மார்க்கெட் கேபிடலைசேஷன் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips
What Is Market Capitalization
சென்னை: பங்குச் சந்தையில் மார்க்கெட் கேபிடலைசேஷன் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்த வார்த்தையை பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மார்க்கெட் கேபிடலைசேஷன் என்றால் ஒரு நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குளை அந்த நிறுவன பங்கினுடைய தற்போதைய விலையை வைத்து பெருக்கிக் கிடைப்பதாகும்.
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் ரூ.300 கோடி முதலீட்டை வைத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். இந்த ரூ.300 கோடி முதலீடு, 3 கோடி பங்குகளிலிருந்து கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் பேஸ் வேல்யூ ரூ.100 ஆகும். எனவே அந்த நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குகள் 3 கோடி ஆகும்.
அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.100 ஆகும். அப்படியானால் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் ரூ.300 கோடியாகும்.
மார்க்கெட் கேபிடலைசேஷனை எவ்வாறு கணக்கிடுவது?

ஒரு நிறுவன பங்கின் தற்போதைய சந்தை விலையை அந்த நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குகளோடு பெருக்கி கிடைக்கும் தொகையே மார்க்கெட் கேபிடலைசேஷன் ஆகும்.
இந்தியாவில் ஐடிசி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி போன்ற நிறுவனங்களின் மார்க்கெட் கேபிடலைசேஷன் மிகவும் அதிகமாக இருக்கின்றன. அதிகமான மார்க்கெட் கேபிடலைசேஷனை வைத்திருக்கும் நிறுவனங்கள் லார்ஜ் கேப் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேற்சொன்ன அனைத்து நிறுவனங்களும் லார்ஜ் கேப் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலையும் மிக அதிகமாக இருக்கும். பங்குகளில் தொழில் ரீதியாக முதலீடு செய்வோர், லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புவர்.

பங்குகளில் மிட் கேபிடலைசேஷன் பங்குகள் அல்லது ஸ்மால் கேபிடலைசேஷன் பங்குகள் என்ற பிரிவுகளும் உள்ளன. இந்த பங்குகள் குறைந்த மார்க்கெட் கேபிடலைசேஷனைக் கொண்டிருக்கும். லார்ஜ் கேப் பங்குகளைவிட இந்த மிட் மற்றும் ஸ்மால் கேபிடலைசேஷன் பங்குகள் மிகவும் வேகமாக கைமாறக்கூடியவை.
 
ஏனெனில் இந்த பங்குகளில் ஏற்படும் விலை மாற்றம், அவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகமான லாபத்தையோ அல்லது பெரிய இழப்பையோ ஏற்படுத்தும்.

பங்குகளின் விலைகளில் மாற்றம் ஏற்படும்போது, அல்லது நிறுவனம் போனஸ் வழங்கும் போது, அல்லது ஏதாவது சரியான காரணம் இருக்கும் போது, அல்லது அந்த நிறுவனம் வேறொரு நிறவனத்தோடு இணைக்கப்படும் போது அல்லது அந்த நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்கும் போது மார்க்கெட் கேபிடலைசேஷனில் மாற்றம் ஏற்படும். இந்த முதலீட்டாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