பேச்சு !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:10 | Best Blogger Tips
அவர் ஒரு மிகப்பெரிய ஜென் துறவி. அற்புதமான பேச்சாளரும் கூட. அவருடைய உபதேசங்களைக் கேட்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

ஒருநாள், இளைஞன் ஒருவன் அந்தத் துறவியைச் சென்று சந்தித்தான். ‘குருவே, உங்களிடம் நான் சீடனாகச் சேர விரும்புகிறேன்’ என்றான்.

‘எதற்கு?’

‘எனக்கும் உங்களைப் போல் நன்றாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை’ என்றான் இளைஞன்.

துறவி யோசித்தார். ‘அதற்கு ஏழெட்டு வருடம் ஆகுமே. பரவாயில்லையா?’,

‘ஏழெட்டு வருடமா?’ இளைஞன் அதிர்ந்து போனான். ‘அவ்வளவு நாள் என்னால் காத்திருக்க முடியாது. நான் கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தினமும் கொஞ்சம் கூடுதலாக நேரம் ஒதுக்கி எனக்குச் சொல்லிக் கொடுத்தால், சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுவேன்’.

‘செய்யலாம். ஆனால், அதற்குப் பதினைந்து வருடம் ஆகும்’ என்றார் துறவி.

கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு கதை, மார்க் ட்வைன் வாழ்க்கையிலும் நடந்ததாகச் சொல்வார்கள்.
மார்க் ட்வைனின் நண்பர் ஒருவர் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருந்தார். ‘நீங்கள்தான் அதைத் திறந்து வைத்துப் பேச வேண்டும்’ என்று மார்க் ட்வைனைக் கேட்டுக் கொண்டார் அவர்.

‘நான் எவ்வளவு நேரம் பேசணும்?’
‘அரை மணி நேரம்.

‘அப்படியா? எனக்கு 2 வாரம் டைம் கொடுங்க. நல்லா தயார் செஞ்சுகிட்டுப் பேச வர்றேன்.

நண்பர் அதிர்ந்து போனார். அரைமணி நேரப் பேச்சுக்காக, இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமா? சட்டென்று இறங்கிவந்தார். ‘நீங்க பத்து நிமிஷம் பேசினாக்கூடப் போதும்’.

‘நல்லது. அப்படீன்னா எனக்குத் தயார் செஞ்சுக்க 4 வாரம் தேவைப்படும்’ என்றார் மார்க் ட்வைன்.

 


Thanks to FB  Thannambikkai