத்தில் எழுந்த ஆணவம், சிவபெருமானுக்குத் தெரிந்தது. அதனால் சிவபெருமான் உடனே நந்தியை அழைத்து "நந்தி! இதோ இந்தக் கையால்தான் நஞ்சினை வாங்கி உண்டேன். இந்தா! இந்தக் கையை முகர்ந்து பார்!" என்று தன் கையை நீட்டினார்.நந்தி பகவானும் அதன்படியே, சிவபெருமானின் அந்தக் கையை முகர்ந்து பார்த்தார்.அதே விநாடியில்... நந்தி பகவான் விஷத்தின் வேகம் தாங்காமல், தலைசுற்றி மயங்கிக் கீழே விழுந்தார்.
அதைப் பார்த்து அனைவரும் திடுக்கிட்டார்கள்.அப்போது சிவபெருமான் பார்வதியிடம், "தேவி! இந்த நந்திக்கு நீ காப்பரிசியைச் செய்து கொடு!" என்றார்.பார்வதி உடனே காப்பரிசியைத் தயாரித்து , நந்திக்குக் கொடுத்தாள்.விஷவேகம் தணிந்து நந்தி பகவான் எழுந்தார். அவரிடம் இருந்த ஆணவம் முழுவதுமாக நீங்கியிருந்தது.
அதை நினைவு கூருமுகமாகவே, அர்ச்சகர் நந்திக்கு முன்னால் காப்பரிசியைச் சமர்பிக்கிறார்.ஆணவ நீக்கத்தையே, காப்பரிசி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி குறிக்கிறது. இந்த சோமசூத்ர வழிபாடு அல்லது சோமசூக்த வழிபாடு என்பது, பிரதோஷத்தன்று மட்டுமே செய்ய வேண்டும். மற்றைய நாட்களுக்கு இது பொருந்தாது.
* ஆலயங்களில் விபூதியோ - குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் வாங்க வேண்டும். வாங்கிய உடன், அவற்றை இடது கையில் போட்டுக் கொள்ளக் கூடாது. இடது கையில் ஒரு தாளை வைத்து, அதில் மாற்றிக் கொள்ளலாம்.
* ஆலயங்களில் சுவாமிக்கும் வாகனத்திற்கும் நடுவில் போகக் கூடாது.
இவ்வாறு உள்ள வழிமுறைகளை அறிந்து, அதன்படி நடப்பதே ஆன்மிகத்தை அடைய வழி வகுக்கும்.
** அப்படியென்றால், இவ்...வளவு நேரம் பார்த்தது ஆன்மிகம் இல்லையா? இல்லை! அவையெல்லாம் வழிமுறைகள் மட்டுமே. அவற்றைச் செய்வதனால் உண்டாகும் பலன்தான் ஆன்மிகம்.

இகம் - பரம் என்று இரண்டு சொல்கிறோமல்லவா? இவற்றில் இகம் என்பது, இகலோகத்திலேயே அதாவது இந்த உலகில் நாம் இருப்பதையே குறிக்கும். பரலோகம் என்பது மேலுலகைக் குறிக்கும். இதன்படி;ஆன்ம + இகம் - ஆன்மிகம் என்பது, இந்த உலகில் நாம் இருக்கும்போதே, ஆன்ம அமைதி - ஆன்ம சந்தோஷம் - ஆன்ம நிம்மதி என்றெல்லாம் சொல்கிறோமே - அதை அடைவதே உண்மையான ஆன்மிகம்.