தினமும் விளக்கு ஏற்றுவோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 AM | Best Blogger Tips

நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள்.

மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும்.

விளக்கேற்றவேண்டிய நேரம்

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்

1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.

திசைகள்

கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?

தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.

வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.

வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!
 
Via Hindu Madurai

மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 3

மணக்கால் அய்யம்பேட்டை | 1:49 AM | Best Blogger Tips

அறிவியல் என்பதன் வளர்ச்சி இன்னும் ஆரம்ப நிலைகளிலேயே உள்ளது என்பதை நாம் கடந்த பாகத்தில் பார்த்தோம். பிரபஞ்சத்தின் அடிப்படைகளை கூட நம்மால் இன்னும் அறிய முடியவில்லை. இத்தகைய நிலையில் நம் முந்தைய தலைமுறைகள் மஹாபாரதத்தின் ஆழமான கோட்பாடுகளை எவ்வாறு விளங்கிக் கொள்ள‌ முடியும் ?

உதாரணத்திற்கு நாம் வெளி உலகம் அறியாத ஒரு ஆப்ரிக்க பழங்குடியினரிடம் தொலைக்காட்சி பெட்டியை குறித்து எவ்வாறு அறிமுகம் செய்வோம் ? இதை செய், இதை செய்யாதே என்பதை மட்டுமே சொல்ல முடியும். அது இயங்கும் முறையையும், அதன் தொழில்நுட்பங்களையும் நாம் விளக்க முடியாது. அப்படி விளக்கினாலும், அதை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இருக்காது. தொழிற்சாலை, தயாரிப்பு, ப்ளாஸ்டிக், அலைவரிசை, காமரா, படம் எடுத்தல் என ஒவ்வொன்றை குறித்தும் நாம் விளக்குதல் என்பதும் எளிதல்ல. அதைப்போலவே நம்மை விட பல்லாயிரம் கோடி ஆண்டுகள் விஞ்ஞானத்தில் முன்னேறிய ஒரு சமூகம் தம் உயர்ந்த தொழில்நுட்பத்தை நமக்கு விளக்க இயலாது. ஆகையால் மஹாபாரதத்தில் உபயோகப் படுத்தப்பட்ட மிக உயர்ந்த தொழில்நுட்பங்களை அறிந்துக் கொள்ளும் ஆற்றல் மனிதர்களுக்கு இல்லை. ஆகையால் வியாசர் நம் பூமியில் தோன்றிய வேற்றுகிரக வாசிகளின் மிக உயர்ந்த தொழில்நுப்பங்களை அக்கால மனிதர்கள் பயன்படுத்தும் சாதாரண கருவிகளோடு ஒப்பிட்டு எழுதியிருக்க வேண்டும்.

சமஸ்க்ருத இலக்கண மற்றும் மெட்டா இயற்பியல் ஆராய்சியாளர்கள், வேதங்களும், உபநிடந்தங்களும், நாம் பிற்காலத்தில் அறிவியல் ரீதியாக முன்னேறிய காலத்தில் உணர்ந்துக் கொள்ளக் கூடிய நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளன எனச் சொல்கிறார்கள். சமஸ்க்ருதம் என்பதே தத்துவ ஞானத்திலும், அறிவியலிலும் மிகவும் முன்னேறிய ஒரு வேற்று கிரகத்தவரின் மொழியாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது என் உறுதியான எண்ணம். ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு அறிவார்ந்த சமுதாயத்தால் உபயோகிக்கப்பட்டு, மேலும் மேலும் பண்படுத்தப் பட்டிருந்தால் மட்டுமே அப்படி ஒரு மொழி உருவாக வாய்ப்பிருக்கிறது. சமஸ்க்ருதத்தில் உபயோகிக்கப்படும் பல வார்த்தைகள் சுருக்கப்பட்ட கோட்பாடுகளாகும். உதாரணத்திற்கு "மந்த்ரா", "தந்தரா", "அஸ்த்ரா" என்று எந்த வார்த்தையை நீங்கள் எடுத்தாலும், அதற்கு நீண்ட விளக்கத்தை கொடுக்கக் கூடிய அளவில் சுருக்கப்பட்டவை. மேலும் அதன் கட்டமைக்கப்பட்ட இலக்கணம், ஒவ்வொரு எழுத்துக்களும் ஒரு ஆற்றலை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு ஆகியவை மிகவும் முன்னோடியானது. அது ஒரு மனித சமூகத்தால் பேசப்பட்டு பின் வளர்ந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்மை விட அறிவியலில் மிக உயர்ந்த வேற்று கிரகத்தவர்களின் மொழியாக அது இருக்க வாய்ப்புள்ளது. மஹாபாரத்தை தொகுத்து முடித்த வியாசர் மனித இனத்திற்கு மிகக் குறைந்த பிரதிகளையே தருகிறார். நாம் அறிந்த‌ மொழியிலேயே இதை படித்தால் கூட பல அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான வார்த்தைகளை கொண்ட சொற்களை நம்மால் புரிந்துக் கொள்ள இயலாது. ஆகையால்தான் வியாசர் மஹாபாரதத்தின் மிக குறைந்த அளவினையே மனித இனத்திற்கு தந்திருந்தார்.

[After that he executed another compilation, consisting of six hundred thousand verses. Of those, thirty hundred thousand are known in the world of the Devas; fifteen hundred thousand in the world of the Pitris: fourteen hundred thousand among the Gandharvas, and one hundred thousand in the regions of mankind. ]

ரிஷிகளும், முனிவர்களும் நாம் இன்று ஆராய்வது போல் ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை ஒரு வகையில் கோட்பாட்டு இயற்பியல்வாதிகளாக‌ (தியரிட்டிக்கல் பிஸிஷியன்) கருதலாம். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டியனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பரிசோதனை கூடங்களில் ஆராய்ந்து பணியாற்றவில்லை. மாறாக அவர் தன் ஆழ்மனதின் துனை கொண்டு ஆராய்ந்தார். எண்ண பரிசோதனை ( ) எனச் சொல்லப்படும் யுக்தியை உபயோகித்து, அவர் தன் கோட்பாடுகளை ஆழமாக ஆராய்ந்தார். தன் உள்ளார்ந்த ஆய்வுகளை பின் அவர் சூத்திரங்களாக‌ அல்லது சமன்பாடுகளாக‌ (ஈக்வேஷன்) பதித்துக் கொண்டார். ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் எனப்படும் பிரித்தானியரும் ஒரு கோட்பாட்டு இயற்பியல்வாதியே.

மஹாபாரதத்தை வார்த்தைக்கு வார்த்தை நாம் மொழி பெயர்க்கும் போது அது அபத்தமான பொருள் தர வாய்ப்பிருக்கிறது. மஹாபாரதத்தின் யுத்தங்களில் உபயோகிக்கப்பட்ட அதிநவீன கருவிகளை குறித்து எழுதினாலும் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அன்றைய தலைமுறைக்கு இல்லை. அதை குறித்து விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Via Enlightened Master

முயற்சி அவசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:42 AM | Best Blogger Tips

கல்வி கற்கும் பருவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படியுங்கள். சி.பி.எஸ்.சி. ஸ்கூலில், உங்களுக்கு 50,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பி.எச். டி. படியுங்கள், நல்ல சம்பளத்தில் கல்லூரிகளில் வேலை கிடைக்கும். இன்றைக்கு வேலையில்லை என்ற நிலைமை நிச்சயம் இல்லை.

ஆனால், திறமையுள்ள இளைஞர்கள் இல்லை என்கிற நிலைதான் உள்ளது. வேலைகள் செய்யத் தகுதியுள்ள ஆட்கள் இல்லை. இன்னும் சொன்னால் தரமான வேலையாட்கள் இல்லை.

ஒரு மிஷின் ரிப்பேர் செய்யத் தெரிந்தால் வேலை கிடைக்கும். மோட்டார் வாகனம் பழுது பார்க்கத் தெரிந்தால், வேலை கிடைக்கும். கம்ப்யூட்டரில் இணையதளம் வடிவமைக்கத் தெரிந்தால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

அமெரிக்காவில் ஏழைக்குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தத்தாய் சொல்கிறாள், எனது மகனேÐ நீ மாபெரும் மனிதனாக வர வேண்டும்.

அந்தச் சிறுவன் பள்ளியில் தோல்வியடைகிறான், கல்லூரியில் தோல்வியடைகிறான், அரசியலில், குடும்ப வாழ்வில் தோல்வி. ஆனால் தொடர்ந்து பொதுகூட்டத்தில் பேசுவது, எழுதுவது, படிப்பது போன்றவற்றை செய்து கொண்டிருந்தான். அப்போது அவனிடம் கேட்டார்கள், ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? உங்களுக்கு 50 வயதாகிவிட்டது. இனிமேல் உங்களுக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காது என்றார்கள்.

அதற்கு அவர், “எனக்கு வாழ்க்கையில் எல்லா இடத்திலும் தோல்விதான் இருந்தாலும் நான் முயற்சியைக் கைவிட மாட்டேன், தொடர்ந்து முயற்சி செய்வேன். என்றாவது ஒருநாள் எனக்கு ஒருவாய்ப்பு கிடைக்கும். அமெரிக்க அதிபராக வந்துவிடுவேன்.

அப்போது நான் படித்த படிப்பு, எனது சிந்தனைத்திறன், எனது ஞாபகசக்தி, எனது அறிவு, எனது முடிவெடுக்கும் திறன், எனது செயல்திறன் எனக்குப் பயன்படும். எனவேதான் நான் தொடர்ந்து முயற்சிக்கிறேன்” என்று சொன்னார். பிற்காலத்தில் சொன்னபடியே அவர் அமெரிக்க நாட்டினுடைய ஜனாதிபதியாக மாறினார். அவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.

எவ்வளவு தோல்வியடைந்தாலும், மீண்டும் முயற்சி. அதுதான் விடாமுயற்சி. யார் என்ன சொன்னாலும் முயற்சி எடுத்தார் லிங்கன். விளைவு, வெற்றி. நீங்கள் ஏதாவது முயற்சி எடுக்கும்போது மற்ற மாணவர்கள் குறை சொல்லலாம்.

அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் விளையாடச் செல்லும்போது அவர்கள், நீ விளையாடி பெரிய சச்சின் டெண்டுல்கராகப் போகிறாயா? எதற்காக விளையாடுகிறாய் என்று கேட்கலாம். நீ படித்து என்ன ஐ.ஏ.எஸ். ஆகப் போகிறாயா என்று கிண்டல் செய்யலாம். உங்களை மனம் தளரச் செய்வார்கள்.

நாங்கள் படிக்கும்போது ஒரு மாணவன் இங்கிலீஷ் கிளப் ஒன்று ஆரம்பித்தான். டெக் கிளப் (Development of English Club). அதை அவன் ஆரம்பித்தவுடன் சீனியர் மாணவர்கள் அவனைத் துன்புறுத்தினார்கள். அதோடு அவன் அம்முயற்சியை கைவிட்டான். அதோடு ஆங்கிலம் கற்கும் முயற்சியும் நின்றது.

மற்றவர்கள் என்ன சொன்னாலும், அதை அலட்சியப்படுத்தி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். “என்னிடம் ஒரு கோடாரியைக் கொடுத்து இந்த மரங்களையெல்லாம் தொடர்ந்து வெட்டுங்கள் என்று சொன்னால் நான் மற்றவர்களைப்போல் 8 மணிநேரம் தொடர்ந்து வெட்ட மாட்டேன். நான் 2 மணிநேரம் மட்டும்தான் மரத்தை வெட்டுவேன். மீதி 6 மணிநேரம் எனது கோடாரியை கூர்மைப் படுத்துவேன்” என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்.

பள்ளியில் படிக்கும் பனிரெண்டு ஆண்டுகள், கல்லூரியில் படிக்கும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், உங்கள் கோடாரிகளைக் கூர்மைப்படுத்துங்கள்.

உங்களது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனப்போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் மட்டும்தான் நீங்கள் கல்வி அறிவு பெற்றவர்கள் என்று பொருள்.
Via Thannambikkai

சமையல் அறையில் கொலைகாரர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:41 AM | Best Blogger Tips

பெரிய நகரங்களில் இன்று பகலிலேயே படுகொலை நடைபெறுகிறது. வீட்டில் தனியாக இருக்கும் முதிய பெண்மணியைக் கொடியவன் ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி அடிக் கடி நாளிதழில் வெளிவருகிறது. திட்டமிட்டு நடை பெறும் இந்தப் படுகொலைச் செய்தியைப் படிப்ப வர் நெஞ்சில் பரிதாப உணர்வு படர்கிறது. இந்தக் கொலைகாரர்களைக் காவலர் தேடுகின்றனர். பிடிபட்டவரைச் சிறையில் அடைக்கின்றனர். அவர்களுக்குத் தண்டனை கிடைக்கின்றது.

இன்று கண்ணுக்குத் தெரியாத கொலை காரர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் பல வீடுகளின் சமையல் அறையில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பணம் தந்து விரும்பி வாங்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிறப்பான வரவேற்பும் தரப்படுகின்றது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்தக் கொலைகாரர்களைப் பாராட்டி மகிழ்கின்றனர். இந்தக் கொலைகாரர்கள் மெதுவாகக் கொல்கின்றனர். இரத்தம் வெளிப் படாமல் கொலை செய்கின்றனர். இந்தக் கொலை காரர்கள் பரவலாகி வருகின்றனர். உயிரில்லாத இந்தக் கொலைகாரர்கள் மனித உயிர்களை மென்மை நிலையில் மாய்க்கின்றனர். இவர்கள் அஃறிணைப் பொருள் வடிவத்தில் இருக்கின் றனர்.

