நாகைக்கும் சிவராத்திரிக்கும் உண்டான

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 PM | Best Blogger Tips

 


🌷 அனைவருக்கும் #மஹா_சிவராத்திரி நல்
வாழ்த்துக்கள்
. இப்பதிவில் நாகைக்கும் சிவராத்திரிக்கும் உண்டான தொடர்பும் , நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களை பற்றி பார்ப்போம்.

🌷 நாகர்களின் தலைவனான ஆதிசேஷன் தனது வலிமை இறந்த சமயத்தில் அதனை மீண்டும் பெற மகா சிவராத்திரி நன்னாளில் இரவு முழுவதும் நான்கு காலங்களில் ஒவ்வொரு திருத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றான் என்பது ஐதீகம்.

1. அதன்படி குடந்தை கீழ்கோட்டம் எனும் கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில் முதல் காலத்திலும்,

2. திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும்,

3. திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும்,

4. இறுதியாக #நாகை காரோணத்தில், நான்காவது காலத்தில் ஈசனை வழிபட்டு, தரிசனம் பெற்றான். எனவே இவ்வூருக்கு நாகை என பெயர் பெற்றது.

🌷 மஹா சிவராத்திரி நன் நாளில் ஓர் குரங்கு வில்வ மரத்தில் ஏறி அதன் இலைகளை கீழ் இருந்த லிங்கத்தின் மீது அர்ச்சனை செய்ததன் பலனாய் மறுபிறவியில் #முசுகுந்த_சக்கரவர்த்தி ஆக பிறக்க நேரிட்டது. முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனுக்கு உதவியதன் பலனாய் தேவர்கள் பூஜித விடங்க திராகராஜரை பரிசாக பெற்றான். அவற்றை முசுகுந்த சக்கரவர்த்தி சப்த விடங்க ஸ்தலமாக பிரதிஷ்டை செய்தார். அவற்றில் நாகை சுந்தர விடங்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

🌷 இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவ ராஜதானி ஷேத்திரம் எனப்போற்றப்படும் நாகையில் அமைந்துள்ளன பன்னிரு சிவாலயங்களை சிவராத்திரி நாளில் ஒருசேர தரிசனம் செய்வது நமது பாரத தேசத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கங்களை தரிசிப்பதற்கு இணையாக கருதப்படுகிறது.

அவை முறையே பின்வருமாறு.

1. #நாகைக்காரோணம் , காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)

2. #அமரரேந்திரேஸ்வரம் , அமரநந்தீஸ்வரர் கோயில்
(நீலா கீழ வீதி தேரடி அருகில்)

3. #சுந்தரேஸ்வரம் , சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)

4. #ஆதிகாயாரோகணம் , சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி. கட்டடத்தின் எதிர் தெரு)

5. #நாகேஷ்வரம் , நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி)

6. #அழகேசம் , அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி)

7. #மத்யபுரீஸ்வரம் , நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி பின்புறம்)

8. #விஸ்வநாதம் , வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)

9. #அமிர்தகடேஸ்வரம் , கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)

10. #கயிலாசம் , மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)

காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)

12. #அகஸ்தீஸ்வரம் , அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)

🌷 குறிப்பு : இந்த சிவாலயங்களில் ஒன்றாக விளங்கிய #கார்முகிஸ்வரர் திருக்கோயில் சிதிலமடைந்த காரணத்தினால் அந்த மூர்த்தி நாகை பெரியகோயிலில் முதல் பிரகார திருச்சுற்றில் வைக்கப்பட்டு, பின்னாளில் அதற்கு பதிலாக அக்கரை குளம் சிவன் கோயில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

பன்னிரு சிவாலயங்கள் கூகுள் மேப் வழிகாட்டி (Google Maps) https://www.google.com/maps/d/edit...
சிவராத்திரி நன் நாளில் பன்னிரு சிவாலயங்களை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். நன்றி சிவார்பணம்😊🕉️🙏

நன்றி இணையம்