தங்கமா அல்லது ஈக்விட்டியா- எது சிறந்தது?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | Best Blogger Tips
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் ஈக்விட்டிக்களுக்கு பதிலாக தங்கத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். தங்கம் பல வருட காலமாக ஒரு நிகரற்ற முதலீடாக விளங்கி வந்துள்ளது என்று சுட்டிக்காடும் சிலர், அதன் நீண்ட கால நல்வாய்ப்பை ஒப்பிடுகையில் தற்போதைய சரிவை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் சிலரோ, தங்கத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

பென் பெர்னான்கே, அவருடைய பத்திரிக்கையாளர் கூட்டத்தின் போது, ஒரு மாதத்தில் சுமார் 85 பில்லியன் டாலர் டிரெஷரி அசிஸ்டன்ஸ் அளிக்கும் குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் ப்ரொக்ராம் 2013 ஆம் வருட இறுதியில் நிறுத்தப்படக்கூடும் என்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சந்தைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தங்கம் மற்றும் ஈக்விட்டி மாற்றகங்களைப் பொறுத்தவரையில், பயம் கலந்த விற்பனை தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் இவற்றுள் எது சிறந்தது என்று தீர்மானிப்பது மிகவும் சிக்கலானதாகும். இவற்றுள் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

தங்கத்தின் உன்மை நிலை

உண்மையில் முதலீடுகளைப் பொறுத்த வரையில், கடந்த 12 ஆண்டுகளாக, முன்னணியில் இருந்து வந்த தங்கம் 2013 ஆம் ஆண்டு வரையில் முதலீட்டாளர்களின் கண்ணின் மணியாய் இருந்துள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் அறைகூவல்களுக்குப் பின் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பிராஃபிட்களை புக் செய்துள்ளனர். உலகின் மிகப்பெரும் இடிஎஃப் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிடிஆர் கூட 1000 டன்கள் வரையிலான வரலாறு காணா சரிவைச் சந்தித்துள்ளது

பிராஃபிட் புக்கிங்கில்

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் தங்க இறக்குமதி வேரூன்ற ஆரம்பித்துள்ளது. எனினும், அதிகரிக்கும் விலைகள் மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களான, தங்கத்தை வாங்கும் நுகர்வோர்கள் தான் எவ்வாறாயினும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், சர்வதேச விலைகள் பலத்த அடி வாங்கியிருப்பதனால், முதலீட்டாளர்கள் இப்போதும் பிராஃபிட் புக்கிங்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தங்க இருப்பின் அனுகூலங்களைக் குறைக்கக்கூடியதாய் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாய் இது வரை காணாத அளவில் சுமார் 61.15 வரை குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தங்க இறக்குமதி சமநிலையை பாதித்து, விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்திய கரன்ட் அக்கவுன்ட் குறைபாடுகள் அரசின் நிலையை கவலைக்கிடமாக்கியுள்ளது. மேலும், தங்க இறக்குமதிகளின் மீதான அதீத அடக்குமுறைகளும் தவிர்க்க இயலாதவையாய் உள்ளன

ஈக்விட்டிகளின் நன்மை

இந்திய ஈக்விட்டிகள் கடினமானதொரு துறையாகக் கருதப்படுகின்றன. மேக்ரோ மட்டத்தில் காணப்படும் இந்த தொய்வு இத்தகைய மந்தமான செயலாக்கத்தின் காரணியாகும். யு.எஸ். டோவ் ஜோன்ஸுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கையில், வர்த்தக வட்டியானது யு.எஸ். இன்டெக்ஸ் மற்றும் டாலருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், இந்தியா போன்றதொரு வளரும் நாட்டின் சந்தை, அதனுடைய சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதையும் காணலாம்.

இந்திய முதலீட்டு

உற்பத்தித்திறன், முதலீடுகள், அதீத பணவீக்கம் மற்றும் கிரீன் ஃபீல்டு செயல்திட்டங்கள் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள், இந்திய முதலீட்டு சுழற்சியை குறைவாக்கி உள்ளன. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின் ஃபாரீன் இன்ஸ்ட்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ் (எஃப்ஐஐ'ஸ்) கூட போட்ட பணத்தை பறித்துக் கொண்டு விட்டது.

