மார்கழி மாத விரத பலன்கள் .............................

மணக்கால் அய்யம்பேட்டை | 2:59 PM | Best Blogger Tips
Related image
மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்
'
ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.
சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காக
செய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் வருகிறது
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர், சேலம்
M.
கிருஷ்ண மோகன் 8526223399.
மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.
இத்துணை காரணங்களால் மார்கழி சிறப்பு மாதம் சிறப்பு பெறுகிறது.
சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும் உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள்.
இந்த நாளில் சில கோவில்களில் சிறப்புப் பூஜைகளைச் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் அருளினார். மகளிர் நோன்பு நோற்பதற்குத் தகுந்த மாதம் மார்கழி. பாகவத புராணத்தில், இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு.
ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை பார்வதியை வழிபட்டனர். ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர் `கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் குறிக்கோளால் ஒன்றே. வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை மாதம் என்று வழங்குகின்றன.
மார்கழியின் பனிக் குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே இது பீடை மாதம் என்று சிலர் தவறாக திரித்து கூறி விட்டனர். உண்மையில் அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி மாதம். பீடு என்றால் சிறப்பு பெருமை என்ற அர்த்தமும் உண்டு.
எனவே பீடு உடைய மாதம் மார்கழி என்றனர். அதுவே மருவி பீடை மாதம் என்றாகி விட்டது. மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது. விடியற் காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும் முற்றத்தையும் பெருக்கித் தூய்மைப்படுத்துகின்றனர்.
தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து, அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். மார்கழியில் தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்ரடிப் பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி, மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளி யெழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாராயணம் செய்கின்றனர்.
மார்கழியில் சிறப்பாகப் பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோவில்கள் சிலவற்றில் மார்கழியில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி...........
மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதமிருக்க வேண்டும். துளசி தீர்த்தம் தவிர வேறு எதையும் உண்ணவும், பருகவும் கூடாது.
இரவு முழுவதும் சோர்வில்லாமல் கண் விழித்து, பரந்தாமனைப் போற்றும் பக்திப் பாடல்களைப் பாடலாம். பரதபதம் பெறுவதற்காக பரம பதமும் ஆடலாம். மறுநாள் துவாதசி அன்று விஷ்ணுவை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
சொர்க்கவாசல்........
வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில் வைணவக் கோவில்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்பது, ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, `காயத்திரியை விடச் சிறந்த மந்திரமில்லை, தாயை விடச் சிறந்த தெய்வமில்லை, ஏகாதசியை விடச் சிறந்த விரதமில்லை' என்ற வழக்கும் ஏற்பட்டது.
ஆறு சமய வழிபாடு..........
மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்குரிய திருநாள்கள் வருகின்றன. காணாபத்யம்-கணபதி வழிபாடு-தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்திக் கணபதியை வழிபடுகின்றனர்.
சைவம்-சிவபழிபாடு- திருவாதிரை
வைணவம்- விஷ்ணு வழிபாடு - வைகுண்டு ஏகாதசி
கௌமாரம்- முருக வழிபாடு- படி உற்சவம்.
சாக்தம் - சக்திவழிபாடு- பாவை நோன்பு.
சௌரம்- சூரிய வழிபாடு- தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி மாத இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தைப் பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்.
படி உற்சவம்.........
டிசம்பர் 31-ந்தேதி நாள் மார்கழியில் பொருந்தி வருகிறது. அந்நாளில், முருகனது திருத்தணி முதலான மலைக்கோவில் திருத்தலங்கள் பலவற்றில் `படி உற்சவம்' மிக்க சிறப்புடன் நடைபெறுகின்றது. பல குழுவினர் மலைப்படிகளின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ்ப் பாடல்களை பாடுகின்றனர்.
திருவாதிரைத் திருநாள்..........
மார்கழி பவுர்ணமியுடன் திருவாதிரை நட்சத்திரம் பொருந்தும் நாளே திருவாதிரைத் திருநாள். அன்றைய நாளில் சிதம்பரம்-தில்லை நடராஜனைத் தரிசிக்கும் தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். திருவாதிரைத் திருநாளன்று இறைவனின் முன் களி நிவேதனம் செய்கின்றனர். ஏழு காய்கறிகளைக் கலந்து செய்யும் கூட்டைத் திருவாதிரைக் கூட்டு என்று அழைக்கின்றனர்.
அனுமன் ஜெயந்தி........
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர் அனுமன். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும். ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு குங்குமப் பொட்டை இட வேண்டும்.
தினமும் இவ்வாறே தொடர்ச்சியாக, இட்டுக் கொண்டு வந்தால், குங்குமப் பொட்டு வரிசை வாலின் நுனிப் பகுதியை அடைவதற்கு முன்னால், அனுமனின் பேரருளால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். அனுமனை வழிபடுகின்றவர்களுக்கு அவர் புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை ஆகியவற்றை அருளுகின்றார். இது காஞ்சி மகா பெரியவரின் அருள்வாக்கு
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர், சேலம்
M.
