சமீப நாட்களாக நடப்பதை கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது, அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன
இது அரசியலில் மட்டுமல்ல ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம் அலங்காரம் விளையாட்டு என பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது, கொஞ்ச கூர்ந்து பார்த்தால் அது புரியும்
காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்கு தெரியாமல் இருந்தது, இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான பெரும் சன்னதிகளும் எழுப்பபடுகின்றன
காசி துலங்கியதில் இருந்து இதனை அறியமுடிகின்றது, கால பைரவர் வழிபாடுகள் பெருக பெருக பல மாற்றங்களை உணரமுடிகின்றது
காவி நிறம் ரயில் முதல் பல இடங்களில் வருகின்றது, டெல்லியில் நடராஜர் சிலை எழுகினறது
வராஹி என்றொரு தெய்வம் பற்றி இங்கே முன்பு பரபரப்பில்லை, இப்போது வராஹி தெய்வ வழிபாடுகள் காணுமிடமெல்லாம் நடக்கின்றன
தெரிந்தோ தெரியாமலோ மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் கூட அது காட்டபட்டது, அவரை மீறி அக்காட்சி வந்ததுதான் ஆச்சரியம்
முன்பெல்லாம் கேட்ட குரல்கள் அதாவது இந்து துவேஷம், சனாதன ஒழிப்பு இவை எல்லாம் இப்போது கேட்பதிலை மெல்ல அடங்குகின்றன
மக்களிடம் இந்து அறநிலையதுறை பற்றி கேள்விகளும், இந்து ஆலயம் பற்றி அக்கறைகளும் வருகின்றன
எல்லா இந்து ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன, மக்களிடம் பெரும் மாற்றம் வந்திருக்கின்றது
இந்துக்களின் எழுச்சி நம்பமுடியாத சிலிர்ப்பு, இந்துமதம் வேகமாக எழுவதும் அது தன் முழு பலத்தோடு சீறுவதும் இதுவரை நடந்திராத ஆச்சரியம்
அந்த செய்தி உண்மையா பொய்யா தெரியவில்லை ஆனால் "கருங்காலி மாலை" என வந்த அலையும் சாதாணமாக கடந்து செல்ல முடியாதது
சுரங்கததில் சிக்கியவர்களை மீட்ட அந்நியதேச கிறிஸ்தவனே காளியினை வணங்கிகொண்டிருப்பது உலகளவில் பெரும் கவனம் பெற்றது
மோடியால் மட்டுமல்ல அவரை தாண்டி ரிஷி சுணக், அமெரிக்காவில் விவேக் ராம்சாமி போன்றோர் இந்துமதத்தை பெரும் இடத்துக்கு அழைத்து செல்கின்றார்கள்
அமெரிக்காவில் மிகபெரிய இந்து ஆலயம் திறக்கபடுகின்றது
இந்தியாவினுள் இதுகாலம் இல்லாத பெரும் மாற்றங்களை இந்து அடையாளங்களுடன் காணமுடிகின்றது, தேசமும் தேச மக்களும் ஒரு ஆன்மீக அலையில் மூழ்கிகொண்டிருக்கின்றார்கள்
கம்யுனிஸ்ட், நக்சலைட், மதசார்பற்ற காங்கிரஸ் என எல்லாமும் தடம் மாறுவதையும், காலம் மாறுவதை புரிந்தம் புரியாமலும் திமுக தடுமாறுவதையும் கவனிக்க முடிகின்றது
வீட்டு உள் அலங்காரமெல்லாம் இப்போது இந்து பாணி சாயலில் இருப்பது பேஷனாகின்றது, இந்து சாயல்கள் பல இடங்களில் வருகின்றன
இந்து உடைகள் இப்போது நாகரீகமாகின்றன
உலகெல்லாம் கரும்பச்சை நிறம் எனும் ராமனின் நிறம் விருப்ப நிறமாகின்றது
இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு விஷயத்தை மவுனத்தால் சொல்கின்றது, காலம் மாறுவதையும் ஆன்மீக எழுவதையும் இந்துமதம் மேல் எழுவதையும் மெல்லிய வெளிச்சமாக காட்டுகின்றது
எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் இந்துமதம் மேல் எழுகின்றது.. அரசியல், சட்டம், ஊடகம், மக்கள் மன்றம், சமூகம் இன்னும் எல்லா துறைகளிலும் அது தன் மறுமலர்ச்சியினை காட்டுகின்றது
இதை ஆழ கவனித்தால் உங்களுக்கே புரியும், இனி இந்துமதம் மேல் எழும் எதைபற்றியும் அஞ்சவேண்டியதில்லை
தர்மம் கால பைரவர் வடிவிலும், வராஹி வடிவிலும் அது பலத்த எச்சரிக்கையினை செய்கின்றது
வராஹி என்றால் போர் கடவுள், "வார்" என்பதோடு வாராஹி எனும் அந்த சொல்லை சேர்த்துபார்த்தால் பொருள் விளங்கும், மூலச்சொல் வராஹிதான்
வராஹி கண்விழித்தபின்புதான் இங்கே இதுவரை ஆடிய அராஜக கும்பல்கள் மெல்ல அடங்குகின்றன, தர்மத்துக்கான் போரை அவளே செய்துகொண்டிருக்கின்றாள்
கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அந்த கார் ஏன் வெடிக்கவேண்டும் என்பதையும் இன்னும் பல மெய்சிலிர்க்கும் சம்பவங்களையும் கண்டால் உங்களுக்கே புரியும்
அவளின் பெரும் போர் தொடங்கிவிட்டது
இந்துமத , இந்திய எதிரிகளெல்லாம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முழுக்க அடக்கபடுவதை கண்டால் வராஹி வந்துவிட்டதை இதைவிட என்ன ஆதாரத்தை சொல்லி விளக்கமுடியும் எனும் அற்புதமான பதிலும் வருகின்றது
காலபைரவரே தீர்ப்புகளை சொல்ல தொடங்குகின்றார் இனி இங்கு மோசடி அரசியல், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மர்ம சக்தி ஆட்டம், பொய்யிலும் புரட்டிலும் செய்யும் அட்டகாசமெல்லாம் இனி எடுபடாது, அவரவர்க்கான தண்டனையினை அவரவர் பெற்றே தீருவர், கால பைரவர் அதை செய்வார்
காசி துலங்கிவிட்டது இன்னும் சில விஷயம் மட்டும் பாக்கி இருக்கின்றது, மதுரா துலங்க தயாராகின்றது
மானுடன் எவ்வளவுதான் முயன்றாலும் காலம் ஒத்துழைக்காமல் எதுவும் சாத்தியமில்லை, அவ்வகையில் கால பைரவரின் எழுச்சி தேசத்தையும் மதத்தையும் காக்க உருவாகிவிட்டது
மக்கள் மனமும் சிந்தையும் மாறிகொண்டிருப்பதையும், இந்து மதம்பால் பெரும் பற்றோடு அவர்கள் நாடிவந்து அணைப்பதையும் உலகம் அமைதியாக காண்கின்றது