உயர்திரு. சோ அவா்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:37 | Best Blogger Tips
Image may contain: 1 person
ராமநாத ஐயர் என்பவர் மிகச்சிறந்த வக்கீலாக இருக்கிறார். அவரிடம் ஒரு கொலைகாரன் சென்று சொல்கிறான். "ஐயா இரண்டு பேரை கொலை செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" கொலைகாரர்களை கூட காப்பாற்றும் தொழிலா நான் இருக்கிறேன் ? என்று அந்த ராமநாத ஐயர் நினைக்கிறார். அதன் பின் கோர்டை சுழற்றி வைக்கிறார். சாகும் வரை அவர் கோர்டை போடலை. சட்டத்தை குறித்து "லா லெக்ஸிகன்" (The Law Lexicon) என்கிற புத்தகத்தை எழுதுகிறார். அதைத்தான் சமீபத்தில் கூட குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி அவர்கள் ஒவ்வொரு வழக்கறிஞரும் படித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு புத்தகம் அது. அதன் பின் அந்த ராமநாத ஐயர் காசிக்கு சென்று சாகும் வரை பிச்சை எடுத்து சாப்பிட்டார். அப்படிப்பட்டவரின் வழியில் அவரின் பேரனாக பிறந்தவர்தான் சோ ராமசுவாமி. ராமநாத ஐயர் போன்றவர்கள்தான் உண்மையான பிராமணன் என்று குறிப்பிடும் வகையில் "எங்கே பிராமணன்" எனும் புத்தகம் எழுதியிருந்தார் சோ. ஒரு பிராமணன் என்பவன் எந்த உயிருக்கும் தீங்கிழைக்காமல், சுயதொழில் புரியாமல் பிச்சை எடுத்து உண்ண வேண்டும். அப்படிப்பட்ட பிராமணர்களை பார்ப்பது அரிதிலும் அரிது என்கிறார் அந்த புத்தகத்தில். இது போல் ராமாயனம், மகாபாரதம் என்று பலவற்றை குறித்து அவர் எழுதியுள்ளார். அவரிடம் இருந்து நான் கற்று கொண்டது மிக அதிகம்.
நான் சிறு வயதில் சோ அவர்களின் நாடகங்களை பார்ப்பது உண்டு. அவர் அப்போழுதே எழுதும் பல கட்டுரைகளையும் படிப்பேன். "இவ்வளவு பெரிய மேதை, ஜீனியஸ் என்னய்யா நாடகத்துல கோமாளி வேஷம் போடறாரு ?" என்று நினைப்பேன். ஒரு முறை அவர் சொன்னார் "நான் உலகம் முழுதும் இருக்கற பல புத்தகங்களை ராப்பகலா படிச்சு எழுதுனா 50 ரூபாய் கொடுப்பான்....ஆனால் கோமாளி வேஷம் போட்டா 40000 சம்பளமா கிடைக்கும்" ஆனால் ஒரு கட்டத்தில், மனசுக்கு திருப்தி இல்லாத அந்த தொழில் அவசியம் இல்லை என்று முழு நேர பத்திரிகையாளராக அவர் மாறினார். அவரை போன்ற ஜாம்பவான்களை பார்ப்பது அரிதிலும் அரிது - பண்பாளர் மற்றும் நடிகர் சிவகுமார் அவர்கள்

 நன்றி இணையம்