*எங்கிருந்தோ வந்தான்*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips

May be an image of 1 person

முதல்வர் : 12 ஆண்டுகள்
 
பிரதமர் : 11 ஆண்டுகள்
 
*ஊழல் : 0*
 
*சொத்து : 0*
 
*குடும்பத்திற்கான நன்மைகள் : 0*
 
மிகப்பெரிய குற்றச்சாட்டு : *ஒரு தீவிர தேசபக்தர்.*
 
நாட்டின் ஒரே தலைவர் *செல்வம் பெருகவும் இல்லை, குறையவும் இல்லை.*
 
குஜராத்தை விட்டு வெளியேறும் போது *தனது 15 வருட சம்பளத்தை நன்கொடையாக அளித்ததோடு, தற்போது தனது பெயரில் உள்ள ஒரே சொத்தையும் தானமாக அளித்துள்ளார்.*
 
*அத்தகைய தேச ஊழியரை நினைத்து நாட்டு மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.* 
 From Struggling in Flooded House to Road in Her Name: 100-yr Journey of Modi's  Mother on Her B'day | Politics News - News18
*ஒரு நாள் கூட லீவ் எடுத்தது இல்லை. தனது அம்மா இறந்த உடன் உடலை எரித்து விட்டு பிரதமர் அலுவலகம் வந்து தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் !*
👌
*இப்படி ஒரு தலைவர் இதுவரை இருந்ததில்லை.*
 
*தேசபக்தி, மதபக்தி, ஆன்மீகம், தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு சிறந்த ஆளுமைக்கு வணக்கம்.*
🙏
*பொது நாலனுக்காக போற்றுவோர் போற்றட்டும்.*
 
*சுயநலனுக்காக தூற்றுவோர் தூற்றிக் கொண்டே இருக்கட்டும்.*
 Heeraben Modi passes away: Heart-warming pictures of PM Narendra Modi with  his mother
*எங்கிருந்தோ வந்தான்*
 
*இடை சாதி நான் என்றான்*
 
*இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..✍️* *நரேந்திர தாமோதர தாஸ்* *மோடி ஜி நமது பாரதம்* *காக்க*
 
*எங்கிருந்தோ வந்தார்*
 
🙏🙏🙏🙏🙏🙏🙏*

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, practising yoga, segway, grass and street🌷 🌷🌷 🌷

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரண்டு பிள்ளைகளுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:02 AM | Best Blogger Tips

May be pop art of text 

ஆயிரம் #உறவுகள் அருகில் இருந்தாலும் ஆண் பிள்ளைகளுக்கு அம்மா இருந்தது போல் இருக்காது...
 
பெண் பிள்ளைகளுக்கு அப்பா இருந்தது போல் இருக்காது...
 
ஒரு #ஆண் பிள்ளைகளை அப்பா திட்டும் போது அம்மா தோள் மீது சாய்த்து கொள்வான்..‌
 
ஒரு #பெண் பிள்ளைகளை அம்மா திட்டும் போது அப்பா தோள் மீது சாய்ந்து கொள்ளுவாள்.....
 
ஆண் பிள்ளைகள் மீது அப்பா அதிகம் பாசம் காட்ட மாட்டார் .. இதற்கடுத்தாலும் திட்டுவார் ஏனென்றால் நான் பட்ட கஷ்டம் நீயும் படக்கூடாது என்ற காரணத்திற்காக 
 
அப்பா அடிக்கடி திட்டுவார் அது நம்முடைய நன்மைக்கு தான் என்று புரியாமல் அப்பா மீது ஆண் பிள்ளைகளுக்கு பாசம் குறைவாக இருக்கும்
 
ஆனால் அப்பா எப்போதும் பாசத்துடன் இருப்பார் மனதுக்குள்... நீ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறும்போது முதலில் ஆனந்தக் கண்ணீர் வடிப்பது உன்னுடைய அப்பாவாகத்தான் இருக்கும் என் பிள்ளை ஜெயிச்சுட்டாடா என்று...
 
பெண் பிள்ளைகள் மீது அம்மா அதிகம் பாசம் காட்ட மாட்டார்கள்..
 
அதற்காக பாசம் இல்லாமல் இல்லை அம்மாவும் அதிக பாசத்துடன் வளர்ப்பாள் 
 
இவ்வளவு பாசத்துடன் வளர்த்த பிள்ளை வேறொரு வீட்டுக்கு திருமணம் முடித்துப் போகும் போது அவளாள் தாங்கிக் கொள்ள முடியாது..
 
