சுவாமி விவேகானந்தர் தன் உரையில் சொல்வார்
"இந்த
உலகில் ஆன்மீக அலையும் லவுகீக அலையும் மாறி மாறி எழும்,
பொருளாதாரத்துக்கான இந்த மொதல்கள் முடிந்தபின் அரசுகள் மாறியபின் ஆன்மீக
அலை மீண்டும் எழும்"
இதோ அவர் வாக்கு பலித்துவிட்டது, இந்துமதம்
தான் மீண்டெழுவதை பல இடங்களில் காட்டுகின்றது, ஆலயங்களில், அரசியலில்,
ஊடகங்களி, வாழ்க்கை பாணியில், பொது இடத்தில் என எல்லா இடத்திலும்
காட்டுகின்றது
விடிவெள்ளியினை காட்டியிருக்கும் இந்துமதம், அயோத்தி
துலங்கி அங்கே அந்த ஆலய மணியோசை கேட்க தொடங்கும்போது முழு கதிரவனாக மெல்ல
மெல்ல வெளிபட்டு துலங்கி உலகுக்கே ஒளிகொடுக்கும்
இனி எதைகண்டும்
அஞ்சவேண்டியதில்லை, கவலையுற வேண்டியதில்லை பிரபஞ்சம் தன் அலையினை அடிக்க
ஆரம்பித்துவிட்டது அங்கு எல்லோரும் வெறும் கருவிகளே
அமைதியாக
பிரபஞ்சத்தை உற்று கவனியுங்கள், அது மவுனமாக பேசுவதை கவனியுங்கள், அது
மெல்ல வைக்கும் புள்ளிகளையும் அது இழுக்கும் கோடுகளையும் கவனியுங்கள்,
பெரும் மாற்றத்துக்கு தேசம் மவுனமாக தயாராகிகொண்டிருப்பது புரியும்
காலதேவனே சக்திவாய்ந்தவன் அவன் கண்விழித்திருப்பது மிகபெரும் ஆறுதல்...
🎊🤝🎊
நன்றி இணையம்