வசதி படைத்தவர்கள் வீட்டில் இன்று பிளாஸ்டிக் புட்டிகள் அலமாரிகளில் அலங்கார மாக அமர்ந்திருக்கும். அவை, தமக்குள் சில உணவுப் பொருள்களைக் கொண்டிருக்கும். இந்தப் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தர வரிசை எண் உள்ளது. இந்த எண் 1 முதல் 7 வரை இருக்கின்றது. இந்த எண்கள் பிளாஸ்டிக் பொருளின் நச்சுத் தன்மையின் அளவைக் குறிக்கின்றன. மூன்று என்ற தரவரிசை எண்ணுக்குரிய பிளாஸ்டிக் பொருளைச் சூடாக்கினால் டையாக்சின் ஹைட்ரஜன் குளோரைடு ஆகிய நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருள்கள் வெளிப்படும். இவை உடல் நலத்தைக் கெடுக்கக்கூடியவை. டையாக்சின் புற்று நோயைத் தரக்கூடியது. இது இனப்பெருக்க ஆற்றலையும் பாதிக்கும் தன்மை கொண்டது. பொதுவாகப் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் உடல் நலத்தைப் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தோசை சுடுவதற்குக் கடாய் எனப்படும் பாத்திரம் பயன்படுகிறது. தற்போது எண்ணெய் தடவப்படாமல் - தோசை மாவு ஒட்டாத - புதுமையான கடாய் கடைகளில் விற்கப்படுகிறது. இது மிகப் பலரால் விரும்பப் படுகிறது. இதனால் எண்ணெய் மிச்சமாகிறது. எண்ணெய் தடவும் நேரம் மிச்சமாகிறது. இந்தக் கடாயின் மேல் வேதியியல் பூச்சு படிந்துள்ளது. அடுப்பின் மேல் வைத்துக் கடாயைச் சூடாக்கும்போது, அந்த வேதியியல் பூச்சு டாக்சின் (நச்சுப்பொருளை) வெளிப்படுத்துகிறது. இது, மனிதனின் கணையம், கல்லீரல் முதலியவற்றைப் பாதிக்கிறது. இது உடல் நலத்தைக் கெடுக்கிறது. மெல்ல மரணத்தை அழைக்கிறது.

பீங்கான் கோப்பைகள் நாகரிகத்தின் சின்னமாகப் போற்றப்படுகின்றன. இவை பள பளப்புடன் காணப்படுகின்றன. பார்ப்பவரின் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன. இவற்றின் தயாரிப்பில் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காரீயக் கலப்பு, முறைப்படி நடை பெறாவிட்டால், உடல் நலம் கெடும் நிலை அமையும். இப்படிப்பட்ட பீங்கான் கோப்பையில் சூடான பானம் ஊற்றப் பட்டால் இளகும். காரீயம், மெதுவாகப் பானத்துடன் கலக்கும். குடிப்பவர் உடலைக் கெடுக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாக்கும்.

அலுமினியப் பாத்திரங்கள் இன்று குடிசையிலும் குடியேறிவிட்டன. முறையான அழுத்தம் பெறாத (Anodized Aluminium) ஆகாத அலுமினியப் பாத்திரம் உடம்பைக் கெடுத்துவிடும். அல்ஹிமர் (Alzhemer) நோய்க்கு வரவேற்பு மாலை போடும்.

வசதியற்றவர்களின் வீட்டில் போதிய இடப்பரப்பு இல்லாதவர் வீட்டில் சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வீற்றிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்து அடி தூரத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். குடிசைக்குள் அல்லது மிகச் சிறிய வீட்டில் இது நடைபெறுவதில்லை. இதனால், முதல் நிலையில் கண்பார்வை கெடுகிறது. உடல் பயிற்சி செய்யமுடியாத நிலை ஏற்படுவதால், உடல் நலமும் பாதிக்கிறது.

புகை பிடிப்பதால், (பீடி, சுருட்டு, சிகரெட் பிடிப்பதால் வரும்) தீமைகளுக்கு இணையான உடல்நலக் கேடுகள் வருகின்றன என்று ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. மூன்று மணி நேரத்திற்கு அதிகமாகத் தினந்தோறும் தொலைக்காட்சி பார்த்தால் மாரடைப்பு நோய் வரும் என்று ஆய்வு அறிவிக்கிறது. மிக அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் இளம் வயதினருக்கு இறப்பு நேரும் என்று ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (ஹார்வர்டு மக்கள் உடல்நலக் கல்வியகம்) அறிவித்துள்ளது. 
 
(அறிவியல் ஒளி இதழில் வெளியானது)
 
 Via -நலம், நலம் அறிய ஆவல்
மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 AM | Best Blogger Tips
பழைய சாதம் என்று சொன்னால் ஏழைகள், கிராமிய மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள். நகரங்களில் வசிப்பவர்களின் உணவு Fast Foodதான். இதனால்தான் Fastடாகவே நோயாளியாகிறோம். இந்த ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்வதை விட, ருசியுடன் ஆரோக்கியமும் தருகிற பழைய சாதம் மிகவும் நல்லதாக இருக்கிறது.

சமைத்த சாதத்தில் இரவு தண்ணிர் ஊற்றி ஊற வைத்தால் அந்த சாதத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிறது. அவை குடலை பாதுகாக்கிறது.  

உணவு நன்றாக செரிக்கசெய்கிறது. மறுநாள் அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால், பசி அடங்குவதுடன் வயிற்று புண், மலச்சிக்கல் மூலநோய் வாயுகோளாறு போன்றவை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. பழைய சாதத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கிறது.

பழைய சாதம் பலருக்கு சாப்பிட ஆசையாகதான் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பழைய சோறு கெட்டுபோய்விடுகிறதே, என்ன செய்வது? என்று பலரின் கேள்வி.

முன்பெல்லாம் அரிசியை பொங்க வைத்து அந்த கஞ்சியை வடித்து விடுவார்கள். இதனால் தேவை இல்லாத நச்சுகள் கஞ்சியோடு வெளியேறிவிடும். 

அதனால் அந்த சாதம் இரண்டு நாட்கள் கூட கெடாமல் இருந்தது. ஆனால் இப்போது சமையல் குக்கரில்தான். சாதத்தின் கஞ்சி தண்ணிர் வெளியேற வாய்ப்புகள் இல்லை. இதனால்  காலையில் சமைத்த சாதம் இரவே கெட்டு போகிறது. அதனால், பழைய சாதம் சாப்பிட விரும்புகிறவர்கள், குக்கரில் சாதம் செய்யாமல் பாத்திரத்தில் சமைத்து, அரிசி பொங்கியவுடன் அந்த கஞ்சியை வடிகட்டிவிட்டு சாதத்தில் நல்ல தண்ணிர் ஊற்றி, மறுநாள் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருக்கும்.

