நட்ஸ்.....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:18 | Best Blogger Tips

அக்ரூட் பருப்பு

என்ன சத்து?

வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் "" சத்து நிறைந்துள்ளது. மேலும், புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க், கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு இதில் உள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

தினம் இரண்டு அல்லது மூன்று.

என்ன பலன்?

சருமத்துக்கு நல்லது.
உடலில் எடையை பாலன்ஸ் செய்யும், கொலஸ்ட்ராலை குறைக்கும்.


பாதாம் பருப்பு

என்ன சத்து?

முதுமையை தடுக்கும் வைட்டமின் "" பாதாமில் அதிக அளவில் அடங்கியுள்ளது. புரதம், கொழுப்பு, மக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் இதில் உள்ளது. இதைத் தவிர, சோடியம், வைட்டமின்கள் பி1, பி2, பி3 மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

சிறுவர்கள் 10 முதல் 12 பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்என்கிறார்கள் நிபுணர்கள். பெரியவர்கள் இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். நீரில் அல்லது பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

என்ன பலன்?

சருமம் பொலிவடையும்.
தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


பிஸ்தா:

என்ன சத்து?

புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ், கால்ஷியம் மற்றும் வைட்டமின் மற்றும் சி அதிகம் உள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

தினமும் நான்கு அல்லது ஐந்து சாப்பிடலாம்.

என்ன பலன்?

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.


முந்திரி பருப்பு :

என்ன சத்து?

செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

நான்கு அல்லது ஐந்து சாப்பிடலாம்.

என்ன பலன்?

உடல் உறுதியாகும்.
எலும்புகளுக்கு நல்லது.
பற்கள் உறுதியாகும்
சருமத்துக்கு நல்லது