ஒரு
ஜென் ஆசிரியர் தனது ஐந்து சீடர்கள் சைக்கிள்களில் சந்தை சென்று
திரும்புவதை கண்டு "ஏன் நீங்கள் சைக்கிள்களில் சவாரி செய்கிறீர்கள்?" என்று
விசாரித்தார். அதற்கு ஐந்து பேரும் வெவ்வேறு பதிலை குருவிடம் சொன்னார்கள்.
அதில் முதல் சீடன் "நான் வாங்கி வரும் உருளைக்கிழங்குகளை கையிலோ முதுகிலோ சுமப்பதை காட்டிலும், சைக்கிளில் அதன் கூடையில் வைத்து வருவது சுலபம் என நினைத்து, மேலும் நான் சைக்கிள் ஓட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குருவிடம் சொன்னான். அதற்கு குரு அவனிடம் "நீ மிகவும் சுறுசுறுப்பானவன், நீ வயதானபின் என்னை போலவே கூன் போடா மாட்டாய்" என்றார்.
இரண்டாவது சீடன் குருவிடம் "நான் இயற்கையை ரசிக்க சைக்கிள் சவாரி செய்தேன்" என்றான். குருவும் அதற்கு "உன் கண்கள் திறந்துள்ளது, அதனால் நீ உலகத்தை காண்கிறாய்" என்றார்.
பின் மூன்றாவது சீடன் "நான் என் சைக்கிள் சவாரி செய்யும் போது மந்திரத்தை ஓதிக் கொண்டே சென்றேன்" என்றான். அதற்கு குரு மூன்றாவது சீடனை "உனது மனதில் எண்ணங்கள் எளிதாக, புதிய சக்கரங்கள் போல சூழலும்" என்று பாராட்டினார்.
பின்னர் நான்காவது சீடன் "நான் எல்லா உயிரினங்களின் நல்லிணக்கத்தில் வாழ ஆசை கொண்டு சைக்கிளில் சவாரி செய்தேன்" என்றான். குருவும் அதற்கு அவனிடம் "நீ தீங்கு இல்லாத ஒரு தங்கமான பயணத்தை மேற்கொள்கிறாய்" என்று மகிழ்ந்து கூறினார்.
பிறகு ஐந்தாவது சீடன் குருவிடம் "நான் சைக்கிள் சவாரி செய்வதற்காக, என் சைக்கிளில் நான் சவாரி செய்தேன்" என்றான். அதற்கு குரு, அந்த சீடனின் முன் வணங்கி 'நான் உங்கள் சீடனாவேன்' என்று கூறினார்.
ஏனெனில் இந்த நான்கு சீடர்களும், குருவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று எண்ணி, மனதில் இருக்கும் உண்மையை மறைத்து, வித்தியாசமாக பதிலை அளித்தார்கள்.
ஆனால் கடைசியில் சொன்ன சீடன் "சைக்கிளில் எதற்கு சென்றாய் என்று கேட்டதற்கு, அவன் சவாரி செய்வதற்காக சென்றேன்" என்று மனதில் இருக்கும் உண்மையை கூறியதால், குரு அவருடைய சீடனுக்கு சீடனாக ஆனார்.

Thanks to FB Thannambikkai