வயிற்றுக்கு எந்த கோளாறும் வராது. உடல் குளிர்ச்சி பெறும். ஆரோக்கியமும் கிடைக்கும். அலர்ஜி, அல்சர்,  தோல் வியாதி போன்றவை நீங்கும் என்கிறார்கள் இன்றைய மருத்துவர்கள். இதைதான் நம் பெரியவர்கள் பாடல் மூலமாக அன்றே சொன்னார்கள் -

“ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவிநிர் பித்தம் போக்கும்
சோற்றுநிர் இரண்டையும் போக்கும்!”

G.vijaya lakshmi
Copyright www.bhakthiplanet.com

http://www.manamakkalmalai.com/

Like This Page----> http://www.facebook.com/bhakthiplanetபழைய சாதம் என்று சொன்னால் ஏழைகள், கிராமிய மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள். நகரங்களில் வசிப்பவர்களின் உணவு Fast Foodதான். இதனால்தான் Fastடாகவே நோயாளியாகிறோம். இந்த ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்வதை விட, ருசியுடன் ஆரோக்கியமும் தருகிற பழைய சாதம் மிகவும் நல்லதாக இருக்கிறது.

சமைத்த சாதத்தில் இரவு தண்ணிர் ஊற்றி ஊற வைத்தால் அந்த சாதத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிறது. அவை குடலை பாதுகாக்கிறது.

உணவு நன்றாக செரிக்கசெய்கிறது. மறுநாள் அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால், பசி அடங்குவதுடன் வயிற்று புண், மலச்சிக்கல் மூலநோய் வாயுகோளாறு போன்றவை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. பழைய சாதத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கிறது.

பழைய சாதம் பலருக்கு சாப்பிட ஆசையாகதான் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பழைய சோறு கெட்டுபோய்விடுகிறதே, என்ன செய்வது? என்று பலரின் கேள்வி.

முன்பெல்லாம் அரிசியை பொங்க வைத்து அந்த கஞ்சியை வடித்து விடுவார்கள். இதனால் தேவை இல்லாத நச்சுகள் கஞ்சியோடு வெளியேறிவிடும்.

அதனால் அந்த சாதம் இரண்டு நாட்கள் கூட கெடாமல் இருந்தது. ஆனால் இப்போது சமையல் குக்கரில்தான். சாதத்தின் கஞ்சி தண்ணிர் வெளியேற வாய்ப்புகள் இல்லை. இதனால் காலையில் சமைத்த சாதம் இரவே கெட்டு போகிறது. அதனால், பழைய சாதம் சாப்பிட விரும்புகிறவர்கள், குக்கரில் சாதம் செய்யாமல் பாத்திரத்தில் சமைத்து, அரிசி பொங்கியவுடன் அந்த கஞ்சியை வடிகட்டிவிட்டு சாதத்தில் நல்ல தண்ணிர் ஊற்றி, மறுநாள் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருக்கும்.

வயிற்றுக்கு எந்த கோளாறும் வராது. உடல் குளிர்ச்சி பெறும். ஆரோக்கியமும் கிடைக்கும். அலர்ஜி, அல்சர், தோல் வியாதி போன்றவை நீங்கும் என்கிறார்கள் இன்றைய மருத்துவர்கள். இதைதான் நம் பெரியவர்கள் பாடல் மூலமாக அன்றே சொன்னார்கள் -

“ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவிநிர் பித்தம் போக்கும்
சோற்றுநிர் இரண்டையும் போக்கும்!”

G.vijaya lakshmi
Via bhakthiplanet

உலகிற்கு இந்தியாவின் கொடை.......

மணக்கால் அய்யம்பேட்டை | 1:32 AM | Best Blogger Tips

உலகிற்கு இந்தியாவின் கொடை.......

விஞ்ஞானங்களைப்பொறுத்தவரை சிந்தனைக்கு எட்டாத காலத்திலிருந்தே இந்தியா விஞ்ஞானிகளை படைத்திருக்கிறது.விகாரமாக காது,மூக்கு இவைகளை சரி செய்வதற்கான ரசாயணங்களை கண்டுபிடித்தன் மூலம் இந்தியா நவீன மருத்துவத்திற்கு கூட தன் கொடையை அளித்துள்ளது என்று கூறுகிறார் விஞ்ஞானி சர் வில்லியம் ஹண்டல்.

கணிதத்துறையிலும் அது தன் கொடையை அளித்துள்ளது.அல்ஜீப்ரா,ஜியோமிட்ரிக்,வான இயல்,நவீன விஞ்ஞானம் விரும்பும் கலவை கணிதம்(mixed mathematics) போன்றவைகளெல்லாம் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.zero(0) வை கண்டு பிடித்தது .

இந்தியா..மற்ற அறிஞர்கள் ஒத்துக்கொள்வது போல் தத்துவத்தில் நாங்கள் எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறோம்.ஏழு ஸ்வரங்களுடன் கூடிய இசையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது நாங்களே. 

ஜரோப்பாவில் இசை 11ம் நுாற்றாண்டில் தான் வந்தது.ஆனால் கி.மு 350 ல் இசை இந்தியாவில் உச்சத்தில் இருந்தது.மொழியை எடுத்துக்கொண்டால் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் அடிப்படையாக இருப்பது சமஸ்கிருதமே.இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் இலக்கியங்கள் தரம் வாய்ந்தவை.ஈசாப்பின் கதைகளை உலகிற்கு கொடுத்தது இந்தியாவே. பழைய நுாலிலிருந்து ஈசாப் அதை எழுதிக்கொண்டார்.

யஞ்சு மற்றும் சாயம் இந்தியாவின் கண்டுபிடிப்பு, பல்வேறுவிதமான ஆபரணங்களை செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.sugerசர்க்கரை போன்ற வார்த்தைகள் கூட இந்தியர்களுடையது. சதுரங்கம்,சீட்டு, தாயம் போன்றவை இந்தியாவின் கண்டுபிடிப்பு. ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி இருந்நதால் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவை நாடி வரநேர்ந்தது. அதன் விளைவாகத்தான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்ட்டது.நல்வாழ்த்துக்களே இந்தியா உலகத்திற்கு விடுக்கும் முதல் செய்தி.தீமைக்கு பதிலாக நன்மை செய் என்ற கருத்தை முதலில் உருவாக்கியதே இந்தியா தான்.இந்திய மக்களின் ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது.கருணைமிக்க இனம் ஒருபோதும் அழிவதில்லை,எனவே இந்தியா வெற்றி பெறவே செய்யும்.