இறுதி அறைகூவல்

இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, கட்டாயமாக பன்மடங்கு பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. குறைந்த கால வாய்ப்புகள் ஏதேனும் இருப்பின், நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்;

ரூபாயின் விளைவுகள்

சீன சந்தைகளின் மந்தநிலை மற்றும் அவர்களின் தங்க உபயோகம் ஆகியவை புல்லியன்களுக்கான தேவையையும் கீழிறங்கச் செய்துள்ளன. இவ்வருடத்தில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின்னும் தங்க விலையில் பயங்கர இறக்கத்தைச் சந்தித்துள்ள இந்தியா, ரூபாயின் மதிப்பு உயரும் தறுவாயில், தங்கத்தின் விலையில் மேலும் பல சிக்கல்களைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

பங்கு சந்தையில் நம்பிக்கையூட்டும் விஷயம்

1. யு.எஸ். ஈக்விட்டிகளின் உயர்வு ஏனைய சந்தைகளிலும் அத்தகைய ஒரு நம்பிக்கை உணர்வைப் பரவச் செய்யும்.
2. மிக அதிகமான பங்குகளை வைத்திருப்பதனால், சீனா தற்சமயம் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
3. இந்திய சந்தைகள் பல மாத விலைக்குறைப்புகளைக் கொண்டிருக்கும் இச்சமயம், சிறப்பான தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஈக்விட்டி

ஈக்விட்டிகளைப் பொறுத்தவரை, ஸ்டாக் பிக்கிங்கில் கவனமாகத் தேர்ந்தெடுத்தல் அவசியம், ஆனால் செர்ரி பிக்கிங் தான் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது. பெர்னான்கே, தான் க்யூஇ (QE) அஜெண்டாவை சுத்தமாக ஒழிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்
 
Via Fb ஆரோக்கியமான வாழ்வு

ஹோம மந்திரங்களும், அவற்றின் பலன்களும் ...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:50 PM | Best Blogger Tips

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா

மணக்கால் அய்யம்பேட்டை | 3:49 PM | | Best Blogger Tips

முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.

தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள்.

ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும். அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும்.

மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்!!!!!!!

தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உன்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துன்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும். இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது.

இது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

http://jn.nutrition.org/content/131/2/242.full

இரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்னெயால் ச்மைக்கபட்ட உனவுகலை உன்டது.

ஆய்வு முடிவில் தேங்காய் எண்னெயில் செய்தவற்றை உன்ட குழுவினருக்கு நல்ல கொலஸ்டிரால் கணிசமாக அதிகரித்தது. ட்ரைகிளிசரைட்ஸும் குறைந்தது. அவர்கள் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைந்தது. மோசமான எல்டிஎல் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை (ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் கணிசமாக குறையும்).

அதை விட முக்கியமாக "வெஜிட்டபிள் ஆயிலில் இருந்து எடுத்த எண்னெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் கொலஸ்டிரால் குறைந்தது" என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

அப்புறம் ஏன் நாட்டில் ஹார்ட் அட்டாக்குகள் பெருகாது என கேட்கிறேன்?

கொழுப்பை குறைக்கும் தேங்காய் . . .

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.

சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல்.

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள் . . .

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் . . .

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள். . .

தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு . . .

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது

ஆண்மைப் பெருக்கி . . .

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக . . .

குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் . . .

இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும்.

ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை எ‌ன்று கூறலா‌ம். தலை‌க்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.

மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம். இது தோலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

சாளக்கிராமம் என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:48 PM | Best Blogger Tips

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்
கருப்பு - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
 
Via FB  இந்து மத வரலாறு - Religious history of hinduism

ஆண்மை பெருக்கும், அதிக அமில சுரப்பை குறைக்கும் ரோஜா “குல்கந்து”

மணக்கால் அய்யம்பேட்டை | 3:47 PM | Best Blogger Tips

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து செய்முறை

நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.

இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

ஜீரணக் கோளாறு நீங்கும்

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

ஆண்மை பெருக்கி

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

இதயத்திற்கு ஏற்றது

ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

குல்கந்தின் பயன்கள்
‌சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.

முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

ஆப்பிள் குல்கந்து மில்ஷேக்

தேவையான பொருட்கள்....

ஆப்பிள் - 1
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 3 1/2 கப்
சுகர் லைட் - 2 டேபிள்
ஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டைத்தூள் - 2 சிட்டிகை

செய்முறை....

• ஆப்பிளை துறுவி சிறிது சர்க்கரை சேர்த்த தண்ணீரில் போடவும். (நிறம் மாறாமல் இருக்கும்)

• பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதோடு மீதி உள்ள சர்க்கரை, குல்கந்து,தேன், பட்டைத்தூள் சேர்த்து அடித்தபின் குளிர்ந்த பால், ஐஸ் துண்டுகள் கலந்து மிக்ஸியில் ஓட விடவும்.

