சாளக்கிராமம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:27 PM | Best Blogger Tips
Image result for சாளக்கிராமம்

பண்டைய இந்தியாவில் தலை சிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம்.
இங்கு இமயமலையின் அடிவாரத்தை ஒட்டினார்போல ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது .இங்கு சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது.
இந்தப்பகுதிதான் சாளக்கிராமம் என்று அழைக்கப்படுகிறது . இந்த ஹரி ஷேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், விஷ்ணுவின் சகல அம்சங்களும் பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாகக் கூறப்படுகிறது.
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உற்பத்தியாகின்ற ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக்கூடு சங்கு போன்ற பலவடிவங்களிலும் , பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
மஹாவிஷ்ணு தாமாகவே, தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு, கற்களை ( சாளக்கிராமம் ) குடைந்து , அதன் கர்பத்தை அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில், இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாகவே வரைந்து வெகுகாலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இப்பேர்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும் .இவைகளில் ஸ்ரீமந் நாரயணின் ஜீவருபம் கலந்து இருப்பதாக ஐதீகம் .சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜா பலன்களும் மாறுபடுகின்றனவாம்....
இதன் அமைப்பு மற்றும் நிறங்களைப் பொறுத்து இதன் பலன்களும் வேறுபடுகின்றன
1. முற்றிலும் சிவப்பு நிறமாக இருக்கும் சாளக்கிராமம் நரசிம்மக்கல் எனப்படுகிறது. இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
2. சக்கரம் போன்ற வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.
3. முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை வாமதேவன் கல் என்பர்.
4. இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.
5. வட்டவடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.
6. குடைபோன்ற வடிவமுள்ள கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.
7. சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது லட்சுமி காந்தம் எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
8. சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.
9. சப்பையான வடிவில் உள்ள சாளக்கிராமம் துன்பம் தரும்.
10. சாளக்கிராமக்கல் இடப்புறம் கருப்பு, வலப்புறம் பழுப்பு நிறத்துடன் இருந்தால் வறுமை வரும்.
சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் கூடாது.
பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று.
1 . நீல நிறம் செல்வம் , சுகம் ( ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம் ).
2 . பச்சை நிறம் பலம் , தைரியம் ( ஸ்ரீ நாரயண ஷேத்திரம் ).
3 .வெண்மை நிறம் ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்).
4 .கருப்பு நிறம் புகழ் , பெருமை ( விஷ்ணு ஷேத்திரம்).
5 .புகை நிறம் துக்கம் , தரித்திரம்.
6 .மஞ்சள் நிறம் (வாமன ஷேத்திரம்).
7 . பசும்பொன் ( ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம் (ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்).
சாளக்கிராமத்தை பால் ( ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் , அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும் .
துண்டிக்கப்பட்டிருந்தாலும் ( ) விரிந்து போனதாய் இருந்தாலும்
சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோஷமில்லை.

 நன்றி இணையம்