* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:27 | Best Blogger Tips
Image result for திருவொற்றியூர்

இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும்
ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான
தோஷம் விலகும்.
*
கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி
அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை
அம்மனை வழிபடுங்கள்ராகு பகவானால்உண்டான தீமை விலகும்.
*
சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய
மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன்,
ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான
தோஷம்விலகும்.
*
நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர்
ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக
ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில்
திருமணம் நடக்கும்.
*
விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம்
எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை
வணங்குங்கள். ராகு மற்றும்கேதுவினால்உண்டான தோஷங்கள்விலகும்.
*
சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக
வணங்கி வழிபட்டுவர ராகு- கேதுவினால்ஏற்பட்ட தடைகள்விலகும்.
*
திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி
வாருங்கள்உங்கள்வாழ்வில்ராகு-கேது சிக்கல்விலகி சுபீட்சம்காண்பீர்கள்.
*
திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட
வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு,
கேது தோஷம்நீங்கி வளம்பெருகும்.
*
மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில்
திருச்சிறுபுலியூர் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கிருபாசமுத்திர
பெருமாளையும், ஸ்ரீதயாநாயகி தாயரையும் வணங்கினால் வழக்கில் வெற்றி,
பூர்வீக சொத்து பிரச்சினை தீருதல், செல்வம்சேருதல்ஆகியன கிட்டும்.
*
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும்
ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள்
யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும்
பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர்
சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை
நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில்குளிப்பதும்விசேஷம்.
*
திருவாரூர்- கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள
தலம் மணக்கால். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை
வணங்கி ஸ்ரீஆதிசேஷன் விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம்
நீங்கப் பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும்
காணலாம்.ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு தொடர்பான
வேலைகள் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும்.
*
நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள்
யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து
நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற
திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன்
சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை
வணங்கினால் ராகு, கேது தோஷங்கள்விலகி பெரிய பதவிகள்கிடைக்கும்.
*
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள
திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும்,
இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு
இணையான தலமாக போற்றப்படுகிறது.
இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ராகு
கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு
கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம்
(
இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு
கட்டிமனதாரப்பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம்யாவும்விலகும்.
*
குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850
ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு
பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில்
முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு
தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள்
இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம்
செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.
*
ராகு, கேது தோஷ முள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர்
சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும்
விளக்கில்நெய்விட்டு வழிபட்டால்தோஷம்நீங்கி விடுகிறது.
நன்றி இணையம்