உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 6:21 PM | Best Blogger Tips

 காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு - BBC  News தமிழ்

 உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே 

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்

ஆலயங்களில் கூட்டம்

ஜோதிடர்களிடமும் கூட்டம்

எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.

ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். 
காசி – ஒப்பில்லாப் புனித நகரம் ...
அந்த இடம், தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். 

துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. 

அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 
மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.

இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை 
என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. 
காசி – கயா – உண்மையைத் தேடி…
உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். 

ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.

காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 

1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில்களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. 

எந்நேரமும் வெளிச்சம் !
( காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம் )

இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. 
உலகில் வாழும் மிகப் பழமையான நகரம் ...


இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! 
அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! 
வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். 
காசிக்குச் சென்றால் மோட்சம் கிடைக்குமா? Will you get Moksha if you go to  Kashi?
அஸி, கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். 

இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. 

மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.

ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! 

இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!

அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். 
தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

 இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.

இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று 
‘ கங்கா லாப் பவன் ’! 
இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.

அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். 

கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். 

முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.

ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது.

 அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே ...
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. 

அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது , உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, 

ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.

இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. 

அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். 

எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!

காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக 
‘அணையாத தீபம்’ 
எரிந்து கொண்டிருக்கிறது. 

அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள்.

தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. 

யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.

விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு.

தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.

அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.

கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு - மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் 
‘மணிகர்ணிகா கட்’ 
உள்ளது. 

இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். 

வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.

இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். 

அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.

அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். 

அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.

அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள்.

 அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். 

மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.

இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த 
‘அரிச்சந்திர கட்’ 
கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. 

இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது.

 அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 
‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ 
என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கிறது.

காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! 

நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை 

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

உலகில்_ஆறாயிரம்_ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 May be an image of text

உலகில்_ஆறாயிரம்_ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?
 
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.
 உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று  உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" உலகில்  பழமையான ...
ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
 
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*”The World’s only living civilization”*
 
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
“The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
 
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.
 Madurai Meenakshi Temple and... building.. | மதுரை மீனாட்சி ஆலயமும்...  கட்டிடமும்..
இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.
 
இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
 மதுரை மாநகரில் மக்களை துரத்தும் கரோனா | corona in madurai - hindutamil.in
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 Village Panchayats Merging with Madurai Corporation : மதுரை மாநகராட்சியுடன்  இணையும் 13 கிராம ஊராட்சி, ஒரு பேருராட்சி : முழு பட்டியல் இதோ..! | Times Now  Tamil
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
 
ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு *”தூங்கா நகரம்”* 
 
என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
 தூங்காநகரம் – மதுரையின் சிறப்புகள் | LINGESH
*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!..
*மதுரை* *மதுரை* *தான்*
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

‘’உயர்ந்த எண்ணமே நல்வாழ்வைத் தரும்.,’’

மணக்கால் அய்யம்பேட்டை | 11:33 AM | Best Blogger Tips

 🙏🏻நற்காலை
      வணக்கம்🙏🏻

‘’உயர்ந்த எண்ணமே நல்வாழ்வைத் தரும்.,’’

உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது. 
உங்கள் எண்ணங்களே உங்களை உயர்விக்கும்!
இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.
உங்கள் வாழ்க்கையை மீண்டும் இயக்க 6 மாற்றும் எண்ணங்கள் » பிரம்மா குமாரிகள்
சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது. 
How to gain momentum in life through thoughts?
இதற்கெல்லாம் அடிப்படை என்ன  என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.
எண்ணம் போல் வாழ்க்கை | Nadi
நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும். 

கெடுதலான எண்ணங்கள்
கெடுதலான செயல்களில் முடியும். எண்ணங்கள் செயல்களாகும். 
எண்ணங்களின் சக்தி: வாழ்க்கையை மாற்றும் எண்ணம் - உங்கள் சிந்தனைகள் உங்கள்  வாழ்வை எப்படி நிர்ணயிக்கின்றன? The Power of Thoughts: Life-Changing  Thoughts - How Do Your ...
செயல்கள் பழக்க வழக்கங்களாகும். பழக்க வழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..

ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மீது நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பையன் கல் தடுக்கி கீழ விழுந்து விட்டான்...

அடிபட்டதனால் அவன்
''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்தினான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்தின மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்பக் கேட்டுது..

எண்ணம் போல் வாழ்க்கை ... வார்த்தை இல்லங்க வாழ்க்கை - மனிதன்
பையன் சத்தம் வரும் திசையைப் பார்த்து,'நீ யார்'' என்று சத்தமாகக் கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கத்தில் இருந்து' நீ யார்''னு கேட்டுது.

பையன், ''
நான் உன்னை விரும்புகிறேன்'' என்று சொன்னான். அந்தப் பக்கமும் அதே வார்த்தை திரும்ப வந்தது..
எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாக மாறும்..
பையன் '' நீ ஒரு கோழை" என்று சொன்னான்.அதே வார்த்தை திருப்பிக் கேட்டுது.. பையனுக்கு ஒரே ஆச்சரியம். அவனின் அப்பாவிடம்  கேட்டான்...

''
அது யாருப்பா அவன்.., நான் சொல்வதை எல்லாம் திரும்பச் சொல்றானே'' ன்னு கேட்டான். 
எண்ணம் போல் வாழ்க்கை ... வார்த்தை ...
அவனின் தந்தை சொன்னார். அது யாரும் இல்லை. அது உன் பேச்சின் எதிரொலி என்று சொல்லி விட்டு இதைப் போலத்தான் நம் வாழ்க்கை என்று சொன்னார்..

அப்பா சொன்னார்,' '
நீ என்ன எல்லாம் கொடுக்கிறாயோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும்.

உன் பழக்கவழக்கம் எப்படி இருக்கின்றதோ, அது மாதிரி தான்  உன்னிடத்தில்
பழகுகின்றவர்களும் இருப்பார்கள்..
நம் வெற்றிக்கான எண்ணங்கள்... | Thoughts on our success
உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையைத் தான் உனக்குக் கொடுக்கும்.
நல்ல எண்ணங்கள் மகத்தான நல் வாழ்வை தரும்..!" - உயர்ந்த எண்ணம் கொள்.. - Deep  Talks Tamil
நீ உன்னைச் சுற்றி இருக்கிறதை ரசித்தாய் என்றால் வாழ்க்கையும் உன்னை ரொம்ப ரசிக்கும்படியாக வைத்து இருக்கும் 

 

'' உன் 
உயர்ந்தஎண்ணமே 
நல்வாழ்வைத்தரும்* 

எண்ணம் போல் வாழ்க்கை…! | Rammalar's Weblog
🌹இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்🌹

 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 

May be an image of 1 person, smiling and tree 

  🌷 🌷🌷 🌷

எல்லாம் அதுவாகவே சரியாகும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:02 AM | Best Blogger Tips

எல்லாம் அதுவாகவே சரியாகும்
 
எல்லாம் அதுவாகவே சரியாகும். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதுவும் ஒரு பிரபஞ்ச ரகசியமே.
  May be an image of climbing and mountain
எப்படி ?
 
எந்த ஒரு நிகழ்வும் இங்கு நிலைத்து நிற்பதில்லை என்பது நம் எல்லோருக்கும்
தெரியும்.
 
மாற்றம் ஒன்றே மாறாதது.
 Expecting The Best Of ALLAH – Goodness Of God - Heal your mind, body and  soul
ஆனால், நாம் தான் சில நல்ல, அல்லது கெட்ட நிகழ்வுகளையோ, பொருட்களையோ, நபர்களையோ பிடித்து வைத்துக்கொண்டு, புலம்பி அமைதி இழந்து திரிகின்றோம்.
 
