நேர்முக தேர்வு! (நிச்சியம் படிக்க வேண்டியது!)

மணக்கால் அய்யம்பேட்டை | 6:15 PM | Best Blogger Tips
இன்று பெரும்பாலும் கணினி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் என் நண்பனின் வேலை விண்ணப்பத்தை பார்த்தவுடன் வியக்க கூடும்.

காரணம் "வேலையை மட்டும் விரும்பும்" அவன் (பெயர் இங்கு முக்கியமில்லை என்று நினைக்கிறேன்) குறுகிய காலத்தில் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்வது வழக்கம். 

கடந்த பதினான்கு வருடத்தில் பத்து முறை தானாகவே வேலையை மாற்றிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

இன்று வேலை செய்யும் நிறுவனத்தை விசுவாசத்துடன் காதலிப்பவர்களே தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையிலும், முழு நேர வேலையில் இருந்தாலும், வேலை செய்யும் நிறுவனத்தை விரும்பாமல், அவனுகென்று ஒரு தனி வழியில் பதினான்கு வருடத்தில் பத்து நிறுவனங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறான்.

சரி, விசையத்துக்கு வருவோம்.

இப்போது நண்பனை தற்போது இருக்கும் நிறுவனம் பொருளியல் மந்தத்தால் வேலையை விட்டு நீக்கி விட்டது, பதினான்கு, பதினைந்து வருட அனுபமுள்ள மற்ற சிலரைப்போல!.

இனி வழக்கம் போல நண்பனுக்கு நடக்கும் ஒரு நேர்முக தேர்வுதான் இந்த இடுகை.



கேள்வி: ஏன் நீங்கள் கடந்த பதினான்கு வருடத்தில் பத்து வேலையை மாற்றியுள்ளீர்கள்? 

பதில்: ஏன், என்றால் என் கடன்களை தீர்த்து, சேமிப்பை கூட்டி, இரண்டாவது முறை ஒரு நிறுவனம் என்னை பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பும்முன் சொந்த வாழ்கையில் ஒரு நல்ல பொருளியல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக. 

கேள்வி: அப்படி என்றால் உங்களுக்கு முன் கூட்டியே தெரியுமா 2009-ம் ஆண்டில் உங்களை உங்கள் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பபோகிறது என்று? 

பதில்: நான் முதல் முறையாக 2002-ம் ஆண்டில், அதாவது முதல் பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கப்பட்டேன்.

திரும்ப எனக்கு ஒரு முழு நேர வேலை கிடைக்கவில்லை, 2003 ஜனவரி மீண்டும் பொருளியல் மந்தம் மேலே வரும் வரை. இதனால் நான் கிட்ட தட்ட ஒரு வருடம் வேலை செய்ய எந்த நிறுவனமும் கிடைக்காமல் தவிக்கும் படியாகிவிட்டது.
 

கேள்வி: அது உங்களுக்கு எத்தனையாவது வேலை என்று குறிப்பிட முடியுமா? 

பதில்: ம்ம்ம்...அது என்னுடைய மூன்றாவது வேலை. 

கேள்வி: அப்படி என்றால் உங்கள் பதினான்கு வருட அனுபவத்தில், ஜனவரி 2003 முதல் ஜனவரி 2009 வரை, இடைப்பட்ட இந்த ஆறு வருட காலத்தில் நீங்களாகவே எட்டு முறை வேலையை மாற்றி உங்கள் வேலை எண்ணிக்கையை பத்தாக உயர்த்தி இருக்கிறீர்கள் இல்லையா? 

பதில்: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை. என்னுடைய "முதல் எட்டு வருட" அனுபவத்தில் நான் இரண்டு நிருவனங்களுக்காக மட்டுமே கடினமாக வேலை செய்தேன்.

காரணம், அப்போது நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.
 

கேள்வி: ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் விளக்க முடியுமா? 

பதில்: என்னுடைய ஊதியம் அந்த எட்டு வருடங்களில் மிக அளவாகவே உயர்ந்தது, அதனால் என்னால் எந்த வகையிலும் எதையும் சேமிக்க முடியவில்லை.

