வைத்தீஸ்வரன் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:05 PM | Best Blogger Tips
Image result for வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில் கும்பகோணத்தை அடுத்த மாயவரம் எனனும் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இது தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. இந்த ஆலயத்தின் அமைப்புத் தோற்றம் நான்கு ராஜ கோபுரத்துடனும் நடுவில் ஆங்காங்கே பல தீர்த்தங்களுடனும் அமையந்து இருக்கும். இறைவன் சிவ பெருமானின் பெயர் வைத்தியநாதர், அம்பாளின் பெயர் தையல்நாயகி என்னும், முருகனுக்கு தனி சன்னதி உள்ளது.


உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399


செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், விரைவில் திருமணம் நிகழ சிவன், அம்பாள், முருகன் ஆகியோருக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால் தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம்.


தீர்த்தங்கள்:


இக்கோவிலில் பல தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இத்தீர்த்தத்தில் சித்தர்கள் இறைவனுக்கு அபிஷேகித்த தேவாமிர்த்தத்தை கலந்ததால் இப்பெயர் பெற்றது. அது மட்டுமின்றி நவக்கிரகங்களில் மூன்றாவதாய் குறிப்பிடப்படும் செவ்வாய் என்னும்அங்காரகன்ஆட்சி புரியும் தலமாக விளங்குவது.


அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன், இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வழிபட சொன்னார். அவ்வாறே செய்த அங்காரகன் செங்குஷ்டம் நீங்கியது. இதனால் தன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும், கிரக தோஷங்கள் விலகி நன்மை அடைவர் என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வாறே சிவபெருமானும் வரமளித்தார்.


வைத்தீஸ்வரன் கோவிலில் மூலவர் சந்நதிக்குள் நுழைந்தவுடன், தண்டாயுதபாணி சந்நதிக்கு தெற்கில் தெற்கு முகமாக அமிந்துள்லது அங்காரகன் சந்நதி. தனது நான்கு கைகளிலும் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கியபடி காட்சி தருகிறார் செவ்வாய். செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரை அன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால் தோஷ நிவர்த்தி பெற்று, மணவினை பெறலாம் அன்பது திண்ணம். இத் தல வழிபாடு கோள் வினைகள், வாத நோய், பேய் பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது. இங்கு விற்கப்படும்வைத்தியநாதர் மருந்துஎன்ற திருச்சாந்துருண்டையை உண்ண சகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம்.


தீர்த்தங்கள்:


இக்கோவிலில் பல தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இத்தீர்த்தத்தில் சித்தர்கள் இறைவனுக்கு அபிஷேகித்த தேவாமிர்த்தத்தை கலந்ததால் இப்பெயர் பெற்றது. இங்கு நாம் வாங்கும் அர்ச்சனை தட்டுடன் வெல்லம், உப்பு, மிளகு ஆகியவை தரப்படும். வெல்லத்தை அங்குள்ள தீர்தத்தில் கரைத்து விட்டு, மிளகையும், உப்பையும் தையல் நாயகி சந்நதி எதிரில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பையும், மிளகையும் பிரசாதமாக உட்கொள்ள வேண்டும். உடலில் ஏதேனும் நோயைகள் இருந்தால், வெள்ளம் குளத்து நீரில் கரைவது போல உடலிலுள்ல நோய்களும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை.


வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் மிகவும் பிரபலமாகவும், அது பிறப்பிடமாகவும் உள்ளது, மற்றும் நாடி மையங்கள் நிறைய உள்ளன.



வைத்தீஸ்வரன் கோவில் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும். இங்கு பேருந்து மற்றும் ரயில் முலம் மாயவரம் வரை அடையலாம்.
நன்றி இணையம்