ஆலங்குடி- குரு ஸ்தலம் பற்றி அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர்

சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசான்
இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர்.

தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி .
நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால்இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார். சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி.
அவருடை மகனாகப் பிறந்தவர் ‘குரு’ என்று
போற்றப்படும் வியாழபகவான். குரு சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்கள் பல உள்ளன.
இவற்றில் கும்பகோணம் அருகே உள்ள
ஆலங்குடி குரு ஸ்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டம் திட்டை, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம்.

நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம்.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். குரு, சுக்ரன் இரண்டும் ராஜ கிரகங்கள் என்பர். 4வேதங்கள்,64கலைகள் அறிந்தவர்கள்.

குருவுக்கு உரிய நிவேதனப் பொருட்கள்
மஞ்சள் வஸ்திரம்
முல்லை மலர்கள்
கொண்டக்கடலை
சர்க்கரைப் பொங்கல்
குருவினால் உண்டாகும் பலன்கள்
செல்வம்,புகழ்,
குழந்தைபாக்கியம்,திருமணம்
இந்த நான்கும் கிடைக்கும்.

ஆலங்குடி-

நவகிரகதலங்களில் குருவுக்குரியது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில். முதன்மையான குருபரிகாரத் தல ம் இறைவர்- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் இறைவி --ஸ்ரீஏலவார் குழலி அம்மை அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்
அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி சந்நிதிகளும் இருக்கிறது. சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது
வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் “கலங்காமல் காத்த பிள்ளையார்” என வழங்கப்படுகிறார்.


இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது. தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து
சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார்.
இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர்.
இங்குள்ள தட்சினாமூர்த்தி ஞானம் தரும்
குருவாக அருள் பாலிக்கிறார். கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால்
“திருஇரும்பூளை” என்றும், ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்த பெருமானுக்குரிய தலமாதலாலும்,
திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலத்தை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவன் வீற்றிருப்பதாலும்“ஆலங்குடி” என்று பெயர்.
இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது.
விசுவாமித்திரர், அகத்தியர், ஆதி சங்கரர் வீரபத்திரர் வழிபட்ட திருத் தலம். திருநாவுக்கரசராலும்,
திருஞான சம்பந்தராலும் பாடப் பெற்றது, பஞ்சாரண்ய தலங்களில் ஒன்று. பார்வதி தேவி, விஷ்ணு,
லட்சுமி, இந்திரன் முதலான தேவர்கள்
வழிபட்ட தலம் இது.



Thanks to FB தர்மத்தின் பாதையில்