#நீலகண்ட_பிரம்மச்சாரி (04/12/1889 - 04/03/1978)
தமிழகத்தில் #பிராமணர்களை எதிர்த்து கோஷம் போட்டு பழகி விட்டதால் இம்மாதிரியான தேசபக்தர்களை யாருக்கும் தெரியாமல் செய்து விட்டனர்,
இவர் சீர்காழியில் உள்ள
1911ஆம ஆண்டு மணியாண்சி ரயிர் நிலையத்தில் நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக 7.1/2வருடம் தண்டனை பெற்ற போது தான் இவர் பெயர் பிரபலமானது....
விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், தமிழகத்தில் 20,000 போராளிகளை ஒன்று திரட்டி #பாரத_மாதா_சங்கம் என்ற புரட்சி இயக்த்தை தோற்றுவித்து போராடியவர்...
வாழ்வின் பெரும் பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மற்றும் மியான்மர் நாட்டுச்சிறைகளில் கழித்தவர்...
சிறையில் இருக்கும் போது அவருக்கு வயது 21 தான்...
சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறார்.
நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம்....,,அதற்கு கிடைத்ததோ பசியும் பட்டினியும் தான்...பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு #இராப்பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறார்.
பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டது என்று நினைத்த அவர் அதையும் நிறுத்தி விட்டார் .விளைவு பல நாள் பட்டினி
ஒரு நாள் பசி பொறுக்கமுடியாமல் திருவல்லிக்கேணியில் தங்கி இருந்த தனது நண்பர் பாரதியாரை பார்க்க வருகிறார்,
பசியால் வாடிப் போன நீல கண்டனை பாரதியாருக்கு அடையாளம் தெரியவில்லை
என்று சொன்னவுடன்.
டேய் நீலகண்டா என்னடா இது கோலம் என்று அவரைகட்டி அனைத்துக் கொண்டார்.
பாரதி எனக்கு ரொம்ப பசிக்கிறது
ஒரு நாலனா( 25பைசா) கொடேன் சாப்பிட்டு நான்கு நாளாச்சு என்றார்.இதை கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார் அப்போது
பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிக்கரமான பாடல் தான்
#ஜகத்தினை_அழித்திடுவோம் என்றார்....
வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில், தனது 88ஆவது வயதில் 4 மார்ச் 1978இல் காலமானவர்.