தமிழ்நாடு காவல்துறை பற்றி !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:37 PM | Best Blogger Tips

தமிழ்நாடு காவல்துறை http://tawp.in/r/21vh


தமிழ்நாடு காவல்துறை
தமிழக காவல் துறை
TN Police.JPG
வாய்மையே வெல்லும்
கட்டமைக்கப்பட்டது 1659[1]
மொத்தக் காவல் நிலையங்கள் 1452[2]
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 196[1]
மொத்த காவல் பணியாளர்கள் 88,672[1]
மொத்தக் காவல் பரப்பளவு 130058 ச.கி.மீ[1]
மொத்த மக்கள் தொகை 6.2 கோடிகள் 2001 கணக்கெடுப்பின்படி[1]
மொத்தக் காவல் மண்டலங்கள் 4[1]
மொத்த ஆணையரகம் 7[1]
மொத்தக் காவல் மாவட்டங்கள் 32[1]
இந்தியக் காவல் பணி அலுவலர்கள் 186 (31.03.2008)[2]
காவல்துறை தலைமை இயக்குநர் திரு.இராமஜனம் கூடுதல் பொறுப்பு இ.கா.ப.[3]
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது[1] பெரிய காவல்துறை ஆகும்.

[தொகு] வரலாறு

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

[தொகு] துறை அமைப்பு

படிமம்:TNPolice 40.jpg
தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அலுவலகம்
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

[தொகு] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்


சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்
  1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
  2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
  3. பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
  4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
  5. கடலோர காவல் துறை (Coastal Security Group)
  6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
  7. பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
  8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
  9. இரயில்வே காவல்துறை (Railways)
  10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
  11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
  12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
  13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
  14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
  15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
  16. பயிற்சிப் பிரிவு (Training)

[தொகு] காவல்துறைப் பதவிகள்

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் பட்டை எதுவுமில்லை.

[தொகு] தமிழகத்தில் குற்றங்கள்

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது.

வ.எண் குற்றம் 2001 2002 2003 2004 2005 2006[2] 2007[2] 2008[2] 2009[2]
1 கொலை 1594 1647 1487 1389 1365 1273 1521 1630 1644
2 ஆதாயத்திற்காகக் கொலை 81 75 104 73 74 89 102 105 123
3 குழுக் கொள்ளை 158 178 95 72 73 95 88 100 97
4 வழிப்பறி 669 650 514 464 437 450 495 662 1144
5 வீட்டில் கொள்ளை 5957 5532 4849 4147 3738 3300 3717 3849 4221
6 திருட்டு 16940 18614 18213 17530 15851 13651 13217 15019 15712
7 மொத்தம் 25399 26696 25262 23675 21538 18859 19140 21365 22941

[தொகு] காவல்துறையில் பெண்கள்

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது

[தொகு] காவலர் பயிற்சிக் கல்லூரி

காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்கு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

[தொகு] விமர்சனங்கள்

தமிழ்நாடு காவல்துறை மீது மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், லஞ்ச ஊழல் பரவல், அரசியல்மயமாக்கம் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[4][5][6]

சென்னை மாநகரக் காவல் http://tawp.in/r/19ag

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாடு காவல்துறை
சென்னை மாநகரக் காவல்
ChennaiPoliceLogo.gif
வாய்மையே வெல்லும்
கட்டமைக்கப்பட்டது 1659
மொத்தக் காவல் நிலையங்கள் 155
காவல்துறை தலைமை இயக்குநர் திரு இராமஜனம் கூடுதல் பொறுப்பு இ.கா.ப[1]
சென்னை மாநகர ஆணையர் திரு திரிபாதி  இ.கா.ப[2]













சென்னை மாநகரக் காவல் தமிழக காவல்துறையின் பிரிவாகவும் சட்ட அமலாக்கப் பிரதிநிதியாகவும் இந்திய மாநிலத்திலுள்ள தமிழகத்தின் தலை நகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மக்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னை மாநகர காவல்துறை தமிழக உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பெற்ற இரு ஆணையர்களின் (காவல் துறைத் தலைவர் படிநிலை-ஐ ஜி பி) ஆளுமையின் கீழ் செயல்படுகின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னையில் 36 துணைப் பிரிவுகளாகவும் அப்பிரிவுகளின் கீழ் அடங்கும் 155 காவல் நிலையங்கள் (மகளிர் காவல்நிலையங்கள் உட்பட)[3][4]தனது சீர்மிகுப் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகர காவல் மின்னணுப் பாதை மூலம் காவல் ஊழியர்களின் வழக்கமானப் பணியினை,செயல் திறன்களை அளவிடும் விதமாக இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தியப் பெருமையைக் கொண்டது.