நான் நினைத்தது எல்லாம், என் நிறுவனத்திடம் நீண்ட நாள் நல்ல உறவில் உள்ள என்னிடம் ஒரு நிரந்தர வேலை உள்ளது, அதனால் கவலை அடைய தேவை இல்லை என்பது மட்டுமே. ஆனால் என் வேலையை இழந்தால் நான் என்ன செய்ய முடியும்?

என்னால் கற்பனை கூட பண்ணமுடியாத ஒரு விசையம் நான் வேலையை இழந்தது "பொருளியல் மந்தம்" என்ற ஒரே காரணத்தால் மட்டுமே!, எனக்கு வேலைதிறமை இல்லை என்ற காரணத்தால் அல்ல!. இது நடந்தது ஜனவரி 2002-ல்


கேள்வி: ஓ, அப்படியா!, சரி அதன் பின் இந்த இடைப்பட்ட ஜனவரி 2003 முதல் 2009 வரை என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக, இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்பது, ஒரு "நிறுவனத்தில் அல்லது ஒரு வேலையில் திருப்த்தி அடைவது" என்பதும், "பணம் சம்பாதிக்கவோ அல்லது போதுமான சேமிப்பில் திருப்த்தி அடைவது என்பதும்" ஒன்றல்ல என்பதை.

ஆனால், சேமிப்பு என்பது போதுமான வருமானம் இல்லாமல் முடியாதது, ஆகவே நான் என் விருப்பத்தை பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பை நோக்கியும் திருப்பினேன். இதனால் ஆறு வருடத்தில் எட்டு நிறுவங்களை மாற்றினேன் "ஒவ்வொன்றும் உறுதியாக என் பொருளியலை நிலையை உயர்த்தும்" பட்சத்தில்.


கேள்வி: அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் நேர்முக தேர்வு எடுத்தவர்களிடமும் நீங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள், அதாவது நீங்கள் முன் கூட்டியே குறிப்பிட்ட இடைவெளியில் திட்டமிட்டு உங்கள் வேலையை மாற்றுவதை மறைத்து விட்டீர்கள் அப்படிதானே?

பதில்: ஆமாம், பொருளியல் சந்தை எப்போது நன்றாக இருக்கிறதோ, எப்போது நிறுவங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறதோ, அப்போது தானே வேலையை மாற்ற முடியும் அல்லது வேலையில் சேர முடியும்!.

இவ்வளவு ஏன்! நீங்களே சொல்லுங்கள் பொருளியல் மந்தமாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காது இல்லையா!.

ஆகவே, எப்போது சந்தை நன்றாக இருக்கிறதோ அப்போது தான் ஒருவர் தன் வேலையை அதிக ஊதியத்துடன் மாற்றிக்கொள்ள முடியும், காரணம் அப்போதுதான் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் மற்றும் போதுமான ஊதியத்தை தர சம்மதிக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.
 

கேள்வி: சரி, இப்படி செய்ததன் மூலம் இன்று என்ன சாதித்து விட்டீர்கள் என்பது இங்கு உங்கள் கருத்து? 

பதில்: மிக அருமையான ஒரு கேள்வி, இதைத்தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். ஜனவரி 2003-ல் எனக்கு ஒரு நிலையான ஊதியம் (எந்த மாறுதலும் இல்லாமல்).

ஒரு பேச்சுக்காக என் ஊதியம் 2003-ம் வருடம் "X" என்று வைத்தால் 2009-ல் என் ஊதியம் "8*X" ஆகிவிட்டது.

உதாரணமாக, 2003-ம் வருடம் மூன்று லட்சமாக இருந்த என் ஊதியம் 2009-ல் இருபத்திநான்கு லட்சமாகி விட்டது (எந்த மாறுதலும் இல்லாமல்).

மேலும், நான் ஒரு போதும் பதவி மாறுதலை பற்றி கவலை பட்டது இல்லை. காரணம், ஒரு வருடம் முழுவதும் வேலை பார்த்து முடிந்து, பின் நிறுவனம் தன் ஊதிய உயர்வு முறையை நடைப்படுத்தி அதன் பின் அவர்கள் தரும் ஊதிய உயர்வு வரும் வரை காத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.
 

