பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். காசி மாநகரில் திசைக்கு ஒன்று என எட்டு திசைகளிலும் உள்ள எட்டு பைரவர் கோவிலைப் பற்றியும், பைரவரின் வடிவங்கள் பற்றியும் பார்ப்போம்.
அசிதாங்க பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர். இவர் அன்னப்பறவையினை வாகனமாக கொண்டவர். இவரை வழிபட நவகிரகங்களில் ஒன்றான குருவினால் ஏற்பட்ட கிரக தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் உள்ள விருத்தகாலர் கோவிலில் அருள்பாலிக்கிறார். அசிதாங்க பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.
ருரு பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றம் ஆவார். இவர் ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். இவரை வழிபட நவகிரகங்களில் ஒன்றான சுக்கிரனால் ஏற்பட்ட கிரக தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் அருள்பாலிக்கிறார். ருரு பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.
சண்ட பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றம் ஆவார். இவர் மயிலை வாகனமாக கொண்டவர். இவரை வழிபட நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்ட செவ்வாய் கிரக தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் உள்ள துர்க்கை கோவிலில் அருள்பாலிக்கிறார். சண்ட பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.
குரோதன பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றம் ஆவார். இவர் கருடனை வாகனமாக கொண்டவர். இவரை வழிபட நவகிரகங்களில் ஒருவரான சனி கிரகத்தால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் அருள்பாலிக்கிறார். குரோதன பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.
உன்மத்த பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றம் ஆவார். இவர் குதிரையை வாகனமாக கொண்டவர். இவரை வழிபட நவகிரகங்களில் ஒருவரான புதன் கிரகத்தால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் அருள்பாலிக்கிறார். உன்மத்த பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.
கபால பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றம் ஆவார். இவர் கருடனை வாகனமாக கொண்டவர். இவரை வழிபட நவகிரகங்களில் ஒருவரான சந்திரனால் ஏற்பட்ட கிரக தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் அருள்பாலிக்கிறார். கபால பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.
பீக்ஷன பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றம் ஆவார். இவர் சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ஒன்றான கேதுவினால் ஏற்பட்ட கிரக தோஷம் நிவர்த்தியாகும். இவர் காசி மாநகரில் பு த பைரவ கோவிலில் அருள்பாலிக்கிறார். பீக்ஷன பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
சம்ஹhர பைரவர் :
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றம் ஆவார். இவர் நாயை வாகனமாக கொண்டவர். இவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட நவகிரகங்களில் ஒன்றான ராகு கிரகத்தினால் ஏற்பட்ட கிரக தோஷம் நிவர்த்தியாகும். சம்ஹhர பைரவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.
நன்றி இணையம்