[தொகு] வரலாறு

1659 இல் சென்னை மதராஸ் பட்டணம் என்று எல்லோரும் அழைக்கும் விதத்தில் ஒரு மீனவ கிராமாமாக அமைந்திருந்த காலகட்டத்தில் பெட்ட நாய்க் என்பவரால் கடை நிலை ஊழியர்களைக் கொண்டு நகரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருக் குழுவாக அமைக்கப்பட்டது. இவர்களே நகரைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டனர்,
1780 இல் அங்காடிகள், சரக்குகளின் மதிப்பீடுகளை கண்காணிக்கும் விதமாக காவல் துறை கண்காணிப்பாளர் என்ற பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையால் இந்தியா பிரித்தானியர்களின் ஆளுமைக்குள்ளானபொழுது மதராஸ் காவல் என்று நவீனமாக்கப்பட்டது.

அந்தந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரக்காவல்
காவல் நிலையங்கள் (பி.எஸ்) 90 [5][6] 2009 ஆண்டு தற்பொழுதய நிலவரம்
அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் (ஏ.டபுள்யு.பி.எஸ்} 35 [7][8] 2007 ஆண்டு நிலவரப்படி
புறக்காவல் நிலையங்கள் (ஒ.பி) 9[3] 2005-2006 ஆம் ஆண்டு நிலவரப்படி
காவல் எல்லைகள் (போலிஸ் லிமிட்) 220 ச.கி.மீ 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி
மக்கள் தொகை 70 இலட்சம் 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி

[தொகு] சென்னை மாநகரக் காவல் ஆணையரகம்

சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இவ்வாணையரகத்தில் ஆணையராக காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி-இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ஆப் போலிஸ்) படிநிலையில் பொருப்பேற்றுள்ள ஆணையரே சென்னை மாநகர காவல் துறையின் பொறுப்பாளார் ஆவார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை இயங்கும். அவர் ஆளுமையின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை செயல்படும். சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் தமிழக காவல்துறை இயக்குநரின் (டி.ஜி.பி- டைரக்டர் ஜென்ரால் ஆப் போலிஸ்) தலைமையில் ம்ற்றும் அவர் வழிகாட்டுதலின்படி இயங்குபவை ஆகும்.
அவருக்குத் துணையாக கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி), கூடுதல் ஆணையர்கள் (ஏ.சி.ஒ.பி), இணை ஆணையர்கள் (ஜே.சி-ஜாயின்ட் கமிசனர்) மற்றும் துணை ஆணையர்கள் (டி.சி-டெபுட்டி கமிசனர்) செயல் புரிவர்.

[தொகு] சென்னை மாநகரக் காவல் துறை அமைப்பு



[தொகு] சாதனைகள்


சென்னை மாநகரக் காவல் ரோந்து ஊர்தி
சென்னை மாநகரக் காவல் தனது பணியினை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்காக கூடுதலாக மஞ்சள் படை மற்றும் நீலப் படை என்ற இரு இருசக்கர வாகனப் படைப்பிரிவுகளும் , ரோந்து செல்லும் நான்கு சக்கர ஊர்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஒவ்வொரு மஞ்சள் படையினரும் 2 ச கிமீ சுற்றளவில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைக் காவல் பணியினை மேற்கொள்வர்.
  • ஒவ்வொரு நீலப் படையினரும் 2 ச கி மீ சுற்றளவில் இரவு 11 மணி முதல் காலை 6.30 மணி வரை இரவுப் பணியினை மேற்கொள்வர்.
  • ரோந்து ஊர்திகள் காவலர்களுடன் தினந்தோரும் சராசரியாக 3.2 ச.கி.மீ சுற்றளவில் காவல் பணியினை மேற்கொள்ளும்.
இப்படையினரின் வாகனங்கள் நவீன தரத்துடன் காவல்துறைச் சின்னங்கள் பொறிக்கப்பட்டு , எச்சரிக்கை ஒலி, ஒளிரும் சுழல் விளக்கு, பொது மக்களின் முகவரிகளை மின்னணு முறையில் அறியும் வகை, கம்பியில்லாத் தொடர்புக் கருவி போன்ற நவீன அமைப்புகளுடன் மக்களை வலம் வந்து பணியாற்றுகின்றன. காவல் துறை கட்டுப் பாட்டு அறையின் மக்கள் அழைப்புக்கு பிரதிச் செயல் நேரமாக 3 லிருந்து 4 நிமிட நேரமாக நிர்ணயிக்கப்பட்டு துரிதமாக மக்கள் பணியாற்றுகின்றது.

[தொகு] காவல் நிலையங்கள்

இந்தியக் காவல் பணி வரலாற்றின் முதன் முறையாக தமிழகத்தின் சென்னை மாநகரக் காவல் துறைக்கு ஹூன்டாய் ஊர்திகள் வழங்கப்பட்டன. சட்டம் ஒழுங்குப் பிரிவிற்காக 78 ஊர்திகளும், 21 ஊர்திகள் போக்குவரத்துக் காவல் பிரிவிற்காகவும் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4 ஊர்திகள் தமிழக முதல்வர் ஊர்தியின் பாதுகாப்பு ஊர்திகளாக செயல்படுகின்றன.