• விருப்பப்ட்டால் சிறிது கடைந்த பாலேடும் சேர்க்கலாம்

• உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

ட்ரைஃப்ரூட் குல்கந்து!

தேவையானவை:

ஆப்பிள் விழுது, கிர்ணிபழ விழுது, முலாம்பழ விழுது - தலா ஒரு கப் (ஆப்பிள், கிர்ணி பழம், முலாம்பழம் ஆகியவற்றைக் கழுவி, தோல் சீவி துண்டுகளாக்கி தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ரோஜாப்பூ - 3 பூக்கள், பாதாம் (தோல் நீக்கி சீவவும்), முந்திரி - தலா 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான தவா வில் ஆப்பிள் விழுது, கிர்ணி பழ விழுது, முலாம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அல்வா பதத்தில் கொதித்து வரும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பிறகு குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, கெட்டியான பதத்தில் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், சுத்தம் செய்து, உதிர்த்த ரோஜா இதழ்கள் சேர்த்து ஒருமுறை கிளறி மூடவும். ஆறியதும் சாப்பிட... சூப்பர் சுவையில் இருக்கும்!

குல்கந்து ரோஸ் குக்கி

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்
ரோஜா குல்கந்து - 4 தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
பால் - 50 மி.லி.,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மைதா, உப்பு, சீரகம், பால், ரோஜா குல்கந்து ஆகியவற்றை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில், எண்ணெயை ஊற்றி, காய வைக்கவும்.

காய்ந்த எண்ணெயில், குக்கி அச்சை நனைத்து, திரும்பவும் எண்ணெயில் முக்கவும். வெந்தவுடன் அச்சு தனியாக வந்து விடும்.

குல்கந்து ரோஸ் குக்கி, எண்ணெயில் தங்கி விடும்.

நன்றாக வெந்தவுடன், எடுத்து விடவும்.

குல்கந்து ரோஸ் குக்கி ரெடி.

குல்கந்து ரோஸ் குக்கியை, தேன், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி கொண்டும், தயார் செய்யலாம்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

மதுரையில் சுழலும் லிங்கம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips
மதுரையில் சுழலும் லிங்கம்!

இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது.  அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள்.  இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். 

அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார்.  அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.  பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.

இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக  கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.  புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.

அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.

இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism
 
மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:41 PM | Best Blogger Tips

நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும்.

அதுபோல மதுஅருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள், மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது போல, மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜீனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜீனஸ் என்ற நொதியால், அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும்.

மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.

மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்
கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.

பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடிய இந்த மதுவை விட்டு விடுங்கள் என்று இன்று ஒரு தகவல் சார்பாக நண்பர்களை கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய நண்பர்களிடமும் இதை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் .இதனால் ஒருவர் திருந்தினால் கூட நல்ல விடயம் தான்

அறிகுறிகள்

துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.

சிகிச்சை
கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.
மது பழக்கத்திலிருந்து விலகும் வழிமுறைகள்.

1) உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள்.

2) மதுவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் மது அருந்துவோர் வட்டத்தைத் தவிருங்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு தடவை குடித்தபின் அடுத்த தடவை குடிப்பதற்கான இடைவெளியை படிப்படியாக அதிகரியுங்கள்.
பின் ஒரு நாள் முழுதும் மது குடிப்பதை நிறுத்தி விடுங்கள்
இவற்றின் போது,

உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது செயலில் ஈடுபடுங்கள். இது மதுவிலிருந்து உங்கள் புலனை திசை திருப்ப உதவும்.

ஒரு நண்பரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ உங்கள் பிரச்சினை பற்றி விவாதியுங்கள். இது மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் தரும்.

3) மதுவுக்கு விடை கொடுங்கள்.
மதுவை மறுப்பதில் உறுதியாயிருங்கள்.
மதுவை விட்டு விடுவது கஷ்டமாகத் தோன்றினால், மனம் தளராதீர்கள். முயற்சியை விடாதீர்கள். தொடர்ந்து முயலுங்கள். மதுவை ஒழிப்போம் மனிதனாய் வாழ்வோம்.
 
Via FB Karthikeyan Mathan

இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:39 PM | Best Blogger Tips

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள்
ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்! அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட் டிப்படைக்கும் மோசமான நோயாக இதய நோய் இருக்கிறது.

உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வரலாம் . ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இத் தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

புகைப்பிடிப்பது.........

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால்...........

