http://tawp.in/r/1rwf
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவைக்கு மாநிலம் வாரியாக மக்கள்
தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதிகள்
உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும்
வேட்பாளர்களிலிருந்து மக்கள் வாக்குகள் அளித்து மக்களவைக்கு
உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல்
கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அரசியல் கட்சியைச் சாராதவர்களாகவோ
இருக்கின்றனர்.பொருளடக்கம்[மறை] |
[தொகு] மக்களவை உறுப்பினர் இருக்கைகள்
இந்தியாவிலிருக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் மக்களவைக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் (தொகுதிகள்) குறித்த விபரங்கள் கொண்ட அட்டவணை.[தொகு] நியமன உறுப்பினர்கள்
- மக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையிலும் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவர் இருவர் மக்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்தும், மற்றொருவர் கேரளா மாநிலத்திலிருந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.