வயலில் தூவப்படும் சில விதைகளே,பல ஆயிரம் மடங்காக பயிர்களைத் திருப்பித்தரும்.அதைப் போலவே,ஒருவர் செய்யும் நன்மையும்,தீமையும் பல மடங்காகப் பெருகி அவரிடமே வந்து சேரும்.
ஆகவே,எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவே இருங்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும் கூட,நன்மை செய்வதிலிருந்து விலகாதீர்கள்.இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.
சொன்னவர்: திருமுருக கிருபானந்தவாரியார்.

கண்ணால்
காண முடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலே உள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன.
ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.