பயில்வோம் பங்குச்சந்தை - 1

மணக்கால் அய்யம்பேட்டை | 3:15 PM | Best Blogger Tips


பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ பற்றி விளக்கமாக பார்ப்போம்

முதலில்  பங்கு சந்தையில் TECHNICAL ANALYZING ஏன் தேவைபடுகிறது என்பதினை பற்றிய விளக்கத்தை பார்ப்போம் …

பொதுவாக பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் அதன் FUNDAMENTAL வளர்ச்சியை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது அதாவது

1- அந்த நிறுவனத்தின் வியாபாரம்

2- நிகர லாபம்

3- நிகர செலவுகள்

4-அவர்களுக்கு இனி வரும் மாதங்களில் கிடைக்கப்போகும் வியாபார வைப்புகள், அதனால் கிடைக்கப்போகும் வருமானம்

5-அந்த நிறுவனம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

6-அதன் நிர்வாக திறன்

7-நிறுவனம் கொடுக்கும் BONUS, DIVIDEND இது போன்ற சமாச்சாரங்கள் தான் நிறுவனத்தின் வளர்ச்சியை முடிவு செய்து அதன் பொருட்டு நிறுவனத்தின் பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் முடிவு செய்யப்படும்

TECHNICAL ANALYZING ஏன் ?

இங்கு பங்குகளின் விலை ஏற்றங்களை முடிவு செய்யும் காரணிகள் FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றால் பிறகு ஏன் TECHNICAL ANALYZING என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும், முக்கியமான கேள்விகள் தான், அது ஏன் என்று பார்ப்போம்

1- விலைகளில் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்வது FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றாலும் அந்த விலை ஏற்ற இரக்கங்களின் பாதைகளை முடிவு செய்வதற்கு ஒரு சில தீர்க்கமான வழிகள் தேவைப்பட்டது

2- அந்த வழிகள் கீழ்கண்டவைகளை கண்டிப்பாக தர வேண்டும்

அதாவது

பங்கு சந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பொருளும் ஏறுவதானாலும் சரி இறங்குவதனாலும் சரி அதை அந்த வழிகள் (TECHNICAL ANALYZING) தெரிந்து வர்த்தகம் செய்பவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்,

3- ஒரு பங்கு உயரும்போது எந்த புள்ளியை இலக்காக கொண்டு நகரும் என்று மிகச்சரியாக சொல்ல வேண்டும்,

4- உயரும் போது ஒரு வேளை ஏதாவது சூழ்நிலை அல்லது காரணங்களால் அந்த பங்கு கீழே வந்தால், எந்த புள்ளிகள் வரை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த TREND தாக்குப்பிடிக்கும் அதாவது அந்த பங்கின் S/L என்ன என்பதை எளிதாக சொல்லும் வழியாக இருக்க வேண்டும்,

5- பொதுவாக அந்த பங்கின் அசைவுகளை முழுவதுமாக சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அதன் FUNDAMENTAL விசயங்களின் வெளிப்பாடாகவும், இனி வரும் காலங்களில் இந்த பங்கின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் சிறந்த வழியாக இருக்க வேண்டும்

6- FUNDAMENTAL ஆக ஒரு பங்கில் ஏதும் முக்கியமான விஷயங்கள் நடந்து அதனால் அந்த பங்கின் விலையில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயர்வு ஏற்ப்படும் என்ற சூழ்நிலை இருந்தால் அதை முன் கூட்டியே அந்த வழிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் முறையில் இருக்க வேண்டும்

7- பொதுவாக இன்னும் சொல்ல வேண்டுமானால் வெறும் அந்த வழிகளின் மூலம் மட்டுமே ஒரு பங்கின் ஆதி அந்தங்களை சொல்லும் ஒரு வழி முறையாக இருக்க வேண்டும்

இது போன்ற விசயங்களை நாம் முன்னர் பார்த்த FUNDAMENTAL கூறுகளை வைத்து கணிக்க முடியாது இல்லையா, ஆகவே தான் அதற்கும் மேலாக இன்னும் சரியாக சில விஷயங்கள் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்பட்டது,

மேலும் பங்கு சந்தைகளில் அன்று முதல் இன்று வரை பங்குகள் எல்லாம் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மேலும் கீழும் பங்குகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும் (அப்படி நகர்ந்தால் தானே அது பங்கு சந்தை), இப்படி தினமும் நொடிக்கு நொடி நகர வேண்டுமானால் அதற்க்கு என்று ஒரு வழிமுறை தேவைப்படும் இல்லையா,

அதாவது விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பேரூர்ந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்புகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படி கிளம்பும் போது நேரடியாக சென்னையிலிருந்து பறந்து அடுத்த நொடியில் திருச்சியில் சேர முடியாது இல்லையா,

முதலில் திருச்சி சென்றடைய தேவையான அளவிற்கு பெட்ரோல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும் வண்டியை பத்திரமாக ஓட்டும் ஓட்டுனரை நியமிக்க வேண்டும், பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் என்று முடிவு செய்து அதை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுத்த வேண்டும், தேவையான பயணிகளை ஏற்றிக் கொள்ளவேண்டும், இடை இடையே இறங்குபவர்களையும் ஏற்றிக் கொள்ளவேண்டும் அவர்களுக்கான பயண சீட்டுகளை வழங்க வேண்டும், பிறகு மெல்ல தாம்பரம் வந்து அதற்கான சாலையை பிடித்து வருசயாக ஒவ்வொரு ஊராக கடந்து பிறகு திருச்சியை அடையவேண்டும் இப்படி தானே வந்து சேர முடியும் ,

அதுமாதிரி தான் TECHNICAL ANALYZING கும் அதாவது திருச்சிக்கு செல்லவேண்டும் என்பது FUNDAMENTAL விஷயமாகும் அதாவது ஒரு குறிப்பிட்ட ORDER கிடைப்பதின் மூலம் ஒரு நிறுவனத்திற்கு 1000 கோடி லாபம் கிடைக்கும் என்று இருப்பது FUNDAMENTAL விஷயம் அதே நேரம் இந்த லாபத்தினால் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் அதன் விலையில் இருந்து 60 ரூபாய் உயர வேண்டும் என்ற நிலை உருவாகும், அப்படி உருவாகும் போது, அடுத்த நொடியே அந்த பங்கின் விலையில் 60 ரூபாயை உயர்த்திக்காட்ட முடியாது இல்லையா,

அப்படி உயர்த்திக்காட்டுவது என்பது BUS ஐ சென்னையிலிருந்து அடுத்த நொடி திருச்சியில் இறக்குவதற்கு சமம் அப்படி செய்ய முடியாது இல்லையா, மேலும் நாம் முன்னர் சொன்ன முறையில் தானே BUS ஐ திருச்சிக்கு ஒட்டி வர முடியும், அவ்வாறு பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் இருந்து எப்படி அடுத்த விலைக்கு கொண்டு வருவது என்பதினை TECHNICAL ANALYZING உதவி கொண்டு தான் செய்ய முடியும் அதாவது முதலில் எவளவு தூரம் அந்த பங்கின் விலையை ஏற்ற வேண்டும் பிறகு எவளவு தூரம் இறக்கவேண்டும் மறுபடியும் எப்பொழுது உயர்த்த வேண்டும் இப்படி எல்லாம் முடிவு செய்வதற்கு TECHNICAL ANALYZING பயன்படுகிறது,

சரி TECHNICAL ANALYZING ஏன் பங்கு சந்தைகளில் தேவைப்படுகிறது என்று உங்கள் அனைவருக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன், அடுத்து TECHNICAL ANALYZING எப்படி செயல் படுகிறது. எப்படி எல்லாம் நாம் இதனை பயன்படுத்துவது என்பதினைப்பற்றி அடுத்த வாரம் பார்போம்….



நன்றி 4தமிழ்மீடியாவிற்காக: பாலாஜி

Copy from this  Link http://www.4tamilmedia.com/knowledge/essays/4065-pajilvom-panku1

எனக்கு இதனை தெரிந்துக் கொள்ளுவதற்கா தேடியபொழுது கிடைத்தது.  நீங்களும் இதனை தெரிந்துக் கொள்ளுங்கள். 

மேலும் தகவலுக்கு கீழே Link செல்லுங்கள்