கேள்வி: அப்படி என்றால், நீங்களாகவே உங்கள் ஊதிய உயர்வை தீர்மானித்து கொண்டீர்களா?

பதில்: ஆமாம், 2001-2002-வில் வந்ததை போல இனி ஒரு பொருளியல் மந்தம் 2003-ல் இப்போதைக்கு இன்னொரு முறை வருமா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. அதனால் அடுத்த பொருளியல் மந்தம் எப்போது வரும் என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால், நான் ஒரு விசையத்தில் மிக உறுதியாக இருந்தேன். இன்னொரு முறை பொருளியல் மந்தம் காரணமாக நான் வேலையை இழக்கும் முன் நான் எந்த கடனும் இல்லாமல் ஒரு நிலையான சேமிப்போடு இருக்க வேண்டும் என்பதில். ஆகவே நான் வருட முடிவுக்காக காத்திருக்காமல், என் ஊதிய உயர்வை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.


கேள்வி: அப்படி என்றால், இப்போது உங்களுக்கு எந்த கடனும் நிலுவையில் இல்லையா?

பதில்: ஆமாம், வேலை மாற்ற முறையில் நான் நிறையவே சம்பாதித்து விட்டேன். அதில் என் இன்றைய நிலைக்காக கொஞ்சம் செலவழித்தும் இருக்கிறேன்.

என்னிடம் சொந்தமாக எந்த கடனும் இல்லாத ஒரு மூன்று படுக்கை அறை வீடு (2400 சதுர அடியில்) உள்ளது, மேலும் மாத தவனை பாக்கி எதுவும் இல்லாத ஒரு சொகுசு கார் இருக்கிறது, மீத கையிருப்பு தொகைக்காக வங்கிகள் மாத வட்டி தருகின்றன, அது இப்போது என் இதர தேவைகளை பூர்த்தி செய்கிறது.

நிதி நெருக்கடிகாக ஒரு நிறுவனம் என்னை வேலை விட்டு தூக்கினால், தூக்கட்டும்! இப்போது நிதி நெருக்கடி என்பது எனக்கல்ல, நிதி நெருக்கடி அந்த நிறுவனத்துக்கு மட்டுமே.

இதோ, இன்று மீண்டும் பொருளியல் மந்தம் காரணம் காட்டி நான் வேலையை விட்டு நீக்கபட்டு விட்டேன், இதை நான் மறுக்கவில்லை, அதே நேரத்தில் யாரையும் குறையும் சொல்லவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
 

கேள்வி: யார் குறை சொல்வது? யாரை குறை சொல்கிறார்கள்? 

பதில்: கிட்டதட்ட வேலை இழந்து பொருளியல் மந்தத்தால் திரும்ப வேலை கிடைக்காமல் தங்கள் வீடு, கார் போன்றவற்றின் மாததவணைகளை கட்ட முடியாத அனைவருமே குறை சொல்லுகிறார்கள்!


சொன்னால் வேடிக்கையாக இருக்கும், இவர்களில் பலர் என்னை முன்பு "நான் வெறும் வேலையை விரும்புபவன் எனக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் எந்த விசுவாசமும் கிடையாது" என்று சொல்லி கேலி செய்தார்கள்.

இன்று, நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், அவர்களின் நிறுவன விசுவாசத்தால் அவர்கள் சம்பாதித்தது அல்லது சாதித்தது என்ன? காரணம், இப்போது அவர்களும் என்னைப் போலவே வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் நேசித்த அதே நிறுவனத்தால்.

இப்போது அவர்கள் என்னை என்ன சொல்கிறார்கள் தெரியுமா!, நீ ஏன் சொல்ல மாட்டாய் மேலும் கவலை பட போகிறாய்!. உனக்குத்தான் எந்த கடனும் நிலுவையில் இல்லையே என்று!.

காரணம், அவர்கள் அனைவருக்கும் பனிரெண்டு முதல் பதினான்கு லட்சம் கடன் தொகை நிலுவையில் இருந்தது, அவர்கள் நேசித்த நிறுவனமே அவர்களை வேலையை விட்டு நீக்கும் போது.
 

