மாநிலங்களவை உறுப்பினர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:05 | Best Blogger Tips

http://tawp.in/r/1rwe
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மாநிலங்களவைக்குக் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்குக் குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம்:

[தொகு] மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியாவிலுள்ள மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைப் பட்டியல்.
வ.எண். மாநிலம் இருக்கைகளின் எண்ணிக்கை குறிப்புகள்
1 ஆந்திரப் பிரதேசம் 18 ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்
2 அருணாச்சலப் பிரதேசம் 1 அருணாச்சலப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்
3 அசாம் 7 அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
4 பீகார் 16 பீகார் மாநிலங்களவை உறுப்பினர்கள்
5 சட்டீஸ்கர் 5 சட்டீஸ்கர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
6 கோவா 1 கோவா மாநிலங்களவை உறுப்பினர்கள்
7 குஜராத் 11 குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள்
8 அரியானா 5 அரியானா மாநிலங்களவை உறுப்பினர்கள்
9 இமாச்சலப் பிரதேசம் 3 இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
10 ஜம்மு காஷ்மீர் 4 ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
11 ஜார்க்கண்ட் 6 ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்
12 கர்நாடகா 12 கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர்கள்
13 கேரளா 9 கேரளா மாநிலங்களவை உறுப்பினர்கள்
14 மத்தியப் பிரதேசம் 11 மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
15 மகாராஷ்டிரா 19 மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர்கள்
16 மணிப்பூர் 1 மணிப்பூர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
17 மேகாலயா 1 மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர்கள்
18 மிசோரம் 1 மிசோரம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
19 நாகாலாந்து 1 நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினர்கள்
20 தில்லி 3 தில்லி மாநிலங்களவை உறுப்பினர்கள்
21 நியமன உறுப்பினர்கள் 12 மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
22 ஒரிசா 10 ஒரிசா மாநிலங்களவை உறுப்பினர்கள்
23 புதுச்சேரி 1 புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர்கள்
24 பஞ்சாப் 7 பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர்கள்
25 இராஜஸ்தான் 10 இராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர்கள்
26 சிக்கிம் 1 சிக்கிம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
27 தமிழ்நாடு 18 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்
28 திரிபுரா 1 திரிபுரா மாநிலங்களவை உறுப்பினர்கள்
29 உத்திரப் பிரதேசம் 31 உத்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
30 உத்தர்காண்ட் 3 உத்தர்காண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்
31 மேற்கு வங்காளம் 16 மேற்கு வங்காளம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
32 மொத்தம் 245 -----
மொத்தம்: 245 [1]
  • தேர்தல்கள் மாநிலங்களுக்குள் இருக்கும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் ஒற்றை மாற்றுதலுக்குரிய வாக்களிப்பு முறையில் கட்சிகள் பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

[தொகு] மேற்கோள்கள்