இந்திய ஆட்சிப் பணி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips

  http://tawp.in/r/19bf

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा பாரதீய பிரஷானிக்கா சேவா ) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்திய ஆட்சிப் பணிக்காக 60 முதல் 90 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் குடியுரிமை தேர்வின் மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.

[தொகு] வரலாறு

இந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது.

[தொகு] தேர்வு மற்றும் பயிற்சிகள்

ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியுரிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக நடுவண் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).

[தொகு] தேர்வு நிலைகள்

  • இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
    • முதனிலை தேர்வு (preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

[தொகு] தேர்வு நடைமுறை

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண்
முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் 150 1 150
விருப்பப் பாடம் 120 2.5 300
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 450
முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)
விருப்பப் பாடம்-1 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
விருப்பப் பாடம்-2 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
பொதுப் பாடம் (பொது அறிவு) 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
கட்டுரை """" 200 200
ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)
கட்டாய மொழி (தகுதி வாய்ந்தனவாக)
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300

[தொகு] பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணி

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது.

[தொகு] பத்தாம் வகுப்பு

இந்தப் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதான். 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கான நான்காம் பிரிவுத் தேர்வின் மூலம் வருவாய்த்துறையில் பள்ளிப்பட்டு வட்டத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வு பெற்று பல நிலைகளில் தமிழ்நாடு அரசுப் பணியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[1]


இந்திய வனப் பணி http://tawp.in/r/19bi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய வனப் பணி (அ) இ.வ.ப, (ஐ.எப்.எஸ்) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய ஆட்சிப் பணி (அ) இ. ஆ. ப ஆகும். இ வ.ப பயிற்சி பெற்ற அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் ஆளுமைக்குட்பட்ட வனப்பகுதிகளை பாதுகாக்கவும், வனவுயிரனங்களை பராமரிக்கும் பொறுப்பினை மேற்கொள்வதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் வனஅமைச்சக செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர்.


[தொகு] வரலாறு

இந்திய வனப் பணி 1966 [1] ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டது. பிரித்தானிய காலணி ஆளுமையின் கீழ் இந்தியா இருந்த காலகட்டத்தில் இது பேர்ரசின் வனத் துறை என்று 1864[1] பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டிருந்து. அப்பொழுதய வனத்துறைத் தலைவராக (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் பாரஸ்ட்) முனைவர் டியட்ரிச் பிரான்டீஸ் என்ற ஜெர்மானிய வன அலுவலர் தலைமையேற்றிருந்தார்.
1867[1] இல் பேரரசின் வனப்பணி என்ற அமைப்பை பேரரசின் வனத் துறையின்[1] கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலணி அரசாங்கமும் வனவளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் நோக்கத்தில் வனத்துறை செயலாட்சியர் மற்றும் வல்லுநர்களை உருவாக்கி வனவளர்ச்சியில் முன்னோடிகளாக இன்று நாம் பங்கெடுக்கும் அளவில் செயல்பட்டது என்பது மிகையாகாது.
அன்றைய காலகட்டத்தில் இதன் அலுவலர்கள் 1867[1] முதல் 1885 வரையில் ஜெர்மன் மற்றும் பிரான்சுகளில் பயிற்சி பெற்றனர். 1905 இல் கூப்பர் மலை, இலண்டன் மற்றும் குறிப்பிடத்தக்க கல்லூரிகளில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றனர்.
1905 முதல் 1926 வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதற்கானப் பயிற்சியை வழங்கியது.
1927 முதல் 1932 வரையில் வன அலுவலர்கள் பேரரசின் வன ஆராய்ச்சி மையம் டேரடூனில் துவக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சியளித்த்து.இது கட்டமைக்கப்பட்டது 1906. அதன்பின் இந்திய வனக் கல்லூரி 1938 இல் டேராடூனில் துவக்கப்பட்டு வன அலுவலர்களுக்கு மிக சிறப்பானதொரு பயிற்சி அளிக்கப்பெற்று தேர்வு செய்யப்பட்டனர்.
தற்பொழுதய வனப் பணி இந்திய விடுதலைக்குப்பிறகு 1966 இல் இந்திய பணியியல் சட்டம் 1951[1] , இன் படி கட்டமைக்கப்பட்டு இந்திய வனப் பணி என்ற அமைப்பாக செயலாற்றி வருகின்றது.
இந்தியாவின் வனப் பரப்பளவு 6,35,400 ச.கி.மீ[1] வரை பரந்துள்ளது ஆகும். நாட்டின் 22.27 சதவீதம் வனப்பகுதியாகும். இதைப் பாதுகாக்கும் கடமை அரசுக்குள்ளதால் 1894 ல் உருவாக்கப்பட்ட வனப்பாதுக்காப்புக் கொள்கை 1952, மீண்டும் 1988 இல் திருத்தியமைக்கப்பட்டது.

[தொகு] தேர்வு மற்றும் பயிற்சிகள்

[தொகு] தேர்வு நடைமுறை

இந்திய வனப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் மதிப்பெண்
பொது ஆங்கிலம் தாள் 300
பொது அறிவுத் தாள் 300
மொத்த மதிப்பெண் 600
விருப்பத் தேர்வு-1 (14 பாடப்பிரிவுகளுள்) 200 ம.பெ
விருப்பத் தேர்வு-2(14 பாடப்பிரிவுகளுள்) 200 ம.பெ
விருப்பத் தேர்வு மொத்த மதிப்பெண் 400
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300

இந்தியக் காவல் பணி http://tawp.in/r/19ax

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியக் காவல் பணி

சென்னை மாநகரக் காவல் ரோந்து ஊர்தி
இந்தியக் காவல் பணி (இந்தியன் போலிஸ் சர்வீஸ்), பொதுவாக இந்தியக் காவல் என்று அழைக்கப்படும் (அ) இ.கா.ப அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகும்.
1947 இல் இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலைப் பெற்ற பிறகு 1948 இல் பேரரசுக் காவல் (இம்பீரியல் போலிஸ்) என்றிருந்தப் பெயர் இந்தியக் காவல் பணி (இ.கா.ப) என்று பெயர் மாற்றம் கண்டது.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] தேர்வு மற்றும் பயிற்சிகள்

ஒருவர் இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியுரிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்திய ஆட்சிப் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது).

[தொகு] தேர்வு நிலைகள்

  • இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
    • முதனிலை தேர்வு (Preliminary Examination) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு (Personality Test) புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

[தொகு] தேர்வு நடைமுறை

இந்தியக் காவல் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண்
முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் 150 1 150
விருப்பப் பாடம் 1 120 2.5 300
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 450
முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)
விருப்பத் தேர்வு-1 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
விருப்பத் தேர்வு-2 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
பொதுப் பாடம் 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
கட்டுரை """" 200 200
ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)
கட்டாய மொழி (தகுதி வாய்ந்தனவாக)
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300
( நன்றி  விக்கிப்பீடியா )