இது எல்லாமே நமது எண்ணப்பதிவுகள் மட்டுமே என்பதை தெளிவாகஉணர்ந்து கொள்வோம்.
ஒருவரைப்பற்றி தப்பான அபிப்ராயம் வச்சிருப்போம். அந்த நிமிடத்தில் அவர் அப்படி இருந்திருக்கலாம்.
 
ஆனால், அடுத்த நொடியே அவர் தவற்றை உணர்ந்து திருந்தியும் இருப்பார்.ஆனால், நாம் தான் நமது மனதில் "அவர் தப்பானவர் தான் என எண்ணத்தில் பதிந்து கொண்டு, அவரைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து பேசியும், வம்பு இழுத்துக் கொண்டும், மனதில் வன்மம் கொண்டும் திரிவோம்.
 
இதில் கூடுதலாக நல்லவருக்கு காலமில்லை என்று காலத்தை வேறு திட்டுவோம்.
 The Unparalleled Oneness of Allah
நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். காலம் எனும் கடவுள், பேராற்றல் எல்லாவற்றையும் மிகத்துல்லிதமாக செய்பவர் என்பதை.
 
அதனால், தேவையற்ற எந்த ஒரு எண்ணப்பதிவையும் மனதில் வைக்காமல் இருக்கத்தான் இந்த பிரபஞ்ச ரகசியம்.
 
எல்லாம் அதுவாகவே சரியாகும்
என்பதை நன்கு மனதில் பதிவிடுங்கள்.
ஆழ் மனதில் பதிய வேண்டும்.
 
எந்த ஒரு பிரச்சனையும், நோயும்,
வறுமையும் கூட தானே சரியாகும்
என்பதை முதலில் நம்ப வேண்டும்.
 
எல்லாம் அதுவாகவே சரியாகும் என்கிற போதே அது எப்படி ?அப்புறம் நாம எதுக்கு இருக்கோம் ?இப்படி பல கேள்விகள்
நம்மை குழப்பும்.
 செகாவ் கதைகள் #24 - வார்டு எண் 6 - 2 ...
ஆனாலும், மனதிற்குள் ஆழமாக பதிவு செய்து கொள்ளுங்கள். எல்லாம் அதுவாகவே சரியாகும்.எல்லாம் தானாகவே சரியாகும் என்ற affirmation நேர்மறை எண்ணத்தை.
 
உதாரணத்திற்கு, உடலுக்கு காய்ச்சல் வந்துவிட்டால், நிச்சயமாக உடல் தானே தன்னை சரி செய்து கொள்ளும் என்ற ரகசியம் தெரிந்தவர்கள் உணவை நிறுத்தி, ஓய்வெடுத்து ஓரேநாளில் சரியாகி விடுவார்கள்.
 
ஆனால், அந்த ரகசியம் தெரியாத பலரும், அய்யோ, காய்ச்சலேன்னு பயந்து, பதறி, மருந்து, மாத்திரைன்னு முழுங்கி, இரண்டு நாளில் அதுவே, தானாக சரியாகும் காய்ச்சலை ஒருவாரத்திற்கு இழுத்து கஷ்டப்படுவார்கள்.
 
அப்படி எல்லாம் எதற்காகவும் பதறவேண்டாம்.
அதற்காகத் தான் இந்த மாபெரும் ரகசியமான எல்லாம் அதுவாகவே சரியாகும் என்ற தாரக மந்திரம்.
 
இங்கு நடப்பது எல்லாம் தானே தான் நடந்து கொண்டிருக்கிறது, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் என்பது தானே
மாபெரும் உண்மை.
 
எல்லாம் தானே நடக்கும் என்றால், 
 
மனம், எண்ணம் இதெல்லாம் எதற்கு ?
என்ற கேள்வி தோன்றும்!
 
உதாரணத்திற்கு, மிகப்பெரிய சொத்து தகராறு உங்கள் குடும்பத்தில் வருகிறது எனில், அதனை சண்டை, சச்சரவு என ஆக்கிக் கொண்டே போனால் சின்ன பிரச்சனை பெரிதாகி நிற்கும்.
 