அம்மாக்கு தான் நல்லது எது? கெட்டது எது ??என்று எல்லாம் தெரியும் அதனால் தான் அம்மா பெண் பிள்ளைகளை அதிகமாக கண்டிப்பாள் அது பெண் பிள்ளைகளுக்கு பிடிக்காமல் அப்பா மீது பாசத்தை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்..
 
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரண்டு பிள்ளைகளுமே ஒன்றுதான்.....
 
 

சனிதோஷ நிவர்த்தி செய்யும் திருநறையூர் மங்கள சனீஸ்வரர்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:04 PM | Best Blogger Tips

 20201123233053121.jpeg


 நாச்சியார் கோவில் அருகே திருநரையூர் ஸ்ரீ மங்கள சனி பகவான் தனது மனைவிகள், மந்தா தேவி, ஜேஷ்டா தேவி, குழந்தைகள் மாந்தி, குளிகன் இவர்களுடன் குடும்ப சகிதமாக அருள் பாலிக்கும் அற்புதமான ஸ்தலத்தை  தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம்... வாருங்கள் 
 
இந்த சனீஸ்வரரின் புராணத்தை கேட்போம்...

திருநரையூர் மங்கள சனீஸ்வரர்...
 
கும்பகோணத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள ஊர் திருநரையூர். 
 
இங்கு சிவபெருமான் இராமநாத ஸ்வாமி என்ற பெயருடன் கோவில் கொண்டுள்ளார்.
 
இத்திருக்கோவிலில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு சனீஸ்வரர் தன் இரு மனைவியர்களுடன் மந்த தேவி, ஜேயேஷ்ட தேவி காட்சி தருகிறார். மேலும் தன் இரு மகன்களாகிய குளிகன் மற்றும் மாந்தியுடன் அருள் பாலிக்கிறார்.
 
இவர்கள் அனைவரையும் ராமரின் தந்தை தசரத மஹா ராஜா கை கூப்பி வணங்கிய வண்ணமாக இருப்பதை நாம் காணலாம்.
 
இப்படியாக சனீபகவான் குடும்ப சகிதமாககாட்சி அளிப்பதால் மங்கள சனீஸ்வரராகப் போற்றப்படுகிறார். இங்கு சனீஸ்வரர் உஞ்ஞாழி [சந்நதி] எதிரில் ஒரு தனி கொடி மரமும் உள்ளது. 
 
இதுவும் வேறெங்கும் காண முடியாத ஒன்று. இந்த மங்கள சனீஸ்வரரை வணங்கினால் சனியினால் ஒருவருக்கு வர இருக்கும் தீமைகள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம். எண்ணற்ற மக்கள் திருநரையூர் வந்து மங்கள சனீஸ்வரரை வணங்கி செல்கின்றனர். இத்திருக் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி "மேதா தட்சணாமூர்த்தி" யாக இருக்கிறார். 
 
பக்தர்கள் தம் பிள்ளைகளின் கல்வி மேம்பட அவரின் திருவடிகளில் குறிப்பேடுகள் மற்றும் எழுது கோல்கள் ஆகியவற்றை வைத்து வழிபடு வழக்கத்தில் உள்ளது.
 

 Thanks to  Hari Haran B

 வரலாறு

நவகிரகங்களுக்குள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வம் சனீஸ்வர பகவான் ஆவார். நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர். சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்த பொழுதே இருகரங்கள் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர் 

மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் “ஆயுள்காரகர்” எனப்படுகிறார். “சனைச்சரன்” (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயரும் உண்டு, மற்றும் மந்தன், காரி, முடவன் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உள்ளது.

நவகிரகங்களில் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட நம்பிக்கை.

20201123232916853.jpeg

“சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், சனீஸ்வரர் என்றால் பயப்படுகின்றோம். ஆனால் இவர் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிபதி போல செயல்பட்டு, அதற்கேற்ற பலன்களை தருபவர். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக் கண்டு பயப்படுகிறார்கள்.

 

சனிஸ்வரர் பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் நவகிரகங்களில் ஒருவராகவும், சில ஆலயங்களில் தனிச்சந்நிதி கொண்டும் அருள்பாலிப்பவர்.

