தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது,
"எப்போதும் சோர்வடையாமல் நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி
"நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன்.
அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான்.
ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும் என்று கூறினார்.
இதுகுறித்து கிண்டலாக பல்வேறு விமர்சனங்கள் பேசப்படுகிறது.
ஆனால் அந்த பரமாத்மா கீதையில் சொல்கின்றார்...
'அர்ஜுனா! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் நானே.'
'எதெல்லாம் பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.'
'நான் பிறப்பில்லாதவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என உணர்பவன் மனிதரில் தெளிவுபெற்றவன் பாவம் அனைத்தும் அகன்றவன்' என்று.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற இந்திய வம்சாவளியை சார்ந்த விவேக் ராமசாமி ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
"எனது மத நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்துக்காக இங்கே இருக்கிறார்கள் என்பதும், அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மிக கடமை என்பதும் எனது புரிதல். ஏனெனில், கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார். நம் மூலம் பல்வேறு வழிகளில் அவர் செயல்படுகிறார்" என்றார்.
பிரதமர் மோடியின் புரிதல் இதனுடைய அடுத்த நிலை. ஆன்மீகரீதியாக மோடி அடைந்திருக்கும் முதிர்ச்சியையும், ஞானத்தினையுமே இது நமக்கு உணர்த்துகிறது.
நன்றி இணையம் வைரவேல் சுப்பையா