திருமண_மந்திரத்தின்_உண்மை_பொருள்விளக்கம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:46 PM | Best Blogger Tips
Image result for திருமண மந்திரத்தின்
மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்
திருமணத்தின்போது சொல்லப்படும் மந்திரங்கள் நம்மை நம் குலப்பெண்களை இழிவாக்குவதாக பெரியார் சொல்லியிருக்கார் னு அதற்கான அர்த்தங்களாக அவர்சொன்னதை அவரை பின்பற்றிய அறிவுஜீவிகளான அலைவேக்காட்டு (வீரமணியைப் போன்ற ஊர்தாலி அறுப்பவன் என்றாலே தெரிந்துவிடுமே) சொன்னதால சிறுவயதிலிருந்தே அதன்மீதொரு வெறுப்பு.
ஆனாலும் அதன் உண்மை விளக்கம் அப்படித்தான் இருக்குமா? என எனக்குள்ளேயே ஒரு கேள்வி ஆழ்மனதில் அடியொற்றியே வந்தது. சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே அதன் உண்மைத்தன்மையை அடுத்தவன் கூறுவதையெல்லாம் அப்படியே நம்பாமல் நமக்கான அறிவுத்தேடலின்மூலம் நாமே கண்டுகொள்ள முடியுமென ஆராய்ந்ததன் விளைவு ……
அந்த அற்புத மந்திரத்தின் உண்மையான விளக்கம் இதோ.
''சோமஹ ப்ரதமோ விவேத 
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
-ரிக்வேதம் 10.85, 40.41.
இதன் பொருள்:
"
முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1.
ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
Image result for திருமண மந்திரத்தின்
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.
ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)
பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.
தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.
வடமொழி தெரிந்தவர்கள் மட்டுமல்ல ப்ராமணர்களும் இதே மந்திரங்களைத்தான் தங்கள் மகளின் திருமணத்திலும் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
நம் முன்னோர்களின் வேங்களையும் சாத்திரங்களையும் அதன் உண்மைத்தன்மையோடு சரிவரப் படித்தறியாமல் விமர்சிக்கும் நோக்கோடு நுணிப்புல்லை மேய்ந்துவிட்டு புதுப்புது அர்த்தங்களை மக்களிடம் மரப்பிவரும் இவர்களைப்போன்ற ஈனப்பிறவிகளை திக வின் போர்வைக்குள்ளிருக்கும் மாற்றுமதப்பரப்பாளிகளை என்னென்று சொல்வதோ.?? யாமறியேன் பராபரனே.
Image result for திருமண மந்திரத்தின்
Rasa Dhuriyan
காவியத் தலைவன்