"சுமை தாங்கிக் கல்"

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips

அந்தக் காலத்துல பொம்பளைங்களுக்குப் பிரசவம் பார்க்கணும்னா மாட்டு வண்டியிலதான் கூட்டிட்டுப் போவாங்க. அப்படிக் கூட்டிட்டுப் போகும்போது சிலர் இறந்திடுவாங்க.. அவங்க நினைவாகத்தான் இந்த 'சுமை இறக்கிக் கல்’லை நட்டு வைப்பாங்க. அது ஏன் இவ்வளவு உயரமா இருக்குன்னா வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பக்கத்து ஊர் சந்தையில் இருந்து வாங்கிட்டு வருவாங்க. நடந்தே வரணும்கிறதால, தலையில் வைச்சுக்கொண்டு வருவாங்க. அப்படி வரும்போது களைப்பா இருக்குன்னு இறக்கி வைக்க முடியாது. ஆள் இல்லாதப் பாதையில, இறக்கி வெச்சா திரும்பத் தூக்கி தலையில் வைக்க ஆள் இருக்க மாட்டாங்க. அந்த மாதிரி சமயத்துல இந்தக் கல்லுல சுமையை இறக்கிவெச்சுட்டு, யார் உதவியும் இல்லாம நாமளே தூக்கி தலையில் வெச்சுக்கலாம். அதான் இதை ’சுமை இறக்கிக் கல்’னு கூப்பிடுறாங்க''
"சுமை தாங்கிக் கல்"
------------------------------