இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள் http://tawp.in/r/17xi
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை இந்திய அரசு மற்றும் அரசியல் என்ற தொடரின் ஒரு பகுதி |
மற்ற நாடுகள் · அரசியல் நுழைவாயில் இந்திய அரசு நுழைவாயில் |
இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள் ஆளுநர்கள் இந்தியாவின் மாநிலங்களிலும் துணை ஆளுநர்கள் இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளிலும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று கடமையாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] ஆளுநர்கள்
ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.[தொகு] ஆளுநரின் செயல் அதிகாரங்கள்
- ஆளுநர் மாநிலத்தில் செயலாட்சியரை நியமிப்பதற்கு மற்றும் நீக்குவதற்கு அதிகாரம் பெற்றவர்.
- ஆளுநர் மாநிலங்களில் உள்ள சட்டமன்றக் கீழவை மற்றும் மேலவைகளில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்.
- ஆளுநர் வரையரைக்குட்படுத்தபட்ட அதிகாரங்களின் படி மாநிலங்களில் அதிகாரங்களை செலுத்தலாம்.
- ஆளுநரின் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது.