சத்தான ராகி பானம் செய்யும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 5:07 PM | Best Blogger Tips
சத்தான ராகி பானம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பால் - முக்கால் டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - நான்கு இதழ்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.

கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.

வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.

கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.

அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.

சுவையான தெம்பான ராகி பானம் ரெடி.

குறிப்பு :

மூன்று மாத‌ குழ‌ந்தை முத‌ல் வ‌யதான‌வ‌ர்க‌ள் வரை குடிக்கும் ச‌த்தான‌ தெம்பான‌ பான‌ம் இது. பால் நிறைய‌ க‌ல‌ந்து த‌ண்ணீர் கொஞ்ச‌மாக க‌ல‌ந்தும் காய்ச்ச‌லாம். குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிறு ச‌ரியில்லாத‌ நேர‌ம் லூஸ் மோஷ‌ன் ஆகும் போது ரொம்ப‌ தெம்பில்லாம‌ல் இருப்பார்க‌ள் அந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌லாம். தின‌ம் காலை டீ காப்பிக்கு ப‌திலாக‌வும் குடிக்க‌லாம். ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு ந‌ல்ல‌ பான‌ம். நெய் தேவையில்லை என்றால் சேர்க்க‌ அவசியமில்லை. குழ‌ந்தைகளுக்கு (த‌னியா சிறிது கோதுமை மாவு, அரிசி மாவு, பாதா‌ம் ப‌வுட‌ர்) எல்லாம் சேர்த்து க‌ல‌ந்து வைத்து ராகி காய்ச்சும் போது இந்த‌ க‌ல‌வையை அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து கொள்ள‌லாம்.தேவையான பொருட்கள்

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பால் - முக்கால் டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - நான்கு இதழ்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.

கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.

வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.

கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.

அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.

சுவையான தெம்பான ராகி பானம் ரெடி.

குறிப்பு :

மூன்று மாத‌ குழ‌ந்தை முத‌ல் வ‌யதான‌வ‌ர்க‌ள் வரை குடிக்கும் ச‌த்தான‌ தெம்பான‌ பான‌ம் இது. பால் நிறைய‌ க‌ல‌ந்து த‌ண்ணீர் கொஞ்ச‌மாக க‌ல‌ந்தும் காய்ச்ச‌லாம். குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிறு ச‌ரியில்லாத‌ நேர‌ம் லூஸ் மோஷ‌ன் ஆகும் போது ரொம்ப‌ தெம்பில்லாம‌ல் இருப்பார்க‌ள் அந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌லாம். தின‌ம் காலை டீ காப்பிக்கு ப‌திலாக‌வும் குடிக்க‌லாம். ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு ந‌ல்ல‌ பான‌ம். நெய் தேவையில்லை என்றால் சேர்க்க‌ அவசியமில்லை. குழ‌ந்தைகளுக்கு (த‌னியா சிறிது கோதுமை மாவு, அரிசி மாவு, பாதா‌ம் ப‌வுட‌ர்) எல்லாம் சேர்த்து க‌ல‌ந்து வைத்து ராகி காய்ச்சும் போது இந்த‌ க‌ல‌வையை அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து கொள்ள‌லாம்.
 
Via FB இயற்கை உணவும் இனிய வாழ்வும்