மாம்பழ பால்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:24 | Best Blogger Tips


மாம்பழ பால்

மாம்பழம் மிகவும் பிடிக்குமா? அப்படியெனில் அந்த மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடாமல், சற்று வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிடலாமே! ஆம், இதுவரை மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ், மில்க் ஷேக், குல்பி என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் மாம்பழ பால் செய்து குடித்திருப்போமா? இல்லை தானே!

மாம்பழ பால் என்பது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு வித்தியாசமான பானம். இந்த பானத்தை செய்து குடித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த மாம்பழ பாலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

மாம்பழ பால் தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 1
தேங்காய் பால் - 1/2 கப்
குளிர்ந்த பால் - 1/4 கப்
சர்க்கரை

தேவையான அளவு செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு, அதனை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தேங்காய் பால், குளிர்ந்த பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து பரிமாறினால், சுவையான மாம்பழ பால் ரெடி!!! வேண்டுமெனில் இதனை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்தும் குடிக்கலாம்.

Thanks to Thatstamil.com