Success Fundamentals 3!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:26 PM | Best Blogger Tips
நம்பிக்கை :

போர் மற்றும் அறிவியல் உலகில் சாதிக்க இயலாதது என்று அவநம்பிக்கை கொண்ட மற்றும் பலவீனமான இதயம் கொண்டவர்களால் எண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான வெற்றிகளையும் நம்பிக்கை பெற்றுத்தந்துள்ளது.

இதுதான் ஸ்பெயின் நாட்டு அரசவையின் குற்றச்சாட்டுகளையும், கேலிப்பேச்சுக்களையும் ‘கொலம்பஸைத்’ தாங்கிக் கொள்ளச் செய்தது.

இது அவரது மாலுமிகள் அவரை எதிர்த்த போதும், தெரியாத கடல் பகுதியில், சிறிய கப்பலில் கொலம்பஸ் அவர்களின் தயவில் இருந்த போதும் அவரைத் தனது குறிக்கோளை உறுதியாக பற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் தனது தினக்குறிப்பேடில் ‘இன்று நாங்கள் எங்களின் பாதையின்படி மேற்கு திசைநோக்கிப் பயணித்தோம்’ என்று எழுத வைத்தது.

நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் தன்னம்பிக்கை மற்றும் நீங்கள் ஆரம்பித்த செயலைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை வைத்துதான் வாழ்க்கையில் உங்கள் சாதனை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆரம்பத்திலேயே நீங்கள் உங்களை ஒரு தோல்வியாளராக நினைத்துவிட்டால், நீங்கள் எந்த நிலையையும் அடைய முடியாது.

மேலும், நீங்கள் எடுத்துக்கொண்ட எந்தப் பணியிலும் வெற்றி பெற முடியாது.

 


 
Thanks to FB  Thannambikkai