1.கடவுள்
அருளின்றி உலகில்யாரும் வாழ முடியாது..ஞாபகமிருக்கட்டும்
2ஏ
மனமே .நீ எதை நினைக்கின்றாயோ அதன் மயமாகி விடுவாய்...கடவுளை நினை...கடவுள் மயமாவாய்..
3.ஏ மனமே நீ தனித்திருந்தாலும் உன் அந்தராத்மா கூடவே உள்ளது. தவறு செய்யாதே..ஜாக்கிரதை..
4.ஏ.மனமே உன் நலனை உத்தேசித்து பிறருக்கு உபகாரம் செய்வது சுயநலம்..சுயநலமின்றி உபகாரம் செய்..
5.ஏ.மனமே நாவை வென்றுவிட்டால்ஆசைகள் ஒழியும் ...நாவைக் கட்டுப்படுத்து.
6.ஏ.மனமே உனக்குள்ள கடமைகளை திருந்தச் செய்வதேஉண்மையான கடவுள் வழிபாடாகும்.
7. ஏ.மனமே மனிதனின் நடத்தைகள் யாவும் அவனவன் ப்ராப்தத்தை அனுசரித்தே இருக்கும்.
8.ஏ.மனமே பற்றுஅதிகம் உள்ளவனின் மனம் தனிமைப்பட்டாலும் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
9.ஏ.மனமே துன்பத்தை வெறுக்காதே..துன்பத்தின் மூலமே நீ பண்படமுடியும்.
10.ஏ.மனமே உழைத்துச்சாப்பிடுவதே உத்தமம்.ஊரை ஏமாற்றிப் பிழைப்பது அதா்மம்.அதற்கான பாவமூட்டைசுமப்பாய்என்பதை மறவாதே.
11.ஏ.மனமே நீ ரகசியமாக செய்த பாவத்திற்கு இரட்டிப்பு தண்டனை உண்டு.ஜாக்கிரதை..
12. ஏ.மனமே நீ பிறருக்குச் செய்யும் துரோகமானது உன்னையே கெடுத்துக் கொள்ளச்செய்யும் காரியமாகும்.
13.ஏ.மனமே உண்மையிலும் நோ்மையிலும் விடாப்பிடியாக இருந்தால் வாழ்வில் தோல்வியின்றி நிச்சயம் வெற்றி பெறுவாய்......
14.ஏ.மனமே கடவுளைச் சரணடையாதவன் ஜென்மம் வீணாகிவிடும்.
15.ஏ.மனமே பொறாமைப்படுவன் அரைவிநாடிகூடநிம்மதியாகஇருக்க முடியாது...
🌺🌺🌺சிவாய நம🌺🌺🌺
நன்றி இணையம்