
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் திருக்கடவூரில் அமைந்துள்ள
ஆலயம். இறைவன், அமிர்தகடேஸ்வரர்; இறைவி, அபிராமி.
திருக்கோயில் சுற்று மதிலகளிலும், கர்ப்பக் கிரகத்திலும் பல கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன. அரசாங்கக் கல்வெட்டுத் துறையினர், 1906, 1952 ஆண்டுகளில் படியெடுத்து வைத்துள்ளனர். மொத்தக் கல்வெட்டுக்கள் 54. முதல் இராசராசன் முதல், மூன்றாம் இராசராசன் வரையில் உள்ள சோழ மன்னர்கள் ஒன்பது பேர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், வள்ளல் தன்மையும், கல்வெட்டுக்கள் சொல்லும் செய்தி.
பாண்டியர்களுள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகிய மூவருடைய கொடைத் தன்மை பேசப்படுகிறது. விஜயநகர மன்னர்களில், கிருஷ்ணதேவராயரும், மூக்கண உடையார் பரம்பரையில், விருப்பண உடையாரும் தேவஸ்தானத் தொடர்பு உடையவர்களாக அறியப்படுகின்றனர்.
அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பு போக, இன்னும் தன்னுள் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
Via FB - சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?