கேள்வி: சரி, வேலை செய்யும் திறமையான பணியாளர்களுக்கு உங்கள் அனுபவ அறிவுரை என்ன? 

பதில்: திரு.நாராயண மூர்த்தியை போல, உங்கள் வேலையை மட்டும் நேசியுங்கள், ஆனால் உங்கள் நிறுவனத்தை அல்ல!.

ஏன் என்றால்? உங்களுக்கு தெரியாது, எப்போது உங்கள் நிறுவனம் உங்களை நேசிப்பதை நிறுத்திவிடும்! என்று அவர் சொன்னார்.

இந்த வரிகளை தொடர்ந்து நான் சொல்வது.

உங்களை நேசியுங்கள், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அதிகம் தேவை, உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் தேவைபடும் அளவை விட!.

நிறுவனங்கள் உங்கள் வாழ்கையில் மாறலாம், வரலாம் போகலாம். ஆனால், உங்கள் குடும்பம் அப்படியே மாறாமல் வாழ்நாள் முழுவதும் உங்களுடனேயே இருக்கும்.

முதலில் உங்களுக்கு போதுமான பணத்தை சம்பாதியுங்கள், அதே நேரத்தில் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிக்க உழையுங்கள்.

அப்படி இல்லாமல், இதன் அடுத்த வழியான நிறுவனம் மட்டும் சம்பாதிக்கும் வழியில் வெறும் நிறுவன விசுவாசத்தோடு மட்டும் இருப்பதில் கடைசியில் பாதிக்கப் பட போவது நீங்கள் மட்டுமே, கட்டாயம் நிறுவனம் அல்ல.
 

கேள்வி: உங்கள் அனுபவத்தில் நீங்கள் நிருவனங்களின் செய்கையில் பெரிதும் வருத்தப்படும் விசையம் என்ன? 

பதில்: எப்போதெல்லாம் ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் படுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தின் "சி.இ.ஓ (CEO)" பேசுவார்.

அருமையான வேலை மற்றும் கூட்டு முயற்சி நண்பர்களே, வாழ்த்துக்கள்!. இது உங்கள் நிறுவனம், எனவே உங்கள் கடின உழைப்பை இதே போல் தொடருங்கள், உங்களோடு நானும் எப்போதும் இருக்கிறேன் என்று.

ஆனால், எப்போது பொருளியல் மந்தமாகி அந்த நிறுவன லாபம் சரிவை நோக்கி செல்கிறதோ, அப்போது அதே "சி.இ.ஓ (CEO)" சொல்லுவார்.

இது என் நிறுவனம், என் நிறுவனத்தை காப்பாற்ற நான் பொருளியல் மந்த கால நடவடிக்கைகளை எடுத்து என் நிறுவன செலவுகளை குறைக்கும் திட்டத்தில் (Cost Cutting), உங்களில் சிலரை வேலையை விட்டு அனுப்புவதும் உட்படுகிறது என்று.

இது என்னை "தொழிலுக்கு இதயம் கிடையாது (Business never have Heart)" என்று நினைத்து வருத்தப்பட வைக்கும் ஒரு விசையம் ஆகும்.

ஆகையால், திறமையான பணியாளர்களுக்கு நான் இங்கு சொல்வது, உங்கள் தனிப்பட்ட பொருளியல் நிலையை பற்றி மட்டும் முதலில் சிந்தியுங்கள், காரணம் பெருளியல் மந்தத்தில் நீங்கள் வேலையை இழக்கும் போது,

"தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாத குறைகளோடு உங்கள் முன் நிற்பது உங்கள் குழந்தைகளே தவிர, நிச்சியமாக, உங்கள் நிறுவனமோ அல்லது "சி.இ.ஓ (CEO)" அல்ல."

நன்றி!.
 
singakkutti.blogspot

பி.கு:- இந்த அனுபவ அறிவை எனக்குள் புகுத்தி, என் அறிவு கண்ணை திறந்த "காமாச்சிக்கு".

"நீ நட்பின் வடிவமாய் அல்ல, அந்த "காஞ்சி-காமாச்சி"யாகவே என் கண்களுக்கு தெரிகிறாய்", உனக்கும் நம் நட்புக்கும் நன்றி!.