*எத்தகைய கருணையாளன் நம் இறைவன் !!*

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips
Image result for அருணாசலர் கோவில்
யாராவது ? எதுவாவது ? எற்றுகொண்டாலே வாழக்கூடிய உலகில் !! *என்னிடம் எது ஏற்றுக்கொள்ளும்படி வெளிப்பட்டால் ஏற்றுகொள்வார்கள் என்று என்னுள் நீ இருந்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வெளிப்படவைத்து ஏற்றுகொள்ள வைப்பதாலே !! என்னுடையது என்று கருதுவது யாவும் என்னுடன் இருக்கிறது !! இதில் சிறிது பிழை ஏற்பட்டாலும் எதுவும் இருக்காது ?!!*
ஆனால் அத்தகைய பிழையே உடையவன் நான் என்று நானே அறிவேன் !! நானே என்னை எல்லாவற்றிலும் ஏற்றுகொள்வது இல்லை !! அத்தகைய என்னையும் ஏற்றுக்கொண்டு !!
*எதை என்னுள் வெளிபட்டால் ஏற்றுகொள்வார்கள் என்று நானே அறியாததை வெளிபடுத்தி ஏற்றுகொள்ள !! எப்படி நடித்தால் என் நடிப்பு நம்பும்படி அமையும் என்று உன்னை என்னுள் விதைத்து என்னையும் இன்றுவரை நடிப்பை நடிப்பு என்று காட்டாது !! வேஷம் கலையாது !! காத்து எற்ப்புடையதாகி இடமளித்து வாழ்விக்கிறாய் !!*
இதை அறிந்தும் ?! அறியாதும் ?! உன்னை நீ என்று முழுதும் ஏற்க்கவே முடியாதே !! நீ என்றும் !! நான் என்றும் !! இன்றுவரை பிரித்தே பார்க்கிறேன் !! வாழ்கிறேன் !!
என்னையும் உடையவனே !! நின் கருணையை என்னென்று சொல்ல !!
அழுவேன் !! தொழுவேன் !! ஆட்பட்டேன் !! என்கிறேன் ?!!
அறிந்தவன் நீ !! புன்சிரிப்போடு ஆடுகிறாய் !! ஆட்டியும் வைக்கிறாய் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே
*குமாரசூரியர்_அங்கமுத்து*

 நன்றி இணையம்