தியாகம்...நாட்டுப்பற்று...லட்சிய உறுதி...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:50 | Best Blogger Tips
Image result for தியாகம்...நாட்டுப்பற்று...லட்சிய உறுதி...

இரண்டாம் உலகப்போர் (1939-45) நடந்து கொண்டிருக்கின்றது. ஹிட்லரின் படைகள் சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடுகின்றன. ஹிட்லரின் படைகள் முதன் முதலில் தோல்வியைச் சந்தித்த நாடு ரஷ்யாதான். காரணம் கடுமையானப் பணிப் பொலிவு. ஜெர்மன் வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. விளைவு பின் வாங்கினர்.
பின் வாங்கிய ஹிட்லரின் படைகள் ரஷ்ய வீரர்கள் சிலரைச் சிறைபிடித்துச் சென்றனர். அவ்வாறு ரஷ்ய வீரர்களால் சிறைபிடிக்கப் பட்ட ஒரு வீரனின் பெயர் #லெஃப்டினெண்ட்யாகோப்.
இந்த #யாகோப் வேறு யாருமல்ல; 
ரஷ்ய அதிபர் #ஸ்டாலினின் சொந்த மகன். 
விசாரனையின் போதுதான், ஜெர்மானியப் படையினருக்குத் தெரிந்தது, தாங்கள் பிடித்து வந்திருப்பது, #ஸ்டாலின் #வாரிசுஎன்று.
ஜெர்மனி ஸ்டாலினைத் தொடர்பு கொண்டது.
#உங்கள் மகன் யாகோப் இப்பொழுது எங்கள் கையில்.
#இதயமே நின்றுவிடும் போலிருந்தது ஸ்டாலினுக்கு. ஒரே நொடிதான், சுதாரித்துக் கொண்டார்.
சரி சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் சிறைபிடித்து வைத்திருக்கிறீர்களே, ஜெர்மானிய வீரர்கள், அவர்களை அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். சம்மதமா?
#மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசிப் பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின். யாகோப்பின் தலை துண்டிக்கப் பட்டது.

 நன்றி இணையம்