மாநிலங்களவை http://tawp.in/r/ybz
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவை | |
வகை | |
---|---|
வகை | மேலவை |
தலைமையேற்பவர் | |
கூட்டத் தலைவர் | முகம்மது அமீத் அன்சாரி, சுயேச்சை 2007 முதல் |
பெரும்பான்மைத் தலைவர் | பிரதமர் மன்மோகன் சிங், (இ.தே.கா) 2007 முதல் |
எதிர்கட்சித் தலைவர் | அருண்ஜேட்லி, (பா.ஜ.க) 2004 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 250 (238 தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (மறைமுகத் தேர்தல் மூலம்) + 12 நியமனம் செய்யபட்டவர்கள்) |
அரசியல் குழுக்கள் | இடது முன்னணி தே.ஜ.கூ ஐ.மு.கூ |
கூட்டரங்கம் | |
சன்சத் பவன் | |
இணையத்தளம் | |
மாநிலங்களவை |
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.
மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது.
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
பொருளடக்கம்[மறை] |