-----சுவாமி விவேகானந்தர்.......விஞ்ஞானங்களைப்பொறுத்தவரை சிந்தனைக்கு எட்டாத காலத்திலிருந்தே இந்தியா விஞ்ஞானிகளை படைத்திருக்கிறது.விகாரமாக காது,மூக்கு இவைகளை சரி செய்வதற்கான ரசாயணங்களை கண்டுபிடித்தன் மூலம் இந்தியா நவீன மருத்துவத்திற்கு கூட தன் கொடையை அளித்துள்ளது என்று கூறுகிறார் விஞ்ஞானி சர் வில்லியம் ஹண்டல்.

கணிதத்துறையிலும் அது தன் கொடையை அளித்துள்ளது.அல்ஜீப்ரா,ஜியோமிட்ரிக்,வான இயல்,நவீன விஞ்ஞானம் விரும்பும் கலவை கணிதம்(mixed mathematics) போன்றவைகளெல்லாம் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.zero(0) வை கண்டு பிடித்தது .

இந்தியா..மற்ற அறிஞர்கள் ஒத்துக்கொள்வது போல் தத்துவத்தில் நாங்கள் எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறோம்.ஏழு ஸ்வரங்களுடன் கூடிய இசையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது நாங்களே.

ஜரோப்பாவில் இசை 11ம் நுாற்றாண்டில் தான் வந்தது.ஆனால் கி.மு 350 ல் இசை இந்தியாவில் உச்சத்தில் இருந்தது.மொழியை எடுத்துக்கொண்டால் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் அடிப்படையாக இருப்பது சமஸ்கிருதமே.இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் இலக்கியங்கள் தரம் வாய்ந்தவை.ஈசாப்பின் கதைகளை உலகிற்கு கொடுத்தது இந்தியாவே. பழைய நுாலிலிருந்து ஈசாப் அதை எழுதிக்கொண்டார்.

யஞ்சு மற்றும் சாயம் இந்தியாவின் கண்டுபிடிப்பு, பல்வேறுவிதமான ஆபரணங்களை செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.sugerசர்க்கரை போன்ற வார்த்தைகள் கூட இந்தியர்களுடையது. சதுரங்கம்,சீட்டு, தாயம் போன்றவை இந்தியாவின் கண்டுபிடிப்பு. ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி இருந்நதால் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவை நாடி வரநேர்ந்தது. அதன் விளைவாகத்தான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்ட்டது.நல்வாழ்த்துக்கள
ே இந்தியா உலகத்திற்கு விடுக்கும் முதல் செய்தி.தீமைக்கு பதிலாக நன்மை செய் என்ற கருத்தை முதலில் உருவாக்கியதே இந்தியா தான்.இந்திய மக்களின் ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது.கருணைமிக்க இனம் ஒருபோதும் அழிவதில்லை,எனவே இந்தியா வெற்றி பெறவே செய்யும்.

-----சுவாமி விவேகானந்தர்.......

Via மக்கள் சேவையே மகேசன் சேவை

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:28 AM | Best Blogger Tips
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

via இயற்கையே கடவுள்

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

நசிகேதன் என்ற சிறுவன் எமதர்மனிடம் கேட்ட கேள்விகள் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:27 AM | Best Blogger Tips
நசிகேதன் என்ற சிறுவன் எமதர்மனிடம் கேட்ட கேள்விகள் ....

யஜுர்வேதம்----கட உபநிடதம்

1.1.20. நசிகேதன்----மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும்,இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவுபெற விரும்புகிறேன்

1.1.21. எமன்-----நசிகேதா இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட சந்தேகம் உள்ளது.(தேவர்களுக்கு கூட தெரியாது) இந்த விஷயம் நுட்பமானது,எளிதாக அடையக்கூடியது அல்ல. எனவே வேறு ஏதாவது கேள்.

1.1.22. நசிகேதன்------இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய்.ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல வேறொருவர் கிடைக்க மாட்டார்கள். வேறு எந்த வரமும் இதறகு இணையாகாது.

1.1.23. எமதர்மன்---நுாறு ஆண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள்.ஏராளம் பசுக்கள்,யானை பொன்,குதிரை போன்றவற்றை கேள், புமியில் பரந்த அரசைகேள்,நீயும் எவ்வளவு நாள் வாழவிரும்புகிறாயோ அவ்வளவு நாள் வாழ்ந்துகொள்.

1.1.24,25.எமதர்மன்---- செல்வம்,நீண்ட ஆயுள் உட்பட இந்த உலகத்தில் உனக்கு எதுதேவையோ சொல் அதை நிறைவேற்றித்தருகிறேன்.சாரதிகளுடன் தேர்களை தருகிறேன்.வாத்திய கலைஞர்களைத்தருகிறேன்,தேவலோக கன்னியர்களை கேள் அதைவேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால் மரணத்திற்கு பின் நடப்பது பற்றிகேட்காதே.

1.1.26.27,28நசிகேதன்-----எமதர்மரே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை.இவைகள் மனிதனின் ஆற்றலை வீணாக்குகின்றன.வாழ்க்கையோ குறுகியது.அதனால் இவைகள் வேண்டாம்.செல்வத்தால் மனிதனுக்கு திருப்தி ஏற்படாது.அதிக ஆயுள் வாழ்வதாலும் திருப்தி ஏற்படாது.

1.1.29.எமதர்மரே! எந்த விஷயத்தில் பலருக்கு சந்தேகம் உள்ளதோ,எதை தெரிந்துகொண்டால் பெரும் பயன்கிடைக்குமோ,எது ரகசியமாக வைக்கப்ட்டுள்ளதோ,அதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.வேறு எதுவும் வேண்டாம்.

1.2.1 எமதர்மன்---மேலானது மற்றும் சுகம் தருவது என இரண்டு உள்ளது.இரண்டும் வேறுபட்ட பலனை தருகிறது.மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை கிடைக்கிறது.சுகம் தருவதை தேர்ந்தெடுப்பவன் வீழ்ச்சியடைகிறான்.

1.2.2,3. மூடன் உடம்புக்கு சுகம் தருவதை தேர்ந்தெடுக்கிறான்.ஆனால் நசிகேதா நீயோ மேலான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.

1.2.4,5.இறைநெறி மேலானது, உலகியியல் இன்பம் கீழானது உடலுக்கு சுகம் தருவது.நீ இறை நாட்டம் உடையவன்உலகியல் இன்பங்களை விரும்புபவர்கள் குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.

1.2.7,8.அறிய வேண்டிய ரகசியம் இந்த ஆன்மாபற்றியது.ஏற்கனவே ஆன்மாவை அறிந்தவன் உபதேசத்தை பின்பற்றினால் குழப்பம் இல்லை.உலகியல் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி தெரியாது.

