இந்திய பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் இஸ்ரேல் சென்றுள்ள முதல் பிரதமர்.
இந்தியாவின் எல்லா போர்களிலும் இந்தியாவிற்க்கு ஆதரவாக இருந்த ஒரே நாடு இஸ்ரேல்....
ஹிட்லரால் விரட்டி விரட்டி அழிக்கப்பட்ட யூத இனம், மத்திய தரைக்கடல் பகுதியில் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட நாடுதான் இஸ்ரேல். இஸ்ரேல் மீது எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாகக் காட்ட முடியாது. 'உடம்பு முழுக்க மூளை' என்கிற வார்த்தை அப்படியே யூதர்களுக்கு பொருந்தும். கார்கில் போரின் போது, 'டைகர் ஹில்' பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மீட்க இஸ்ரேல் உதவி புரிந்தது. பிரதமர் மோடி, அந்த நாட்டுக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் பற்றிய சுவரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம்...
கடந்த 1948ம் ஆண்டு, மே மாதம் 14ம் தேதி இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. தலைநகர் டெல்அவிவ். மொத்த மக்கள் தொகையில் 74 சதவிகிதம் பேர் யூதர்கள். 20.8 சதவிகிதம் அரேபியர்களும் வசிக்கின்றனர். ஜனநாயக நாடான இஸ்ரேலுக்கு எந்த அரசியலமைப்புச் சட்டமும் கிடையாது.
ஹீப்ரு மொழி சமஸ்கிருதம் போல பேச்சு வழக்கில் இல்லை. ஆனாலும், ஹீப்ருவை இஸ்ரேல் தேசிய மொழியாக அறிவித்தது. பேச்சு வழக்கில் ஹீப்ரு மொழியை கொண்டு வர இஸ்ரேல் முயல்கிறது.
இஸ்ரேலில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அதிகபட்ச உரிமை உண்டு. ரூபாய் நோட்டுகள் கூட பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்கள் கூட தடுமாறி விடக் கூடாது என்பற்காக இந்த நடைமுறை.
இஸ்ரேல் நாட்டில் உள்ள தொழில்முனைவோர்களில் 55 சதவிகிதம் பேர் பெண்கள். ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கும். நாட்டில் 24 சதவிகிதம் பேர் பட்டம் பெற்றவர்கள். அதில், 12 சதவிகிதம் பேர் முதுகலை பெற்றவர்கள். இந்த விஷயத்தில் உலகில் நெதர்லாந்து, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது.
சொட்டு நீர் பாசனம்தான் விவசாயத்தின் முதுகெலும்பு. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மரங்களால் கிடைக்கும் அத்தனை பயன்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல்.
தகவல் தொழில்நுட்பம் என்றால் அமெரிக்காவின் 'சிலிக்கான்வேலி' நினைவுக்கு வரும். இஸ்ரேல் நாடே ஒரு சிலிக்கான்வேலி என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்தக் குட்டி நாட்டில் 3 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. Windows NT
operating system developing மற்றும் Pentium MMX
Chip- ஐ உருவாக்கியது போன்றவற்றில் இஸ்ரேலின் இன்டெல் நிறுவனம் முக்கியபங்கு வகித்துள்ளது.
'மோட்டோரோலா' நிறுவனம் தயாரித்த உலகின் முதல் செல்போன் இஸ்ரேலில் நாட்டில்தான் உருவானது. 'வாய்ஸ் மெயில் ' இஸ்ரேலின் கண்டுபிடிப்புதான். 1979ம் ஆண்டே கம்ப்யூட்டர் 'Antivirus'
கண்டுபிடித்து அசத்தியது இஸ்ரேல்.
இஸ்ரேல் நாட்டு விமானப்படை உலகின் நான்காவது மிகப்பெரியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா முதல் மூன்று இடங்களில் உள்ளன. இஸ்ரேலிடம் நான்காம் தலைமுறை போர் விமானமாக கருதப்படும் எப்-16 விமானம் மட்டும் 250 உள்ளன.
உலகில் வேறு எந்த நாட்டையும் விட இஸ்ரேலில்தான் பிற மொழிகளில் இருந்து அதிகப் புத்தகங்கள் மொழிப் பெயர்க்கப்படுகின்றன.
இஸ்ரேலியர்கள் 'செஸ் ' விளையாட்டில் வல்லவர்கள். இங்குள்ள பெர்ஷீபா நகரில்தான் உலகிலேயே அதிக கிராண்ட்மாஸ்டர்கள் வசித்து வருகின்றனர்.
மருத்துவத்துறையிலும் இஸ்ரேல் அபார சாதனை படைத்துள்ளது. ஸ்டெம் செல் ஆய்வு, இதய நோயை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றனர்.
இஸ்ரேலில்தான் சவக்கடல் அமைந்துள்ளது. EL AI என்பது இஸ்ரேல் நாட்டின் ஏர்லைன்ஸ்.
இஸ்ரேல் நாட்டு வழக்குரைஞர்களில் 44 சதவீதம் பேர் பெண்கள்.
இஸ்ரேலின் 'மொசாட்' உளவு அமைப்பு உலகிலேயே திறமையான அதி பயங்கரமானதாகக் கருதப்படுகிறது. 'இஸ்ரேலுக்கு பிற்காலத்தில் எதிரி ஆவான்' என கருதினால் கருவிலேயே மொசாட் அழிக்க முயலும். 1972ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள், பயிற்சியாளர்கள் 11 பேர் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்கி விட்டுதான் இஸ்ரேல் ஓய்ந்தது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தான் சிறந்த உளவு அமைப்பு என கருதினால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சி.ஐ.ஏ. வை உளவுபார்க்கும் வல்லமை படைத்தது மொசாட். இரட்டைக் கோபுரத் தாக்குதல், செப்டம்பர் 11 மும்பை தாக்குதல் சம்பவங்களை முன்னரே மோப்பம் பிடித்து 'மொசாட்' எச்சரித்தது. 'உங்கள் அருகில் கூட மொசாட் உளவாளி இருக்கலாம்' என்கிற சொலவடை உளவுத்துறை வட்டாரத்தில் உண்டு.
அதிக போர்களில் ஈடுபட்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. 1948ம் ஆண்டு முதல் அரபு போரில் இருந்து, 2014ம் ஆண்டு காஸா மோதல் வரை சிறிதும் பெரிதுமாக 18 போர்களில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. 1967ம் ஆண்டு எகிப்து, சிரியா, ஜோர்டான் நாடுகளுடன் வெறும் 6 நாட்கள் கூட இஸ்ரேல் போரில் ஈடுபட்டிருக்கிறது. ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டால், பதிலுக்கு பத்து பேரை கொன்று விட்டே இஸ்ரேல் ஓயும்.
ஆண், பெண் இருபாலருக்கும் ராணுவப் பயிற்சி கட்டாயம். ஆண்களும் பெண்களும் சம அளவில் ராணுவத்தில் சேவையாற்றுகின்றனர். சுற்றிலும் அரபு நாடுகள் இருந்த போதிலும் இஸ்ரேல்தான் மத்திய தரைக்கடலின் சர்வ வல்லமை பொருந்திய நாடு!
நன்றி இணையம்