ஆனால், கொஞ்சம் பொறுமையாக இருந்தால், எல்லோருக்குமே மனமாற்றம் என்பது தானே நிகழும். புரிதல் வரும். யாருக்கேனும் தேவை வரும். அப்போது மாற்றங்கள் தானே நிகழும்.
 
 அந்த பிரச்சனை செய்த உறவே, தானே வந்து நிற்கும்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
 
இப்படித் தான் நாம் கொஞ்சம் மட்டுமே அமைதியும், பொறுமையும் கொண்டு எந்த ஒரு நிலையிலும் எல்லாம் அதுவாகவே சரியாகும் என மனதிற்குள் கூறிக்கொண்டே இருந்தால் போதும்.
 
எல்லா மாற்றங்களும், தேவைகளும் தானே இயல்பாக நடக்கும் அதிசயம் புரியும்.
 
Thougt force.
 
ஒவ்வொரு பிரச்சனைகளும் தானே காணாமல் போகும். 
 
சண்டை சச்சரவுகள் வரும்போதெல்லாம், தயவுசெய்து எதிர்த்து நின்று பேச்சுக்களை வளர்க்காமல் ஒதுங்கி விடுங்கள். 
 
நாம் சகித்துக் கொண்டு போவதால் கோழையல்ல .விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே நல்லா இருப்பாங்கன்னு அர்த்தம்.
 
எது நடந்த போதும் மனதிற்குள் இந்த எண்ணத்தை ஆழமாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் அதுவாகவே சரியாகும் என.
 
ஆழ் மனதில் பதிந்த இந்த எண்ணம் பிரபஞ்சமெல்லாம் பரவி, எது சரியோ, அதற்கு சரியான நபரையோ, சூழ்நிலையையோ ஏற்படுத்தி, என்ன நடக்க வேண்டுமோ அதை சரியாக நிகழ்த்தும்.
 
பிரபஞ்சத்தமிழ்.
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

  🌷 🌷🌷 🌷

 

யார் இந்த யோகி ஆதித்யநாத்?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips

 பிரான்ஸ் கலவரத்தை அடக்க யோகி ஆதித்யநாத் வேண்டும்' -யோகம் சேர்க்கும் 'யோகி  மாடல்'! | France needs yogi adityanath to control riots - kamadenu tamil

கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக யோகி ஆதித்யநாத் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக வேண்டும் என்பதற்கான ஆதரவு சென்ற ஆண்டு முதலே பரவலாகக் காணப்பட்டது.

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், facebook adityanath

 

 இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோரக்நாத் ஆலயத்தால் நடத்தப்பட்டுவரும் கல்லூரியின் சில மாணவர்கள், துணி வாங்க கடைக்கு வந்தபோது, கடைக்காரருடன் சச்சரவு ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. கடைக்காரர் கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.

அயோத்தியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார் 

சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ஒரு சன்னியாசியின் தலைமையில், கடைக்காரருக்கு எதிராக தீவிரமான போராட்டம் வெடித்ததாக அந்த பகுதியின் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அந்த சன்னியாசி வேறு யாருமில்லை, யோகி ஆதித்யநாத் தான். இந்த சம்பவத்திற்கு சிறிது காலத்திற்கு முன்பு, அதாவது, 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தான் "நாத் சம்பிரதாயத்தின்" தலைமை மடமான கோரக்பூர் ஆலயத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டு, தனது குருவான அவைத்யநாத்திடம் தீக்க்ஷை பெற்றார்.நரேந்திர மோடியுடன் யோகி ஆதித்யநாத்பட மூலாதாரம், WWW.YOGIADITYANATH.IN

 கோபக் கனல் வீசும் இளைஞராக, கோரக்பூரின் அரசியலில் யோகி ஆதித்யநாத் அதிரடியாக நுழைந்தார். 

UP Chief Minister Yogi Adityanath Turns Emotional Upon Talking About His  Family | உ.பி.-யின் கர்ம வீரர் யோகி ஆதித்யநாத். இந்த முதல்வரின் குடும்பம்  எப்படி வாழ்கிறது தெரியுமா ... 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