1.2.9,10 வாதங்கள் மூலம் இதை அறியமுடியாது.உண்மையை உணர்ந்தவர் ஒருவர் மூலம் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

1.2.11.நசிகேதா! சொர்க்கலோகத்தில் அளவற்ற இன்பங்கள் நிறைந்துள்ளன.அங்கே பயம் இல்லை.நீண்ட நாட்கள் வாழலாம்.புத்திசாலியான நீ இதை நன்கு அறிந்திருந்தும் சொர்க்கத்தை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

1.2.12.நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடையவேண்டியது.இதயக்குகையில் ஒளிர்வது,இருண்டபகுதியில் உள்ளது,பழமையானது,ஒளிமயமானது. புத்தி விழிப்புற்றவன் அத்யாத்ம யோகத்தால் தியானத்தின் மூலம் அதை அறிகிறான்.
(அத்தியாத்மயோகம் என்பது ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்)
இங்கே இதயம் என்று சொல்வது இரத்தஓட்டத்திற்கு காரணமான இதயம் அல்ல.)

Via உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள்
 
உடல் எடையை குறைக்கும் தயிர்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:25 AM | Best Blogger Tips
உடல் எடையை குறைக்கும் தயிர்
*******************************
தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தயிருக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.

தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது.

மிதமான லாக்டோஸ் இருப்பதனால் சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால் பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு காரணம்.

இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் ஒபெசிட்டி என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கையில், குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் பருமான நபர்களுக்கு தினமும் மூன்று வேளை குறைந்து கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களை ஆய்வு செய்ததில் 22 சதவிகித அளவுக்கு உடல் எடை குறைந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் முன்பு இருந்ததை விட அழகாக தோற்றமளித்தனர்.

Via இயற்கை உணவும் இனிய வாழ்வும்
 
இளமையைக் கூட்டும் இளநீர்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:24 AM | Best Blogger Tips
இளமையைக் கூட்டும் இளநீர்
**************************
செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க, கூல்டிரிங்க்ஸ் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே, அது தரும் பலன்களும் அதிகம்.

இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில், ''இளநீர், நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன், ஃபோலேட் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் அதிகம். 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

இளநீரின் மருத்துவப் பலன்கள்:

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.

முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

இதில் உள்ள செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும். இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும் அற்புத காயகல்பம். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம். தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால். வாழ்நாள் முழுவதும் தெம்புடனும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்.செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க, கூல்டிரிங்க்ஸ் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே, அது தரும் பலன்களும் அதிகம்.

இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில், ''இளநீர், நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன், ஃபோலேட் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் அதிகம். 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

இளநீரின் மருத்துவப் பலன்கள்:

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.

முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

இதில் உள்ள செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும். இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும் அற்புத காயகல்பம். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம். தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால். வாழ்நாள் முழுவதும் தெம்புடனும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்.
 
Via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். 

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:20 AM | Best Blogger Tips

என்னவெல்லாம் இருக்கின்றன
தாய்ப்பாலில்?

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, இரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

தாய்ப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

Via மைலாஞ்சி ( Mylanchi )
 
பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 AM | Best Blogger Tips

பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர,

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்

Vel Murugan

மகத்தான ஹார்மோன்களும் அவற்றின் பணிகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:18 AM | Best Blogger Tips
மகத்தான ஹார்மோன்களும் அவற்றின் பணிகளும்  
1. இன்சுலின் – இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
2. அட்ரினலின் – பயம் சார்ந்த உணர்வுகள் மற்றும் இதயத் துடிப்பினை கட்டுப்படுத்துகிறது.
3. தைராக்சின் – எலும்பு மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவுகிறது.
4. பாராதார்மோன் – இரத்தத்தின் கால்சியத்தை நிலைநிறுத்துகிறது.
5. புரோலாக்டின் – பால் சுரப்பியில், பால் சுரத்தலை ஊக்குவிக்கிறது.
6. ஆக்ஸிடோசின் – குழந்தை பிறப்பின்போது கருப்பையை சுருங்கச் செய்கிறது.
7. புரோஜெஸ்டிரான் – கருப்பை வளர்ச்சிக்கு கர்ப்ப காலம் முழுவதும் பயன்படுகிறது.
8. ஈஸ்ட்ரோஜன் – பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் பங்கேற்கிறது. பெண்மைத் தன்மைக்கு காரணமாகிறது.
9. டெஸ்ட்ரோஜன் – ஆணின் விந்து உற்பத்திக்குப் பயன்படுகிறது; ஆணின் விடலைப் பருவ மாற்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

Via-நலம், நலம் அறிய ஆவல்.

"காமராஜர் ஒரு சகாப்தம்"

மணக்கால் அய்யம்பேட்டை | 1:15 AM | Best Blogger Tips
"காமராஜர் ஒரு சகாப்தம்"

காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார்.

எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம்,

"ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார்.

கலெக்டர் வந்தவுடன், "இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.

தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார்.

அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர்?. அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார்.

கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.

வெஜிடபிள் சட்னி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 AM | Best Blogger Tips
வெஜிடபிள் சட்னி  
தேவையான பொருட்கள்:

1.ஏதாவதொரு காய்கறி - 100 கிராம்
2.மிளகாய்வத்தல் - 4
3. பூண்டு - 3 பல்
4. தக்காளி - 1
5. புளி - 2 கொட்டை
6. புதினா - 20 இலைகள்
7. எண்ணெய் ‍ 2 தேக்க‌ர‌ண்டி
8. சின்ன வெங்காயம் - 12
9. தேங்காய் - சிறு துண்டு
10. உப்பு -‍ தேவையான‌ அள‌வு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் வெங்காயம், காய், தக்காளி, புதினா ஆகியவற்றை வதக்கி இதனுடன் பூண்டு, உப்பு, தேங்காய், வத்தலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரைத்ததைக் கொட்டி கடுகு, உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
தேவையான பொருட்கள்:

1.ஏதாவதொரு காய்கறி - 100 கிராம்
2.மிளகாய்வத்தல் - 4
3. பூண்டு - 3 பல்
4. தக்காளி - 1
5. புளி - 2 கொட்டை
6. புதினா - 20 இலைகள்
7. எண்ணெய் ‍ 2 தேக்க‌ர‌ண்டி
8. சின்ன வெங்காயம் - 12
9. தேங்காய் - சிறு துண்டு
10. உப்பு -‍ தேவையான‌ அள‌வு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் வெங்காயம், காய், தக்காளி, புதினா ஆகியவற்றை வதக்கி இதனுடன் பூண்டு, உப்பு, தேங்காய், வத்தலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரைத்ததைக் கொட்டி கடுகு, உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

Via-நலம், நலம் அறிய ஆவல்.