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

உடல் எடை..........

இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி.............

தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நீரிழிவு...........

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம்.

உணவுகள்.........

டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.

ஆல்கஹால்.........

ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.

ட்ரான்ஸ் கொழுப்புகள்......

பேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் பேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.

வைட்டமின்களில் கவனம்........

ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

மனஅழுத்தம்.........

அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

மருத்துவ ஆலோசனை.........

குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளவேண்டும். கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல் ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும். இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற் பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.

Via FB Karthikeyan Mathan

எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:38 PM | Best Blogger Tips
‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும் ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான்.

* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைக்கூடத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். ‘நினைத்ததை முடிப் பவன்’ படத்தி்ல சிகரெட்டை வாயில் வைப்பார், இழுக்க மாட்டார்.

* முதலமைச்சர் பதவியை ஏற்றுக் ‌கொண்டபின் ஷுட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு (அவர் நடித்த கடைசிப் படமான) ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

• நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள்.

* எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.

• எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற ‘மலைக் கள்ளன்’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் அது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.

* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங் கிலத்தில் அண்ணாவை வசனம் எழுதும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆசை நிறை வேறவில்லை.

• அறிமுகம் இல்லாத புதிய நபர்களைச் சந்தித்தால் “நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகன்” என்று அறிமுகம் செய்து கொள்ளுமளவுக்கு எளிமையானவர் எம்.ஜி.ஆர்.

* தன் ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு சிங்கத்தையும், கரடியையும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டரையும் நியமித்திருந்தார்.

* மிகவும் நெருக்கமானவர் களை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்.

* ‘அடிமைப் பெண்’ ஷுட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி அணிந்தார். அது பிடித்துப் போனதுடன், நன்றாக இருக்கிறதென்று அனைவரும் பாராட்டவே அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கிய பெருமை உடையவர்கள் இருவர். ஒருவர் கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கி அணிந்து தொப்பி, கண்ணாடி இல்லாமல் தானே காரை டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாத்தான் கண்டுபிடிப்பாங்க போல’’ என்பாராம்!

• தன் அன்னையான சத்யா அவர்களை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

* ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை (முதல்வராவதற்கு முந்தைய காலகட்டத்தில்) எழுதியிருக் கிறார் எம்.ஜி.ஆர்.

* எம்.ஜி.ஆர். நடத்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடல் எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்த பெருமையுடையது.

* எம்.ஜி.ஆர்.1936ல் சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராகி 1977ல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை மொத்தம் 136 படங்களில் நடித்தார்.

* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ல் எம்.ஜி.ஆரின் கமெண்ட் : “அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்ல. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.”

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் என்றுமே மறையாது

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:36 PM | Best Blogger Tips
Photo: உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

Via Fb தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் 

பெண்களை கருத்தரிக்க விடாமல் ஆண்களின் உயிரணுக்களே செயல்படலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:35 PM | Best Blogger Tips
Photo: பெண்களை கருத்தரிக்க விடாமல் ஆண்களின் உயிரணுக்களே செயல்படலாம்!

தம்பதியரின் நெருக்கத்தைப் பற்றிப் பேசும் போது ஈருடல், ஓருயிர் என்கிறோம். ‘நீ பாதி, நான் பாதி’ என்கிறோம். அதையெல்லாம் மெய்யாக்கும் வகையில்தான், ஆணில் பாதியும் பெண்ணில் பாதியுமாகச் சேர்ந்து புதிய உயிர் உலகத்துக்கு வருகிறது. இதுதான் உலக நியதி. பெண்ணின் உடலில் உயிராகி வளர வேண்டிய கருவுக்கு, காரணமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டிய ஆண் அணுக்களே அதற்கு எதிரியானால்? அப்படிக்கூட நடக்குமா என்பதே எல்லோரின் கேள்வியாகவும் இருக்கும்.

‘நடக்கும்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன். பெண் உடலில் கரு வளர விடாமல் செய்ய, அவளது கணவரின் ரத்தமும், மரபணுக்களுமே எதிராகச் செயல்படுகிற அந்தப் பின்னணி பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘சில பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், கருவானது, கருப்பையில் ஒட்டி வளர்வதில்தான் பிரச்னை இருக்கும். நல்ல கரு வந்து, தங்காதவர்களுக்கும், குழந்தை இல்லாததற்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொண்டு, அதிலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறவர்களுக்கும் மேலே சொன்ன விஷயம்தான் பிரச்னையாக இருக்கும்.

