ஆனால் இன்று பண ஆசையை காட்டி பலர் மக்களுக்கு சேவை வழங்குவது போல் தொலைக்காட்ச்சியில் வர ஆரம்பித்து விட்டனர், அப்படி வருபவர்களில் முதன்மையானவர்கள் மக்கள் தொலைக்காட்ச்சியில் வருபவர்கள் தான். அவர்களுடைய நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் ஏதோ சேவை மனப்பான்மையுடன்தான் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பது போல் இருக்கும் ஆனால் அவர்களுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால் தொட்டதர்க்கெல்லாம் பணம் கேட்டு உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். எனக்கு தொலைக்காட்ச்சியில் இவர்களை பார்த்தால் இவர்களுக்கு யாருமே முடிவு கட்ட மாட்டார்களா என்று தான் தோன்றும். ஆனால் இப்போது இவர்களுக்குத்தானே காலம், யார் தட்டிக்கேட்ப்பார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்று சொல்லித்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். சரி நாம் ஏதேனும் முயற்சி செய்வோமே என்று நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு.
இணையதளத்தில் கூட பலர் பங்குசந்தை பற்றி உதவுவதாக கூறிக்கொண்டு உலா வருகின்றனர். ஆனால் அவர்களும் பங்குசந்தை பற்றிய வகுப்பு எடுக்கிறோம், சிடி விற்பனை செய்கிறோம் என்று பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கின்றனர். உண்மை என்னவென்றால் அவர்களுக்கே பங்குசந்தை பற்றிய முழுமையான அறிவு இருக்காது இல்லை பங்கு சந்தையில் பணம் விட்டு இருப்பார்கள். விட்ட பணத்தை எடுத்துவிட உங்களுக்கு உதவுவதாக கூறி ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சி டி யை வாங்கி நூறு பிரின்ட் போட்டு உங்களிடம் ஒரு சி டி ஆயிரம் ரூபாய் என்று விற்று விடுவார்கள். ஆனால் அந்த சி டி யில் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.
எனக்கு பங்குசந்தையில் தெரிந்தவரை உங்களுக்கு கூறுகிறேன் பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.
பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு 3 . அதிர்ஷ்ட்டம்.
1 . பொறுமை காத்தல்
இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று, எந்த ஒரு நேரத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இன்று சில பங்குசந்தை தரகர்களே புதியவர்களுக்கு உதவுவதாக கூறி தினவர்த்தகத்தில் ஈடுப்பட வைப்பதே நிஜம். காரணம் அவர்களுக்கு கமிஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இது தெரியாத வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் போல என்று நினைத்து அவர்கள் சொல்லுவதர்க்கேல்லாம் தலையாட்டிவிட்டு பணம் போனப்பின் தனது தவறை நினைத்து வருந்துவார்கள். பங்குசந்தையில் பணம் ஈட்டுவதை விட தனது கையில் உள்ள பணத்தை பாதுக்காப்பதே சிறந்தது அதற்க்கு மிக முக்கியமான ஒன்று பொறுமை.
2 . கற்றல் அறிவு
ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று. பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை கற்றுக்கொடுக்க இன்று தகுதியான இடம் தமிழகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் நான் பார்த்தவரை பணம் பண்ணுவதில் தான் கருத்தாக இருக்கிறார்கள்.
3 . அதிர்ஷ்ட்டம்
என்னதான் தொழில்நுட்ப பகுப்பாய்வை கறைத்து குடித்திருந்தாலும் அதிர்ஷ்ட்டம் பங்குசந்தையில் கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும். அதுவும் தின வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு 99 சதவிகிதம் இது கட்டாயம் தேவை. ஏன் என்றால் நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரே நிமிடத்தில் நாம் வாங்கிய பங்கு படு வீழ்ச்சியை அடைய வாய்ப்பு உள்ளது அதற்க்கான காரணத்தை ஆராய்ந்தால் 75 % புரளியாகத்தான் இருக்கும். அதையும் மீறி வேறு ஒரு காரணம் இருக்கும் என்றால் வெளிநாட்டில் ஏதோ ஒரு சம்பவத்தை கூறுவார்கள். இதனால் கண்டிப்பாக பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.
பங்குசந்தையில் ஈடுப்ப்படும்முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:
► பங்கு தரகர்
►தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு
பங்கு தரகர்
இன்று பங்குசந்தையில் ஈடுப்படும் பலர் பணத்தை இழப்பது இவர்களிடம் தான் காரணம் பங்குசந்தையில் ஏற்ப்படும் நட்டம் ஒருபக்கம் என்றால் இவர்கள் புதிதாக இனைபவர்களிடம் கமிஷன் என்ற பெயரில் கறக்கும் பணமே அதிகம். அதிலும் இப்போது உதித்திருக்கும் பல தரகு நிறுவனங்கள் ஒருவர் இணையும்போதே தரகு தொகையை செலுத்திவிட வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து விடுகின்றனர். இது புதிதாக இணைபவர்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்ப்படுத்திவிடும் பங்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் வாங்கியே தீர வேண்டும் என்று. அதனால் புதிதாக பங்கு சந்தையில் இணைபவர்கள் தயவு செய்து முன் கூட்டியே தரகு தொகையை செலுத்த வேண்டாம். நீங்கள் இணைந்தபின் யார் உங்களிடம் பங்குகளை வாங்கும் நேரத்தில் தரகு தொகையை பிடித்துக்கொள்கிரார்களோ அவர்களிடம் இணைந்தால் உங்களுக்கு எந்த நிர்பந்தமும் இருக்காது. இதை முன்கூட்டியே நன்கு விசாரித்துவிட்டு அவர் சரியான அனுபவம் வாய்ந்த தரகர் தான என்று முடிவு செய்த பின் தரகரிடம் இணையவும்.
தொழில்நுட்ப்ப பகுப்பாய்வு
இனி வரும் நாட்களில் என்னால் முடிந்த வரை உங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப்ப பகுப்பாய்வை பற்றி விளக்கி விடுகிறேன். தயவு செய்து யாரும் ஆரம்பித்திலேயே பயன் படுத்தி விட வேண்டாம். பங்குசந்தையில் ஈடுபட போதிய அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
அடுத்த பதிவில் பங்குச் சந்தையில் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள், பங்குசந்தையில் ஈடுபட என்ன தகுதி வேண்டும், பங்கு கணக்கை ஏமாறாமல் யாரிடம் எப்படி தொடங்குவது என்று விளக்குகிறேன்.