தெரியுமா உங்களுக்கு ! இந்தியா, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பற்றி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:41 | Best Blogger Tips

இந்தியா

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரின் வரையறையின்படி 40 இலட்சம் (4 மில்லியன்) மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்கள் பெருநகரங்களாக அறிவிக்கப்படுகின்றன. [1] மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத்,நாக்பூர், அகமதாபாத், புனே, நாசிக் மற்றும் சூரத் ஆகிய பத்து நகரங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்நகரங்களில் வாழும் அரசு ஊழியர்கள் கூடுதல் வீட்டு வாடகைப்படி பெற தகுதியானவர்கள்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும்.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை
  1. மாநகராட்சி
  2. நகராட்சி
  3. பேரூராட்சி
  4. ஊராட்சி
மாநகராட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநகராட்சி (municipal corporation) ஓர் மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.
இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநில அரசுகளால் ஆய்வு செய்யப்பட்டு தனி சட்டம் மூலம் மாநகராட்சி நிலை பெறுகின்றன. இதன்மூலம் இந்த மாநகராட்சிகள் நேரடியாக மாநில அரசுடன் தொடர்பு கொள்கின்றன. இந்தியாவின் மிகப்பெரும் மாநகராட்சியாக மும்பை விளங்குகிறது. அடுத்த நிலைகளில் முறையே தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகியன உள்ளன.
மாநகரம் பல வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகராட்சி அங்கத்தினர்கள் தங்களுக்குள் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை மேலாண்மை செய்ய இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த மாநகராட்சி ஆணையர் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை மேற்பார்வையிடுவதுடன் மாநகராட்சி எடுக்கும் முடிவுகளை செயலாற்றும் பொறுப்பை உடையவராகிறார். ஆண்டின் நிதிநிலை அறிக்கையையும் தயாரிக்கிறார்.
ஓர் நகரின் மாநகராட்சி சாலைகள் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், பிறப்பு/இறப்பு பதிவு, கழிவுகள் அகற்றல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளது. மேலும் சில மாநகராட்சிகள் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தீயணைப்பு மற்றும் முதலுதவி வண்டி சேவைகளை வழங்குகின்றன.பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களையும் பராமரிக்கின்றன. இவற்றிற்கான நிதி வருவாய் சொத்து வரி, மனமகிழ்வு வரி, ஆக்ட்ராய் என்னும் நுழைவு வரி (பல மாநகராட்சிகளில் கைவிடப்பட்டு வருகிறது) மூலமும் பயன்படுத்தும் சேவைகளுக்கான கட்டணங்கள் மூலமும் பெறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன.
  1. சென்னை
  2. மதுரை
  3. கோயம்புத்தூர்
  4. திருச்சிராப்பள்ளி
  5. சேலம்
  6. திருநெல்வேலி
  7. ஈரோடு
  8. தூத்துக்குடி
  9. திருப்பூர்
  10. வேலூர்
இந்த மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அல்லது இதற்கு தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து மாநகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவ்வாரே மாநகர்மன்ற தலைவரும்(மேயர்) நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மாமன்றத்துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவர் மாநகராட்சி மன்றத்துணைத் தலைவராகப் பதவியேற்கின்றார். மாநகர மேயருக்கு அடுத்தபடியாக மாமன்றத் துணைத் தலைவர் செயல்படுவார். மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
நகராட்சி
தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சிஅவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.
நகராட்சி ஒரு ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான நாடுகளில் நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" என (பிரெஞ்சு: commune, இத்தாலியம்: comune, ரோமானியம்: comună, சுவீடியம்: kommun மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: kommune) அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக மத்தியகிழக்கு நாடுகளில், நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகரமண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது.
கனடா, கிரீன்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் நாடுகளில் மிகப்பெரிய நகராட்சிகளைக் காணலாம்.

நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000க்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000 மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது.

பேரூராட்சி



Seal of Tamil Nadu.jpg
இக்கட்டுரை
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி
 பார்  பேச்சு  தொகு 
தமிழகப் பேரூராட்சி மன்றங்கள் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் 561 பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர்.
பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது.
பேரூராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்/உதவி இயக்குநர் மற்றும் மாநில அளவில் பேரூராட்சிகளின் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பேரூராட்சிகள் இயக்ககம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும்துறையின் கீழ் செயல்படுகிறது.

பேரூராட்சிகள் மேற்கொள்ளும் பணிகள்

  • பொது சுகாதாரம் - துப்புரவு,கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி,திடக்கழிவு மேலாண்மை
  • மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
  • குடிநீர் வழங்கல்
  • விளக்குவசதி
  • கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
  • தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
  • பிறப்பு/இறப்பு பதிவு
  • மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை பேரூராட்சிகள் எண்ணிக்கை
நிலை 2 80
நிலை 1 215
தேர்வுநிலை 222
சிறப்புநிலை 12
மொத்தம் 529

ஊராட்சி ஒன்றியம் 
மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் தமிழ்நாடு சட்டமன்றம் 73 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் படி 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தத்தின் படி ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. [1] மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 384 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.


இந்தியாவின் ஊராட்சி மன்றம்



தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய அனைத்து ஊர்களையும் அதன் வருவாய்க்கு ஏற்ப அருகிலிருக்கும் சில ஊர்களைச் சேர்த்து ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சிக்கு தலைவரையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்கின்றனர். மன்ற உறுப்பினர்களில் இருந்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சிகளில் தலைவரே நிதி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் நேரடியாகக் கவனிக்கின்றார். இவருக்கு உதவியாக ஊராட்சி எழுத்தர் பணியில் ஒருவரை அரசு நியமிக்கிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 12618 ஊராட்சிகள் இருக்கின்றன.
  • இந்த ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகளில் ஒன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் எனும் அமைப்பிலும், இந்த ஊராட்சிகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனும் அமைப்பின் கீழும் செயல்படுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.


கிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும். ஊராட்சி மன்றங்கள் சாதிய அமைப்புகளால் சில இந்தியப் பகுதிகளில் காப் என்ப்படும் குழுவைக் குறிப்பதல்ல. இது சாதிய அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் மகாத்மா காந்தியால் பிரித்தானிய ஆளுகையின் போது அறிமுகப் படுத்தப்பட்டது. அவருடைய கிராமங்களை நேசிக்கும் பார்வையில், கிராம சுவராஜ் கோட்பாட்டின் படி இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கிராம சுயாட்சி அ சுய ஆளுமை). தமிழில் இது ஊராட்சி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.

  •  

அறிமுகம்

கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும் வகையில் அதிகார பரவாலாக்கம், பொருளாதார வரைவு மற்றும் சமூக நீதி போன்ற கிராம ஊராட்சித் தொடர்பான 29 செயல் திட்டங்களை 11 வது அட்டவணையில் வெளிப்படுத்தியதின் விளைவாக கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கண்டது.

நிதி

  • ஊராட்சிகள் அதன் நிதி ஆதாரங்களை மூன்று வழிகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. -
    • உள் அமைப்புகள் பெற்றுக் கொள்ளும் விதமாக மைய நிதி ஆணையம் பரிந்துரைத்ததின் படி பெற்றுக் கொள்ளலாம்.
    • மைய ஆதரவளிப்போர் குழக்கள் மூலம் நிதி ஆதாரங்கள் அமல்படுத்தப்படுகின்றது.
·          
    • மாநில அரசின் மாநில நிதி ஆணையப் பரிந்துரையின் படி நிதி ஆதாரங்கள் வழங்குகின்றது.
    • ( நன்றி  விக்கிப்பீடியா )