*காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்-1*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:49 | Best Blogger Tips
Image result for *காஷ்மீர்
*காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்*
*-
திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.*
காஷ்மீர் என்றுமே பாரதத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்து வருகிறது. கஷ்யபரின் தேசம் [கஷ்யபபுரா] என்பதுதான் மருவி காஷ்மீர் என்றானது.
காஷ்மீரிகளுக்கு துன்பம் ஆரம்பித்தது இஸ்லாமிய படையெடுப்புக்கு பிறகுதான்... இஸ்லாமியர் அல்லாதவர்கள் அனைவரையும் துன்புறுத்தும் வேலை ஆரம்பித்தது ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில்தான். அதுவரை இஸ்லாமியர்கள் ஹிந்துப்பெண்களை மணந்து பின்னர் ஹிந்துவாக மாறிவிடுவது சகஜமாக இருந்தது.
இதை சகிக்க முடியாத ஜஹாங்கீர் ஹிந்துக்களை துன்புறுத்தத் தொடங்கினான், பின்னர் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் கொடுமை உச்சத்திற்கு சென்றது. ஹிந்துக்கள் காஷ்மீரில் வசிக்கவே முடியாத சூழ்நிலை உருவானது.
காஷ்மீரில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அங்கு ஜாதிப்பாகுபாடுகள் கிடையாது. அனைவருமே தங்களை அந்தணராகவே கருதிக்கொள்வர். ஔரங்கசீப்பின் கொடுமைகளை சகிக்க இயலாத அந்தணர்கள் பஞ்சாப் சென்று அப்போதைய குருபீடத்தை அலங்கரித்த குரு தெஹ்பகதூர் அவர்களிடம் சென்று தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். அவர்களின் முறையீட்டை கேட்ட குரு, உங்களில் மிகவும் உத்தமமான ஒருவர் தன்னை தியாகம் செய்தால் உங்கள் பிரச்சினைகள் தீரும் என்றார். அப்படிப்பட்டவர் யார் என்று தெரியாமல் அந்தணர்கள் குழப்பம் அடைந்தனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான குரு தெஹ்பகதூர் அவர்களின் மகன் கோவிந்த் சிங் [ பின்னாளில் சீக்கிய தலைமைப்பீடத்தை அலங்கரித்த குரு கோவிந்த் சிங் ] தங்களை விட, உத்தமமான, புனிதமான மனிதர் வேறு யார் இருக்கிறார் அப்பா ? என்று கேட்டார்.
இதைக்கேட்ட குரு தெஹ்பகதூர் தானே சென்று ஔரங்கசீப்பீடம் பேச தீர்மானிக்கிறார். டெல்லி சென்று ஔரங்கசீப்பை சந்தித்த குரு தெஹ்பகதூர், ஔரங்கசீப்பிடம் சவால் விடுகிறார். நீ என் ஒருவனை இஸ்லாமுக்கு மதம் மாறச்செய்துவிட்டால் ஒட்டு மொத்த பாரதமே இஸ்லாத்துக்கு மாறிவிடும் என்கிறார். ஔரங்கசீப் குருதெஹ் பகதூர் அவர்களின் இரண்டு சீடர்களை மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொல்கிறான்.
நீ மதம் மாறாவிட்டால் உனக்கும் அதே கதிதான் என்கிறான். சம்மதிக்காத குருதெஹ்பகதூரை சிரச்சேதம் செய்கிறான். அவரின் தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு தாயத்து விழுகிறது, அதற்குள் ஒரு செய்தி இருக்கிறது. அதில் ''நான் என்னை தியாகம் செய்து என் தர்மத்தை காப்பாற்றிவிட்டேன் '' என்று எழுதப்பட்டிருந்தது.
குரு தெஹ் கதூர் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களிடம் பெரும் எழுச்சி ஏற்படுகிறது. குரு கோவிந்த் சிங் தலைமையில் போரிட்ட சீக்கியர்களை ஔரங்கசீப்பால் வெல்லவே முடியவில்லை பின்னர் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் தலைமையில் நடந்த போர்களில் காஷ்மீர் வெல்லப்பட்டு ஹிந்துக்களின் வசமானது.
அப்போது காஷ்மீரில் வசித்த இஸ்லாமியர்கள் ஹிந்துமதத்திற்கு மாற முடிவெடுத்தனர். அதை காஷ்மீர் அந்தணர்கள் ஏற்க மறுத்தனர். 70 அந்தணர்கள் காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு தற்கொலை செய்துகொள்வோம் என்று அறிவித்தனர்.
மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம்
''
மதம் மாறி , பசுவை உண்ட இவர்கள் ஹிந்து மதத்திற்கு திரும்புவதை நாங்கள் ஏற்க மாட்டோம் அப்படி ஒருவேளை இவர்கள் மதம் மாறுவதை நீங்கள் ஒப்புக்கொண்டால், நாங்கள் ஏரியில் மூழ்கி உயிர்துறப்போம். எங்கள் மரணத்திற்கு காரணமான உங்களை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும்''
என்றனர்,
பயந்துபோன ரஞ்சித்சிங் இஸ்லாமியர்கள் தாய் மதம் திரும்புவதை நிராகரித்தார். அவர்களை அப்படியே உயிரை விடும்படி சொல்லிவிட்டு, இஸ்லாமியர்கள் தாய்மதம் திரும்புவதை மஹாராஜா ரஞ்சித்சிங் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். எப்படி குரு தெஹ்பகதூர் தன்னை தியாகம் செய்து தர்மத்தை காப்பாற்றினாரோ, அதுபோல தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தாலும் பரவாயில்லை. இஸ்லாமியர்கள் ஹிந்துக்களாக மதம்மாறுவதை தான் ஏற்றுக்கொள்வேன் என்று ரஞ்சித்சிங் அறிவித்திருந்தால் இன்று காஷ்மீர் அந்தணர்கள் இப்படி அகதிகளாக தேசம் முழுக்கம் அலையும் நிலை வந்திருக்காது. நாமும் இன்று காஷ்மீர் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமும் இருந்திருக்காது...
நன்றி .....

 இணையம்