கிருஷ்ண மோகன் 8526223399
மார்கழி மாதம் பிறந்து விட்டால், எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து அபிஷேகம், பூஜை, ஆராதனை என்று பக்திப் பெருக்கை ஊரெங்கும் பரவச்செய்வர். மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுபவர்கூட மார்கழியில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தமக்குகந்த ஆண்டவனைத் துதிப்பர்.
வைணவர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி, வேங்கடேச சுப்ரபாதம் போன்ற திருப்பாடல்களைப் பாடுவர். சைவர்கள் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை சிவன்மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி, திருவண்ணாமலையில் பாடிய திருவெம்பாவை முதலிய திருப்பாடல்களைப் பாடுவர். ஜீவாத்மா தனது தாமச குணத்தை நீக்கி, இறைவனைத் துதித்து பரமாத்வுடன் இணையவேண்டும் என்ற தத்துவத்தையே இவை விளக்குகின்றன. அதிகாலையில் இத்தகைய வழிபாடுகள் செய்யும்போது மனம் தெளிவுடன் இருக்கும். அதனால் மனோலயம் எளிதில் வசப்படும்.
மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு?
இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள்.
நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர்.
"மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்' என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்றே கூறுகிறார்.
நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒருநாள். மார்கழி மாதம் அவர்களுக்கு விடியல் பொழுது. நமது விடியல் பொழுதும் தேவர்களின் விடியல் பொழுதும் மார்கழியில் ஒன்றுசேர்கிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் (Divine Vibrations) வெளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிலையைத் தரக்கூடியது. இதைப் பெறுவதற்காகத்தான் மார்கழி அதிகாலை வழிபாட்டை நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர், சேலம்
M.
கிருஷ்ண மோகன் 8526223399
வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேசர், கோவிந்தன், நாராயணன், கிருஷ்ணன், வரதராஜன் என்று நாம் வணங்கும் பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக இலட்சுமி தேவியுடன் வந்து எமக்கு கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பெற்றுள்ளன.
மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடும் திருவாதிரை (ஆதிரை) திருநாளும், விஷ்ணு பகவானைக் வழிபடும்ஏகாதசித் திருநாளும் அமைவதால் மார்கழி மாதம் சிறப்புப் பெறுகின்றது. இவ் இரண்டு வழிபாடுகளும் அதிகாலைப் பொழுதில் நிகழ்வதும் மார்கழி மாதத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசியாகும். விவரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினத்தில் பெருமாளை வணங்குபவர்கள்சொர்க்கத்தைஅடைவர் என்பது ஐதீகம். இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது.
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாளாக அமைகின்றது. அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்குபகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம்.
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப் பொறுத்தவரை இரவுப் பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள் கொள்ளலாம்.
மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது.
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர், சேலம்
M.
கிருஷ்ண மோகன் 8526223399
ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்ச (வளர்பிறையிலும்), கிருஷ்ணபட்ச (தேய்பிறையிலும்) ஏகாதசி திதி வந்தாலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்குத்தான்வைகுண்ட ஏகாதசிஎன்ற தனி மகிமை உண்டு. இத் திருநாள் இவ் வருடம் 1.1.2015 ல் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது
வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேசர், கோவிந்தன், நாராயணன், கிருஷ்ணன், வரதராஜன் என்று நாம் வணங்கும் பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக இலட்சுமி தேவியுடன் வந்து எமக்கு கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பெற்றுள்ளன.
சொர்க்க வாசல் என்பதன் அர்த்தம்:
மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட (ஆலய) வாசல்கள் திறந்தேயிருப்பினும்; பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் எமக்கு அருள் மழை சொரிய வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்பெறுகின்றது.
தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.
விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.
எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து ஐஸ்வரியங்களையும் பெற்று வாழலாம்.
வைகுண்ட ஏகாதசி திருமால் திருத்தலங்களில் கொண்டாடப்படுவதற்கு கூறப்பெறும் இன்னுமொரு காரணம்
ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர்.
அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம்நாங்கள் தங்கள் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி அன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார்.
அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள்; மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார். அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
ஏகாதசி விரத முறை:
ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன்லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.
முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.
துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.
மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாக தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்தால் மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிடைத்து மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். சீதேவி வீட்டினில் குடிகொள்ளும் போது எமக்கு கஷ்டமும் துன்பமும் தந்து வருத்தும் மூதேவி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.
ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தைமார்க்கசிரஎன்று வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப் பிதாமகராகத் திகழ்பவர் ம்ருகண்டு மகரிஷி. இவரதும்ருகண்டு சூத்ரம்மற்றும்ம்ருகண்டு வாக்கியம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர்.
தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார்.
தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே. மார்க்கண்டேய சரித்திரம் மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள், விவரம் அறிந்தவர்கள்.
அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின் காரணமாகத்தான் அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது. அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ் சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில்.மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம்.
நாமும் வைகுண்ட ஏகாதசியில் நோன்பிருந்து சுவர்க்க வாயில் திறக்கும் போது வைகுண்டத்தில் இருந்து சுவர்க்க வாயில் வழியாக வருகை தரும் பரந்தாமனையும் இலட்சுமி தேவியையும் வழிபட்டு சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்புற்று வாழ்வோமாக.
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர், சேலம்
M.
கிருஷ்ண மோகன் 8526223399