20201123233053121.jpeg

திருநறையூர் ஸ்ரீ பர்வதவர்தினி சமேத இராமநாத சுவாமி திருக்கோயிலில் எங்கும் காணக்கிடைக்காத சனீஸ்வரர் தனி சந்நிதியில் தனது இரண்டு தேவியரான மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடனும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராக அருள்பாலிக்கின்றார். இந்த கோயில் சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். எனவே சனிதிசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோயில்ஆகும்.

ஸ்தல அமைப்பு:

ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான அருள்மிகு இராமநாதர் திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கோபுர வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் அருள்மிகு இராமநாத சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பாள் பார்வதவர்தினி தெற்கு முகமாக நோக்கியும் அருள்புரிகின்றனர். இராமேஸ்வரத்தை தரிசிக்க முடியாத பல பக்தர்கள், தங்கள் பரிகாரங்களை இங்கேயே செய்கிறார்கள்.

இந்த கோயிலில், மூலவருக்கு பலி பீடமோ, த்வஜஸ்தம்பமோ கிடையாது. ஆனால், இங்கு தனி சந்நிதியில் சனீஸ்வரருக்கு ஆகமவிதிப்படி இரும்பினால் ஆன த்வஜஸ்தம்பம், பலி பீடம், மற்றும் சந்நிதி முன் காக வாகனமும் அமைந்துள்ளது. இந்த சனீஸ்வர சந்நிதியை வலம் வருவதற்கு பிரகாரம் உள்ளது. ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரத சக்கரவர்த்தி இவர்களை வணங்கியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனருடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, அண்ணாமலையார், பிரம்மா, துர்காதேவி, சண்டிகேஸ்வரர், ஹனுமந்த லிங்கம் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது. இங்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவான் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது சிறப்பாகும்.

ஸ்தல விருட்சம் : எருக்கு
ஸ்தல தீர்த்தம் : இராமதீர்த்தம்.

20201123233211178.jpeg

ஸ்தல வரலாறு:

அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்தி தன்னை பாதித்திருக்கும் பிணி தீர இங்கு இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும், சனி பகவானையும் வழிபட்டு நிவாரணம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதேபோல் ஸ்ரீஇராமரும், இராவண வதம் முடிந்த பிறகு, அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். அனுமனும் இவ்வாலய சிறப்புணர்ந்து இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, சிவ வழிபாடு செய்திருக்கிறார். அந்த லிங்கம் ‘ஹனுமந்த லிங்கம்’ என்கிற பெயரில் அழைக்கப்படுவதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. இந்த ஹனுமந்த லிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றது.

ஸ்தல பெருமை:

இந்த இராமநாதர் திருக்கோயில் சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகாரக் கோவிலாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் எந்தவிதமான சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட நாட்கள் நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார ஸ்தலமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

இங்குள்ள சனீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனிஸ்வரரின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று வேறெங்கும் காண முடியாத உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாணமும், திருவீதி உலா வருவதும் சிறப்பு.

தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர்.
இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஏப்ரல் மாதத்தில் நேரடியாக விழுகின்றன.

சனீஸ்வரர் வழிபாடு:

சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 7:30 மணிக்குள் மாந்திக்கும், 9 முதல் 10:30 மணிக்குள் சனி பகவானுக்கும் நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

இத்திருக்கோயிலில் குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வர்ணத்தில் வஸ்திரம் சமர்ப்பித்து, அத்துடன் தேவிகளுக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து, பூமாலை அணிவித்து, நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்மச் சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

கோயில் திருவிழாக்கள்:

பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம். சனிப்பெயர்ச்சி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இதைதவிர, தினமும் குளிகை நேரத்தில் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயிலுக்கு செல்லும் வழி:

கும்பகோணம் - திருவாரூர் பஸ் பாதையில் கும்பகோணத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள திருநறையூரில் ஶ்ரீ ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர், கொரடச்சேரி, நன்னிலம், நாகப்பட்டினம், இராவஞ்சேரி மற்றும் திருவிடச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் திருநறையூர் வழியாக செல்கின்றன.

மேலும் விபரங்களுக்கு...
திரு. ஞானசேகர சிவாச்சாரியார் - 09442420420

சனி பகவான் கிரகஸ்துதி:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்:

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

சனி பகவான் காயத்ரி:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

இந்த சனி பெயர்ச்சி நன்னாளில் திருநறையூர் குடும்ப சமேதராக உள்ள மங்கள சனீஸ்வர பகவானை தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!

