🕉🕉🕉🕉🕉🕉

🍀 ஆனி மாதத்தில் ஆடலரசரான நடராஜருக்கு திருமஞ்சனம் விழா நடைபெறுவது வழக்கம். ஆனி மாதம் வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதமாகும். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
🍀 திருமஞ்சனம் என்றால் மகாஅபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும்.
🍀 இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.
🍀 பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனி உத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். அன்றைய தினம் கூத்தபிரானை கும்பிட்டு சிவபுராணம் படித்தால் மிகவும் சீரும் சிறப்புடன் வாழ்க்கை அமையும்.
🍀 ஆடுகிற வாழ்க்கை அழகாக மாற வேண்டுமானால், ஆயக் கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற வேண்டுமானாலும் நாம் வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மனும் தான். இந்த திருமஞ்சனத்தை தரிசித்தால் எதிரிகள் விலகுவர்.
🍀 ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு திருத்தலங்களில் ஆனி திருமஞ்சனம் சிறப்பிப்பது போல் மற்ற சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் போற்றப்படுகிறது. இந்தத் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.
🍀 கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம். ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனத்தை தரிசித்தால் அனைத்து இராசிக்காரர்களுக்கும் சிறப்பாக அமைவதோடு மட்டுமல்லாமல் பிரச்சனைகள் அகன்று தரிசனத்தால் தனலாபமும், நினைத்த காரியமும் கைகூடும்.
🍀 நாள் : இந்த ஆண்டின் திருமஞ்சனம் ஆனி மாதம் 16-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அன்றைய தினத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பதை கண்டு மகிழலாம்.
என்றும் இறைப்பணியில் என்றும் உங்கள் அன்புள்ள
🚩🕉S.Krishna Kumar 🕉🚩
பாரத் மாதா கீ ஜெய்🚩🕉
என்றும் இறைப்பணியில் என்றும் உங்கள் அன்புள்ள
🚩🕉S.Krishna Kumar 🕉🚩
பாரத் மாதா கீ ஜெய்🚩🕉
நன்றி இணையம்