காரணமே தெரியாமல், மறுபடி, மறுபடி சிகிச்சையைத் தொடர்வதும், சிகிச்சை வெற்றி பெறவில்லையே என்கிற விரக்தியில் வாழ்க்கையை வெறுப்பதுமாக துயரத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கரு என்பது, கணவன் -மனைவி இரண்டு பேரின் ரத்தம் மற்றும் மரபணுக்கள் சேர்ந்தது. சில பெண்களின் உடல், கணவனின் ரத்தத்தையும், மரபணுக்களையும் அந்நியப் பொருள்களாக நினைத்துக் கொண்டு, கருவை ஒட்ட விடாமல் செய்து விடும். அதைப் பரிசோதனையில் கண்டுபிடித்து, கணவனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை எடுத்து, சில மருந்துகள் கலந்து, மனைவியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்படும்.

அதாவது, அந்த வெள்ளை அணுக்கள், மனைவியின் உடலில் ஊறி, எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சில வகை நோய்கள் வரும் முன், எச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் இல்லையா? அதே டெக்னிக்தான் இதிலும். இதற்கு ‘ஹஸ்பென்ட் லூகோசைட் டிரான்ஸ்ஃபர்’, அதாவது, ‘ஹெச்.எல்.டி.’ என்று பெயர். இந்த ஊசியை பெண்களின் சருமத்தின் வழியே செலுத்த வேண்டும்.

வாரம் ஒரு ஊசி வீதம், 8 முதல் 12 ஊசிகள் போட வேண்டியிருக்கும். ஒரு ஊசிக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இந்த சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை இல்லாத பெண்களுக்கு ஐ.வி.எஃப். செய்தால், கரு தங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். சென்னைக்கு மிகவும் புதுசான இந்த சிகிச்சை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆறுதலையும், தீர்வையும் கொடுக்கிறது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர்
மகாலட்சுமி சரவணன்.

- ஆர்.வைதேகி
நன்றி வசந்தம்

மூளையைத் தூங்க விடாதீர்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips
மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
 
Via FB பாரதி ராஜா

பெரிய பிரச்சினைகளும்,எளிய வழிகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 PM | Best Blogger Tips
பெரிய பிரச்சினைகளும்,எளிய வழிகளும்.
---------------------------------------------------------
வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக எளிய தீர்வுகள் உண்டு.முதலில் பிரச்சினையின் வடிவம்,அதன் காரணம் இதை அமைதியாக,உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்தால் எளிதாக தீர்வு கண்டுவிடலாம்.இதற்கு எடுத்துக்காட்டாக இரு நிகழ்வுகளை கூறுகிறேன்.

நிகழ்வு 1:
அமெரிக்கா ஆரம்ப காலத்தில் வான் வெளியில் ஆராய்ச்சி செய்யும்பொழுது,வான்வெளி வீரர்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக குறிப்பெடுக்க எழுதுகோல் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டார்கள்.ஏனென்றால் வான்வெளியில் பேனாவால் எழுத முடியாது.அங்கு புவியீர்ப்புவிசை இல்லாததால் பேனாவிலிருந்து மை(இங்க்)வெளியே வராது.இதனால் அமெரிக்கா பல கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்தும் வான்வெளியில் எழுதும் பேனாவை கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் போட்டி நடான ரஷ்யாவின் வான் வெளி வீரர்களோ எந்த சிரமும் இல்லாமல் வான் வெளியில் எழுதுகோலால் குறிப்பெடுத்து கொண்டு வந்தார்கள்.ரஷ்யா நாட்டு வான் வெளி வீரர்கள் பயன்படுத்திய எழுதுகோல் என்ன தெரியுமா?

பென்சில்.

நிகழ்வு 2:
டெல்லியில் IAS நேர்முக தேர்வு நடந்தது.நேர்முக வந்தவர்களை,தேர்வு அதிகாரிகள் ஒரு அறைக்குள் செல்ல சொன்னார்கள்.நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அறைக்குள் சென்றவுடன் கதவை சாத்திவிட்டு,யார் முதலில் இந்த அறையை விட்டு வெளி வருகிறார்களோ,அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தார்கள்.அதிகாரிகள் அறிவித்தவுடன்,அறைக்குள் இருந்தவர்கள் வெளியே வர ஒவ்வொருத்தரும்,ஒவ்வொரு விதமாக முயன்றார்கள்.ஒருத்தர் ஜன்னலை உடைக்க முயன்றார், இன்னொருவர் சுவரை உடைக்க முயன்றார் ஒருத்தரும் வெளியே வரமுடியவில்லை.ஆனால் ஒருவர் மட்டும் வெளியே வந்து தேர்வில் வெற்றிபெற்றார்.எப்படி வெளியெ வந்து வெற்றிபெற்றார் தெரியுமா?

கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.ஏனென்றால் கதவு பூட்டபடவேயில்லை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.வாழ்வில் நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் கண்டிப்பாக எளிய தீர்வுகள் உண்டு.முதலில் பிரச்சினையின் வடிவம்,அதன் காரணம் இதை அமைதியாக,உணர்ச்சிவசப்படாமல் ஆராய்ந்தால் எளிதாக தீர்வு கண்டுவிடலாம்.இதற்கு எடுத்துக்காட்டாக இரு நிகழ்வுகளை கூறுகிறேன்.

நிகழ்வு 1:

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் வான் வெளியில் ஆராய்ச்சி செய்யும்பொழுது,வான்வெளி வீரர்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக குறிப்பெடுக்க எழுதுகோல் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டார்கள்.ஏனென்றால் வான்வெளியில் பேனாவால் எழுத முடியாது.அங்கு புவியீர்ப்புவிசை இல்லாததால் பேனாவிலிருந்து மை(இங்க்)வெளியே வராது.இதனால் அமெரிக்கா பல கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்தும் வான்வெளியில் எழுதும் பேனாவை கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் போட்டி நடான ரஷ்யாவின் வான் வெளி வீரர்களோ எந்த சிரமும் இல்லாமல் வான் வெளியில் எழுதுகோலால் குறிப்பெடுத்து கொண்டு வந்தார்கள்.ரஷ்யா நாட்டு வான் வெளி வீரர்கள் பயன்படுத்திய எழுதுகோல் என்ன தெரியுமா?

பென்சில்.

நிகழ்வு 2:

டெல்லியில் IAS நேர்முக தேர்வு நடந்தது.நேர்முக வந்தவர்களை,தேர்வு அதிகாரிகள் ஒரு அறைக்குள் செல்ல சொன்னார்கள்.நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அறைக்குள் சென்றவுடன் கதவை சாத்திவிட்டு,யார் முதலில் இந்த அறையை விட்டு வெளி வருகிறார்களோ,அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தார்கள்.அதிகாரிகள் அறிவித்தவுடன்,அறைக்குள் இருந்தவர்கள் வெளியே வர ஒவ்வொருத்தரும்,ஒவ்வொரு விதமாக முயன்றார்கள்.ஒருத்தர் ஜன்னலை உடைக்க முயன்றார், இன்னொருவர் சுவரை உடைக்க முயன்றார் ஒருத்தரும் வெளியே வரமுடியவில்லை.ஆனால் ஒருவர் மட்டும் வெளியே வந்து தேர்வில் வெற்றிபெற்றார்.எப்படி வெளியெ வந்து வெற்றிபெற்றார் தெரியுமா?

கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.ஏனென்றால் கதவு பூட்டபடவேயில்லை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

ஜீரக தண்ணீர் செய்முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | | Best Blogger Tips

ஜீரக தண்ணீர் செய்முறை:

குடம் (15) லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தோராயமாக பாதி ஆறவைத்து அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும்படியாக) முடிவைக்கவேண்டும். இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்.
..........BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.

சமையலில் ஜீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்கவேண்டுமா என்ற நியமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே. மேற்கண்ட செயல்முறை விளக்கத்தில் ஜீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுதப்படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும்போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும்போது ஆவியாகி வெளிப்பட்டுவிடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.

வாயு தொல்லை

பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25IL, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துõய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்..குடம் (15) லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தோராயமாக பாதி ஆறவைத்து அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும்படியாக) முடிவைக்கவேண்டும். இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்.
..........BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.

சமையலில் ஜீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்கவேண்டுமா என்ற நியமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே. மேற்கண்ட செயல்முறை விளக்கத்தில் ஜீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுதப்படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும்போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும்போது ஆவியாகி வெளிப்பட்டுவிடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.

வாயு தொல்லை

பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25IL, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துõய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்..
Via Fb ரிலாக்ஸ் ப்ளீஸ்

நரேனின் பிரார்த்தனை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:22 PM | Best Blogger Tips
நரேனின் பிரார்த்தனை ...

http://vivekanandadasan.wordpress.com/

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

 ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. 'நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். 'நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் 'அன்னை என்ன சொன்னாள்?' என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

'ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்' என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்' என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் 'நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது' என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் ......