இந்தியாவின் மத்திய மானிட்டரி அதாரிட்டி மத்திய ரிசர்வ் வங்கியின் வசம் உள்ளது. ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலமுறையில் அறிவிக்கும் பொருளாதாரக் கொள்கையானது வட்டி விகிதங்களை உயர்த்துவது அல்லது ரெபோ ரேட் (ஆர்பிஐ குறுகிய காலத்தில் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான விகிதாச்சாரங்கள்) மற்றும் ரிவர்ஸ் ரெபோ ரேட் (வங்கிகள் ஆர்பிஐக்கு அளிக்கும் கடனுக்கான விகிதாச்சாரங்கள்) ஆகியவற்றை மாற்றுவது போன்ற செய்கைகளால் பொருளாதார வளர்ச்சியை சமன்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது.
மானிட்டரி பாலிசி திறனாய்வின் குறிக்கோள்கள்:
மானிட்டரி பாலிசி திறனாய்வின் முக்கிய குறிக்கோள் பொருளாதார வளர்ச்சி, விலை நிலைத்தன்மை, வர்த்தக சமன்பாடு மற்றும் பரிமாற்ற விகித நிலைத்தன்மை ஆகியவற்றை எட்டுவதேயாகும்.
திறனாய்வு ஏன் தேவை?
இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார பணவீக்கம் அடிக்கடி கட்டுக்கடங்காமல் போகிறது. அம்மாதிரி சமயங்களில் ரிசர்வ் வங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ரெபோ ரேட்டை உயர்த்தும். இந்த உயர்வு பொதுவாக வட்டி விகிதங்களை மேலேற வைக்கக் கூடியவை. வட்டி விகிதங்கள் கூடினால் மக்கள் குறைவாக கடன் வங்குவார்கள்; அதன் மூலம், இந்த பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
எனினும், பணவீக்கத்தை மானிட்டரி வழிமுறைகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த இயலாது. ஏனெனில், விநியோகம் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கக்கூடும். மானிட்டரி சாதனங்களைக் கொண்டு பணவீக்கத்தைக் குறைப்பதில் இருக்கும் பிரச்சனை, இவை, பொருளாதார வளர்ச்சியைத் பாதிப்பதைத் தவிர்க்க இயலாததே.
அதனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் குறைக்க ரெபோ ரேட்டை உயர்த்தும்போது வட்டி விகிதங்களும் உயர்ந்து, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை சற்று குறைக்கின்றன. மத்திய வங்கிகள், மானிட்டரி பாலிசி திறனாய்வு மேற்கொள்ளும்போது சந்திக்கக்கூடிய இக்கட்டு என்னவெனில் எவ்வாறு வளர்ச்சியையும், பணவீக்கத்தையும் சமன்படுத்தலாம் என்பதே ஆகும். வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வளர்ச்சியைக் கூட்டலாம்; ஆனால், இது பணவீக்கத்துக்கே வழி வகுக்கும். மறுபுறம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் பணவீக்கத்தை குறைக்கின்றன. ஆனால் வளர்ச்சி விகிதமும் இதனுடன் சேர்ந்து குறையும். ஏனெனில், வட்டி விகிதங்கள் உயர்வாய் இருக்கும்போது, மக்கள் குறைவாகவே கடன் வாங்குவார்கள்.
கேஷ் ரிசர்வ் ரேஷியோ (சிஆர்ஆர்) என்ற சாதனம் வங்கி முறையில் உள்ள லிக்விடிட்டி ப்ரெஷர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கியால் உபயோகிக்கப்படுகிறது. வங்கி அமைப்பில், கடும் லிக்விடிட்டி நெருக்கடி நிலவும்போது ரிசர்வ் வங்கி கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய மொத்த வங்கி டெபாசிட்களின் விகிதாச்சாரம்) குறைக்கின்றது. இந்தத் தேவை குறைகின்றபோது புது நிதி, வங்கி அமைப்புகளில் பாய்வதற்கு ஏதுவாகும். தற்போதைய சிஆர்ஆர் விகிதம் சுமார் 4.75 சதவீதமாக உள்ளது; 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு, வங்கி அமைப்பில் இன்ஃபியூஷனுக்கு வழி வகுக்கும்.
ஸ்டாச்யூட்டரி லிக்விடிட்டி ரேஷியோ (எஸ்எல்ஆர்) என்பதும் ரிசர்வ் வங்கியால் உபயோகிக்கப்படும் இன்னொரு முக்கிய சாதனமாகும். இதன்படி, நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வசம் இருக்கும் தொகை தவிர்த்து எளிதில் மாற்றக்கூடிய சொத்துக்களான, விலையுயர்ந்த உலோகங்களான தங்கம் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட செக்யூரிட்டிகளை ரிசர்வாக வைத்திருக்க வேண்டும். எஸ்எல்ஆர் குறைப்பு லிக்விடிட்டியை இன்ப்யூஸ் செய்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி எஸ்எல்ஆர் -இல், 100 அடிப்படை புள்ளிகளை 23 சதவீதம் வரை குறைத்து லிக்விடிட்டியை உயர்த்தி, வங்கியாளர்கள், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு வழிவகை செய்துள்ளது.