துறவி ஒருவர் தன் சீடர்களுக்கு "வாழ்க்கை என்றால் என்ன?" என்பதை தெளிவாக சொல்லிக் கொடுக்க, சீடர்களை அழைத்தார்.
அப்போது அவர்களிடம் உதாரணத்திற்கு ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன் எவ்வாறு கஷ்டப்பட்டு வருகிறது என்ற ஒரு விஷயத்தை அவர்களுக்கு காண்பிக்க இருந்தார்.
அதனால் அவர்களிடம் பட்டாம்பூச்சியின் கூட்டினை காண்பித்து, இன்னும் சில நேரங்களில் இந்த பூச்சி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியே வந்துவிடும் என்றும் அதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் கூறி மடாலயத்திற்குள் சென்று விட்டார்.
அதைப் பார்த்த ஒரு சீடன், அது ஓட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லோசாக உடைத்துவிட்டான். ஆனால் அந்த பட்டாம் பூச்சி வெளியே வந்து இறந்துவிடுகிறது. இதனால் அவன் அந்த பட்டாம் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகிவிட்டான்.பின் துறவி வந்தார். ஊட்டை உடைத்த மாணவன் அழுதுக் கொண்டிருந்தான். எதற்கு அழுகிறாய் என்று பேட்ட போது, நடந்ததை சொன்னான்.
பின் குரு அவனிடம் பட்டாம்பூச்சி அத்தகைய போராட்டத்தை அனுபவிக்கக் காரணம், அதன் சிறகுகள் நன்கு வளர்வதற்கும், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் தான் காரணம் என்று சொன்னார்.
அதேப்போல் தான், நாமும் நமது வாழ்வில் இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும், அதற்காக மனமுடைந்துவிடக் கூடாது. போராட்டங்களை சந்திக்க சந்திக்கத் தான் நமது மனமும் வலுவடையும். பின் எதற்கும் துணிச்சலோடு போராடி, வாழ்வில் முன்னேறலாம் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நல்ல அறிவைப் புகுட்டினார்.

Thanks to FB Thannambikkai