தன்னம்பிக்கை கதை !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:09 AM | Best Blogger Tips
தன்னம்பிக்கை கதை:

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

Via ரிலாக்ஸ் ப்ளீஸ் 

திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 AM | Best Blogger Tips
திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி?

1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம்.

2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர் இருந்தால் நன்று. நிறைய பேர் சென்றால் பெண் வீட்டாருக்கும் ஏற்பாடு செய்வது சிரமம். அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன்னரே நிறைய வரன்கள் வந்து சென்றிருந்தால், நாம் படை சூழப் போவது அவர்களுக்குத் தர்ம சங்கடமான நிலையைத் தரும். பெண் நிச்சயமானால், அடுத்த முறை இன்னும் நிறைய பேரை அழைத்துச் சென்று முறைப்படி பேசும் சூழல் வரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களை வைத்துச் சற்று கலகலப்பாக பேச்சை வளர்க்கலாம். வாயாடிப் பிள்ளைகள் விளையாட்டுத் தனமாகப் பேசி நமது மானத்தை வாங்கலாம் என்பதால் இதில் சற்று கவனம் தேவை 

3. பை நிறைய பூ, பழம், இனிப்புகள் வாங்கிச் செல்லலாம். நாம் எவ்வளவு வாங்கிச் செல்கிறோம் என்பதை வைத்து நமது தாராள குணத்தை அளக்கக் கூடும்.

4. கோயில், உணவகம் போன்ற இடங்களிலும் பெற்றோர்கள் உடன் மட்டும் சென்று பார்க்கலாம். இதில் சற்று இறுக்கம் குறைவாக இருக்கும். எனினும், எல்லா குடும்பங்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கே சென்று பார்ப்பதால், நாமும் அவர்களின் பழக்க வழக்கங்கள், உறவு முறைகளை அறிந்து கொள்ள முடியும்.

5. பெண் பார்க்கப் போகும் அன்று நன்கு தூங்கி எழுந்து, சவரம் செய்து, நன்றாகத் துவைத்துத் தேய்த்த ஆடையை அணிந்து செல்லுங்கள். விரல் நகங்களை வெட்டிச் சென்றால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்று எனக்கு ஒரு தோழி சொன்னாள்  
தேவைப்பட்டால், வாடகைக்காவது ஒரு வண்டி எடுத்து அலைச்சல், உளைச்சல் இல்லாமல் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள்.

6. தனியாக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் முன்னிலையிலாவது பெண்ணிடம் ஏதாவது பேச்சு கொடுக்க முயலுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பெற்றவர்கள் முந்திக் கொண்டு பதில் சொன்னாலும், விடாமல் பெண்ணிடமே பேச்சு கொடுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து நேராகப் பார்த்துப் பேசுங்கள். வள வள என்று பேசாமல் சுருக்கமாக, தெளிவாக பேசுவது நன்று. ஒரு சில நிமிடங்கள் பேசினாலும், பெண்ணைப் பற்றிய ஏதாவது ஒரு புரிதல் கிட்டும்.

7. பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், ஆமாம் / இல்லை என்று பட்டெனச் சொல்லி விடாதீர்கள். உங்கள் பெற்றோர், பெரியவர்களிடம் பேசி விட்டுச் சொல்வதாகச் சொல்லுங்கள். வாக்கு கொடுத்து மீறுவது போல் ஆனால் சிக்கலாகும். நமக்குப் பிடிக்கும் பெண் ஊகிக்கவே முடியாத காரணங்களுக்காக நமது பெற்றோருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

8. தரகர் மூலம் ஏற்பாடு ஆன பெண் என்றால், இயன்ற அளவு தரகரை கழற்றி விட்டு விட்டுச் செல்லவும். இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பேசி குழப்புவதில் தரகர்கள் வல்லவர்கள். எந்த அளவுக்கு நேரடியாகப் பெண் வீட்டாரிடம் பேசுகிறோமோ அந்த அளவு நல்லது.

9. பணம், வரதட்சணை முதலிய தீவிரமான கேள்விகளைத் தவிருங்கள். இது ஒரு அறிமுக சந்திப்பே.

10. ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்காதீர்கள். தேநீர், இனிப்புகள் மட்டும் சாப்பிடுங்கள். பெண் நிச்சயமான பிறகே விருந்து சாப்பிடுவது பல ஊர்களிலும் உள்ள முறை.

- Thanks/-Bloggers

பூண்டு ஊறுகாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:48 AM | Best Blogger Tips

பூண்டு ஊறுகாய்  

தேவையான பொருட்கள்

பூண்டு – 500 கிராம்
கடுகு - ஒரு மேசைக்கரண்டி 
பெருங்காயதூள் - ஒரு மேசைக்கரண்டி 
எலுமிச்சைபழம் - 10 
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி 
மஞ்சள்தூள் - ஒரு சிட்டுகை 
காய்ந்த மிளகாய்த் தூள் - 150 கிராம் 
நல்லெண்ணெய் - 200 கிராம் 
உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை
பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைப் பழத்தை நறுக்கி சாறுபிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் போட்டு, அதனுடன் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். பூண்டு வதங்கி பொன்னிறமாக வந்தவுடன் உப்பு சேர்க்க வேண்டும். 

பூண்டு நன்கு வதங்கியவுடன் எலுமிச்சைப்பழச் சாற்றை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். சாறு வற்றியவுடன் மிளகாய் தூளை கொட்டி கிளற வேண்டும். நன்றாக கிளறியபின்பு இறக்கி வைக்க வேண்டும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

தேவையான பொருட்கள்

பூண்டு – 500 கிராம்
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயதூள் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைபழம் - 10
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டுகை
காய்ந்த மிளகாய்த் தூள் - 150 கிராம்
நல்லெண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைப் பழத்தை நறுக்கி சாறுபிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் போட்டு, அதனுடன் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். பூண்டு வதங்கி பொன்னிறமாக வந்தவுடன் உப்பு சேர்க்க வேண்டும்.

பூண்டு நன்கு வதங்கியவுடன் எலுமிச்சைப்பழச் சாற்றை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். சாறு வற்றியவுடன் மிளகாய் தூளை கொட்டி கிளற வேண்டும். நன்றாக கிளறியபின்பு இறக்கி வைக்க வேண்டும்.

Via-நலம், நலம் அறிய ஆவல்.

நேர்மையான சிந்தனை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 AM | Best Blogger Tips

களை எடுப்பதிலிருந்து கணினி இயக்குவது வரை, கழிவறை சுத்தம் செய்வதிலிருந்து ஆவண அறையை அலங்கரிப்பது வரை எல்லா பணிகளுமே தெய்வீகப் பணிகள் தாம்.