 Thanks to vikatakavi

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

வாழ்க்கை இவ்வளவுதானா.........!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips

London-bound Air India plane with 242 people on board crashes soon after  take-off | The Straits Times

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️


வாழ்க்கைப் பயணம்!


திட்டமிட்ட பயணம்
எத்தனை நாட்கள் முன்பு 
எவ்வளவு ஆசைகள்!
எத்தனை கனவுகள்! 
எத்தனை விதமான மனிதர்கள்!
After Air India plane crash, Ahmedabad Airport shuts temporarily; multiple  flights cancelled
தொடங்கிய பயணம்
தொடரவே இல்லை!

தொடங்கியவுடன்
முடிந்தது!

எத்தனை மனிதர்கள் 
இவர்களுக்காக
காத்திருந்தார்கள்! ...

வாழ்க்கை 
இவ்வளவுதானா?

மனதை உலுக்கிய 
மரணங்கள்!

கடைசி நேரத்தில் 
எப்படித் துடித்திருப்பார்கள்?

எந்தக் ........
காப்பாற்ற
முன் வரவில்லையே?

இவர்கள் 
அனைவருக்கும் 
என்ன
ஒரே ...............?
‘Everything happened in front of my eyes’: Lone survivor of Ahmedabad plane  crash
வாழ்க்கை 
இவ்வளவுதான்!

🔷🔷🔷

What led to the Air India plane crash in Ahmedabad? Experts weigh in |  Latest News India - Hindustan TimesAt least 290 killed in Air India crash | CNNAir India plane crash: PM Modi visits crash site, hospital in Ahmedabad;  bodies of 5 victims handed over to families - India Today May be an image of 4 people and people smilingMay be an image of 2 people, people smiling and textMay be an image of 3 people, people smiling and treeMay be an image of 2 people and people smilingMay be an image of 2 people, child and people smilingMay be an image of 2 people, beard and aircraftMay be an image of 10 people, people smiling, biryani and textMay be an image of 2 people and people smilingMay be an image of 1 person and aircraftMay be an image of 6 people and aircraftMay be an image of 1 person and aircraftMay be an image of 2 people and people smiling

மொபைல்_மட்டுமே_வாழ்க்கை_அல்ல....?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:48 PM | Best Blogger Tips

அந்தப் பெண்மணி ஓர் ஆசிரியை. 
அன்றைக்கு இரவுச் சாப்பாடு
 முடிந்த பிறகு, வகுப்பு மாணவர்கள் எழுதிக் கொடுத்திருந்த விடைத்தாள்களைத் திருத்த உட்கார்ந்தார். அவருடைய கணவர் 
அவருக்கு எதிரே ஒரு மேசையிலமர்ந்து தன் கையிலிருந்த கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தார்.

 
சிறிது நேரம் போனது. 

அவர் யதேச்சையாகத் திரும்பி 
தன் மனைவியைப் பார்த்தார். 


கண்களில் நீர் திரள, தன் கையிலிருந்த ஒரு விடைத்தாளையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட கணவர் அவரருகே போனார்.

"ஏய்... என்னாச்சு?’’
Top 10 reasons why technology has made school a waste of time… | by Trinity  Rosa | Medium
"நேத்து நாலாம் வகுப்பு
படிக்கிற பசங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தேன்.
`என்னோட ஆசை’னு 
ஒரு தலைப்புக் கொடுத்து, 'என்ன தோணுதோ எழுதிட்டு வாங்க’ னு
சொல்லியிருந்தேன்...’’

"சரி... அதுக்கும் நீ கண்கலங்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ கையிலவெச்சிருக்குற பேப்பர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?’’

"படிக்கிறேன்... கேட்குறீங்களா?’’

தலையசைத்தார் கணவர்,  ஆசிரியை படிக்க ஆரம்பித்தார். 

அதில் ஒரு மாணவன்  இப்படி எழுதியிருந்தான்...
 "நான் ஒரு கைபேசியாகணும்கிறதுதான் என்னோட ஆசை.  ஏன்னா, என்னோட அம்மா, அப்பாவுக்கு கைபேசி ரொம்பப் பிடிச்சிருக்கு.  

 Mobile phone use can worsen heart disease in smokers, diabetics: Study -  The Statesman

சில நேரங்கள்ல  என்னை கவனிச்சுக்கிறதைக்கூட மறந்துட்டு, போனை அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க. அப்பா அலுவலகத்திலிருந்து களைச்சுப் போய் வருவாரு;  என்கூடப் பேசுறதுக்கு நேரமில்லைன்னாக்கூட, கைபேசியில்
பேசுறதுக்கு அவருக்கு நேரமிருக்கு.
 

அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சுறுசுறுப்பான வேலையில இருந்தாலும், 
கைபேசி மணி அடிச்சாப் போதும், ஓடிப்போய் எடுத்துடுறாங்க; 

பல நேரங்கள்ல நான் சத்தமாக் கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. கைபேசியில் ஏதாவது ஒரு
விளையாட்டை  விளையாடுறாங்களே தவிர, என்கூட அதிகமா விளையாடுறதில்லை. அவங்க யாரோடயாவது  கைபேசியில் பேசிக்கிட்டிருக்கும்போது, எவ்வளவு
 முக்கியமான விஷயமா இருந்தாலும் 
நான் சொல்றது அவங்க காதுல விழுறது இல்லை

அதனால, அம்மாவும் அப்பாவும் 
என்னையும் கவனிக்கணும்கிறதுக்காக 
நான் ஒரு கைபேசி ஆகணும்னு ஆசைப்படுறேன்...’’
உங்கள் மொபைல் போன் உங்கள் இதயத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறதா? புதிய ஆய்வு இருதய  நோய்க்கான இணைப்பை பரிந்துரைக்கிறது
இதைக் கேட்ட கணவரும் 
நெகிழ்ந்துதான் போனார்.

 "சரி... இதை யார் எழுதியிருக்குறது?’’

"நம்ம வீட்டு பையன்தான்.’’

#நீதி

பிள்ளைகளுக்கு  விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமே
பாசம்ன்னு 
நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களே
...!

பிள்ளைகளுக்கு தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்..

உங்கள் கைபேசியை 
சற்றே ஒதுக்கி வையுங்கள். 
UPenn Offers "Wasting Time On The Internet" Class | Ravishly
பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அவர்கள் எதிர்காலத்தில் 
எந்த
தவறும் செய்யாமல் சிறந்து விளங்க உதவும்.  வயதான காலத்தில் 
உங்களுக்கான முக்கியத்துவம்
உங்களுக்கு கிடைக்கும்...

இணையத்தில் கண்ணில் பட்டது...


🤷

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

நன்றி மறவாத குணம், பண்புகளில் உயர்வானது

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips


நன்றி மறவாத குணம்,
பண்புகளில் உயர்வானது.

உண்மையின்
எடை அதிகம்
அதனால் அதை.
சுமப்பவர்களின்
எண்ணிக்கை  மிக குறைவு.

கெட்ட வழியில்
செல்வோரை
திருத்துபவர்களை
விட.
அதனை
ஊக்குவிப்பவர்கள்
அதிகமாகிவிட்டனர்
.

உங்களை நீங்களே
மதித்துக்கொள்வது
ஆணவம்.
பிறர்  உங்களை
மதிப்பது 
பெருமை.

தேடிக் கொண்டே
வாழாதே
....
வாழ்ந்து கொண்டே
தேடு ..

இதில் தான்
வாழ்க்கை
பயணமாகிறது
..

அதிகாரம் என்ற பெயரில் உனது திறமைகளை 
தடை செய்யும்போது...
சுதந்திரமும் 
அடிமையா
கிறது.

எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆடத் தெரியாத மயில்கள் இல்லை, கூவத் தெரியாத குயில்கள் இல்லை,
நீந்த தெரியாத மீன்கள் இல்லை,
ஓடத் தெரியாத மான்கள் இல்லை, ஆனால்,

வாழத் தெரியாத மனிதன் இருக்கிறான். வாழத் தெரியாமலேயே மாண்டு விடுகிறான்.

 பழிதீர்க்கும் மனப்பான்மை நெருப்பைப் போல நெஞ்சை எரிக்கும்..
மன்னிக்கும் மனபக்குவம் நீரைப் போல நெஞ்சை குளிர்விக்கும்..

 
இருப்பது போதுமென்று நீங்கள் நினைத்தால்,
உங்களுக்கு
நிம்மதி உறுதியாக இருக்கும்...

 மனிதனின் விரல்கள் அனைத்தும் சமமில்லை.
ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எல்லா மனிதனும் நல்லவனும் இல்லை.

நமக்குள்
வெறுமையான இடத்தில்
முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக்
கொள்வோம்.
இல்லையெனில் அந்த
இடங்களில்
பிரச்சனைகள் தானாக
நிரம்பிக் கொள்ளும் 

 

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