வாரியார் ஸ்வாமிகள் ஒரு நாத்திக இளைஞனின் கேள்விக்கு அளித்த பதில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:34 | Best Blogger Tips
Image result for வாரியார் ஸ்வாமிகள்
வாரியார் ஸ்வாமிகள் ஒரு நாத்திக இளைஞனின் கேள்விக்கு அளித்த பதில்
Image result for வாரியார் ஸ்வாமிகள்
ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.
என்ன கிடைக்கும்?
கிருபானந்த வாரியார், ஒரு முறை ஏராளமான குழந்தைகளுக்கு மத்தியில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். 'நாளைய அறிஞர்களும், மேதைகளும், அதிகாரிகளும், இதோ உங்களுக்குள் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் நாளைய உலகில் பல சாதனைகளைச் செய்யப் போகிறவர்கள். நீங்கள் எல்லோரும் எப்போதும் கடைபிடிக்கவேண்டியது,
'பசித்திரு, தனித்திரு, விழித்திரு
பசித்திரு - சுறுசுறுப்பாய் உள்ளவர்களிடையேதான் பசி இருக்கும்
தனித்திரு - இதுதான் கற்றவற்றையெல்லாம் செயல்படுத்தத் தூண்டும்
விழித்திரு - எந்த ஒரு காரியத்திலும் விழிப்புடன் இருக்கப் பழக வேண்டும்
என்று கூறி பேச்சை நிறுத்தினார்.
உடனே, ஒரு சிறுவன் 'இப்படியெல்லாம் இருந்தால் என்னங்க கிடைக்கும்?’ என்று துடுக்குத்தனமாக கேட்டானாம். உடனே வாரியார், 'நான் கூறிய மூன்று பதத்தின் முதல் எழுத்துக்களை இணைத்துப் பார் உனக்கே புரியும்என்றாராம் நாசூக்காக.
உங்களுக்குப் புரிந்ததா?!

 நன்றி இணையம்