‘இன்னும் இனிமையாக; இன்னும் சிறப்பாக; இன்னும் மேன்மையாகச் செய்ய வேண்டும்’ என்ற உந்துதலில் தொடர்ந்து பணியாற்றுபவனே பணிக்குப் பெருமை சேர்க்கிறான். அப்படிப்பட்டவர்கள் வேறு பணிக்குச் செல்ல நேரிடின் ஏற்கனவே இருந்த பணி ஏற்றமடைகிறது.

வான்கா ஓர் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோது அவருடைய நண்பர் அங்கு வந்தார். ‘இதுவரை நீங்கள் வரைந்த ஓவியங்களிலேயே மிகச்சிறந்த ஓவியம் எது?’ என்றார். ‘இப்போது நான் வரைந்து கொண்டிருக்கிறேனே அதுதான் இதுவரை நான் வரைந்தவற்றிலேயே மிகவும் சிறந்தது’ என்றார் வான்கா.

மூன்று மாதம் கழித்து மறுபடியும் நண்பர் வந்தார். ‘போனமுறை நான் வந்தபோது உங்கள் ஓவியங்களிலேயே மிகச்சிறந்த ஓவியத்தைத் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே, அதை நான் பார்க்க முடியுமா? என்று கேட்டார் ஆவலாய்.

‘இப்போது நான் வரைந்து கொண்டிருக்கிறேனே அதுவே என்னுடைய மகத்தான ஓவியம். அடுத்த ஓவியம் இதைக்காட்டிலும் மகத்தானதாக இருக்கும். இப்படித்தான்...’ என்றார்.

ஏற்கனவே சிகரத்தைத் தொட்டுவிட்டதாக நினைப்பவன் பள்ளத்தாக்கிலேயே பின்தங்கிவிடுவான். சிகரம் என்பது முன்பு இருந்ததிலும் உயர்ந்து நிற்பது தான். நம் பணியை மேம்படுத்த ஒரு வழியுண்டு. நாம் நெய்கிற ஆடையை நம் பிரியமானவர்களே அணியப் போவதாக எண்ணி நேசத்துடன் நெய்தால், பருத்தி கூட பட்டுப்போல பளபளக்கும். இல்லாவிட்டால் பட்டுகூட பழசுபோல பல்லிளிக்கும். நம் மகளே எழுதப்போவதாக எண்ணிப் பேனாவைச் செய்தால் அது தாள்களை முத்தமிடும்போது முத்துமுத்தாகக் கையெழுத்து முகிழ்க்கும்.

நேர்மை என்பது அரசுப்பணிகளில் மட்டுமல்ல அனைத்துப் பணிகளிலுமே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியக் கோட்பாடு.

எனக்குத் தெரிந்தவர் தன் வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்துக்குப் போய்விட்டார். ஆனாலும் வருடம் ஒருமுறை வந்து விற்ற வீட்டைப் பார்ப்பார். அவரிடம் கேட்டேன் ‘இன்னுமா இந்த வீட்டின் மீது பிடிப்பு?’. வீட்டின் மீது பிடிப்பு இல்லை. நான் நட்ட மரங்கள் நன்றாக இருக்கின்றனவா என்று பார்த்து சுகம் காண வந்து போகிறேன். ஏனென்றால் உயிரற்ற வீட்டைக் காட்டிலும் உயிருள்ள மரங்கள் உன்னதமானவை என்பதே என்னுடைய அனுமானம்.

இருத்தலுடன் தொடர்புள்ளவர்கள், தாங்கள் பணி செய்த இடத்திலிருந்து நீங்கிய பின்பும், தாங்கள் செய்த பணி தொடர வேண்டுமென்று தொடர்ந்து சிந்திப்பார்கள்.
 
Via Nammabook

பெண் - ஒரு தெய்வம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:42 AM | Best Blogger Tips
நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான் கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான் இறைவன். 

இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன் வேண்டுதலை இறைவனிடம் கூறினான். 

எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பின் குழந்தை வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான். இறைவனும் அவனின் வேண்டுகோளை நிறைவேற்றினான். உங்களது வேண்டுகோள் என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம் வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன். 

சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின் கனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை வைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள வேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு அதிர்ந்து போனான் அவன். 

பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என் தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று கதறினான். 

" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும் "

உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி பாரமானது ? 

நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ?

"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது " என்று புத்தியில் உறைக்கும்படி சொன்னான் இறைவன்.

"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது " என்று புத்தியில் உறைக்கும்படி சொன்னான் இறைவன்

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:37 AM | Best Blogger Tips
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். 

அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர்
நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள். 

- ஃபீனிக்ஸ் பாலா

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]

தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்! பாண்டித்துரைத் தேவர்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 AM | Best Blogger Tips

தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்!
 பாண்டித்துரைத் தேவர்!!!

""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு ,

திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.

""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். 

பாண்டித்துரை தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.

முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர்.

இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் "தீ"யிட்டுக் கொளுத்தினார் . " - இது வரலாறு.

தவறாக தமிழ் வரலாற்றை எழுத நினைத்தால்.. பாண்டித்துரைத் தேவர் வழி நடப்போம்!""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு ,

திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.

""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார்.

பாண்டித்துரை தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.

முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர்.

இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் "தீ"யிட்டுக் கொளுத்தினார் . " - இது வரலாறு.

தவறாக தமிழ் வரலாற்றை எழுத நினைத்தால்.. பாண்டித்துரைத் தேவர் வழி நடப்போம்!

மாவிலை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 AM | Best Blogger Tips
வீட்டின் முன் வாசலில் இப்போ எல்லாம் பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது...அதாவது அதை அலங்காரப்பொருளாக தான் மக்கள் நினைக்கிறார்கள்...மாவிலை எதற்கு கட்டுகிறோம் தெரியுமா...மாவிலையை வீட்டின் வாசலில் கட்டும்போது அந்த இடம் குளிர்ச்சி அடைகிறது விசேஷத்தின் போது நம் வீட்டுக்குள் நுழையும் உறவினர்கள்,நண்பர்கள் இதை புத்துணர்ச்சியாக உணர முடியும்...நிறைய பேர் விசேஷத்தில் கூடும்போது காற்று மாசடையும்..அதை சுத்தப்படுத்தும் கிருமி நாசினியாகவும் மாவிலை திகழ்கிறது...அப்புறம் மா இலை குருவின் அம்சம்..குரு பார்க்க கோடி நன்மை அல்லவா...இன்னும் ஒரு காரணம் மாவிலை பசுமையாக வாசலில் கட்டி தொங்க விடும்போது பார்க்க மங்களகரமாகவும்,பசுமையாகவும் இருக்கே..வீடே ஒரு களையா இருக்குமே அதற்காகவும்தான்...!!!

Via Sathishkumar Jothidar